~~ROMEO~~

Everyday Starts with Happy :)

Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

படித்து முடித்த புத்தகம் - நான் சந்தித்த மரணங்கள்

என்னை ரொம்ப பாதித்த ஒரு மரணம் என்றால் அது எனது தம்பி மரணம் தான். எனது சித்தப்பாவின் மகன், அவன் மறைந்த போது வயது 20க்குள் தான் இருக்கும். ரொம்ப அமைதியான சுபாவம் கொண்டவன் யாரிடமும் அதிகம் பேசமாட்டான். ஒல்லியான உடல்வாகு கொண்டவன். அவனும் எனக்கும் சிறிய கைகலப்பு நடந்தது அது ஒரு சின்ன விடயம் தான், அப்பொழுது நானும் கொஞ்சம் அவரசப்பட்டேன், அவன் அப்போது சிறியவன் அதனால் அவனுக்கு அவன் செய்யும் காரியம் பெரிதாகப்படவில்லை, என்னை ஒருமையில் அழைத்தால் கொஞ்சம் கடுமையாக நான் நடந்து கொள்ளவேண்டியது ஆயிற்று. அந்த சம்பவம் நடந்த சிறிது நாட்களுக்கு பிறகு அவனிடம் சகஜமாக பேச ஆரமித்தேன். நான் கோவையில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்த சமயம் ஒரு நாள் எனது சித்தப்பா கைபேசியில் அழைத்து அவனின் மறைவு பற்றி சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. நட்ட நடு சாலையில் அழுதேன், இதற்கு முன்னால் யாருடைய மரணத்துக்கும் இந்த மாதிரி அழுதது இல்லை. அடித்து பிடித்து அவனை வைத்து இருந்த பிணவறை சென்றேன் ஒரு மூட்டையில் அவனை கட்டி வைத்து இருந்தார்கள். ரொம்ப கொடுமையான நிகழ்வு அது, எனது மனதை விட்டு நீங்காத வடுவாங்க அமைந்துவிட்ட சம்பவம். இப்போது நினைத்தாலும் மனதில் ஏதோ ஒரு பாரம் அழுத்துவது போல இருக்கும்.


இதே மாதிரி நம்மில் நிறைய மனிதர்கள் தங்களில் வாழ்கையில் சந்தித்த ஒரு மரணத்தையே தாங்க முடியாமல் , மறக்க முடியாமல் இருக்கிறோம். ஆனால் தனது வாழ்கையில் பிறந்தது முதல் இப்பொழுது வரை தான் நேசித்த மனிதர்களின் மரணங்களைஅருகில் இருந்து பார்த்தே வாழ்ந்துகொண்டு இருக்கிறார் மரண கானா விஜி.





நான் சந்தித்த மரணங்கள் புத்தகத்தில் மரண கானா விஜி தனது வாழ்கையில் சந்தித்த மரணங்களை பற்றி கூற கார்கோ அதை தொகுத்துள்ளார்.

அவரின் வாழ்க்கை எங்கு இருந்து தொடங்கியது, எப்படி நண்பர்கள் சேர்ந்தார்கள், மெரினா பீச்சில் நடக்கும் கொடுமைகள், சுடுகாடு வாழ்க்கை, காதல், காமம், பாசம், பணம், கானா என்று அவரின் வாழ்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை கொண்டது இந்த புத்தகம்.

புத்தம் வாங்கி இதுவரை 5 முறைக்கு மேல் படித்துவிட்டேன், மரணங்களை வெகு அருகில் இருந்து பார்த்தது போல இருக்கிறது ஒவ்வொரு சம்பவமும். ஒரு பிரிவு என்பது நம்மை எப்படி எல்லாம் துன்பப்படுத்துமோ அதே போன்று தான் இந்த புத்தகத்தை படிக்கும் போது ஏற்படுகிறது.

எனக்கு தெரிந்து தமிழில் மரணங்களை மட்டுமே சொல்லிய ஒரு புத்தகம் இதுவரை வந்தது இல்லை. ரொம்ப சுவாரசியம் எல்லாம் இல்லை, ஆனால் படிக்கும் போது ஏதோ நம்மில் ஒருவர் இறந்தால் ஏற்படும் ஒருவித வெறுமையை போன்று மனதில் சூழ்ந்துகொள்கிறது.

புத்தகத்தில் சில குறைகள் இருப்பது என்னவோ உண்மை ,
மச்சான் மச்சான் என்று நிறைய இடத்தில வருவது, ஒரு இடத்தில் தான் செய்த தப்புக்கு மக்களிடம் அவரே தண்டனை தர சொல்லி கேட்ப்பது, இப்படி மிக சில விஷயங்களை தவிர்த்து இருந்தால் நன்றாக இருக்கும்.




புத்தகம் கிடைக்கும் இடம்

நான் சந்தித்த மரணங்கள்
மரண கானா விஜி
தொகுப்பு : கார்க்கோ
விலை : ரூ. 40/-
கருப்பு பிரதிகள்
பி - 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை,
சென்னை - 600 005
தொலைபேசி : 94442 72500
மின்னஞ்சல்: karuppu2004@rediffmail.com



------------------------------------------------------------------------------------


(பி. கு): இந்த புத்தகத்திற்கு பிறகு வேறு ஒரு புத்தகம் படித்தேன் .

என் வாழ்கையில் இந்த மாதிரி ஒரு புத்தகத்தை படித்து அதனால் சிறிது நேரத்திற்கு எல்லாம் என்னை சொர்கத்திற்க்கு அழைத்து சென்றது ஏதும் இல்லை. (பலான புக் இல்லீங்கோ)

அந்த வெகு சூடான புத்தகத்தை பற்றி அடுத்த பதிவில். .
with love
Romeo ;)

ஆயிரத்தில் ஒருவன் படமும் கேபிள் சங்கரின் கதையும்..




பதிவர் சங்கருடன் நேற்று ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தேன். ரீமா சென் மற்றும் பார்த்திபன் நடிப்பு சூப்பர். பார்த்திபன் ஓபனிங் சீன் செம ஹாட்.. கார்த்திக்கு கூட அந்த மாதிரி இல்ல. .. தூய தமிழ் பேசப்படும் இரண்டாம் பாதி அமர்க்களம். அதும் ரீமா சென் நடிப்பு சிம்ப்ளி சூப்பர். படத்தில் சில சில காட்சிகளை பார்த்து கண்கலங்கியது என்னவோ நிஜம். படத்தின் இறுதி கட்டம் தான் ரொம்ப கொடுமையாக இருக்கிறது. கண்டிப்பாக 15 வயதுக்கு மேற்ப்பட்ட நபர்கள் தான் படத்தை பார்க்கணும்.



படத்தின் ஸ்டார் என்றால் டைரக்டர் செல்வா, நடிகர் பார்த்திபன், நடிகை ரீமாசென்,
ஆர்ட் டைரக்டர் சந்தானம்,
ஆடை வடிவமைப்பாளர் -
இரும் அலி,
இசைஅமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் ,
ஒளிபதிவாளர் - ராம்ஜி ..

படத்தை பற்றி ஏற்கனவே நிறைய விமர்சங்கள் வந்துள்ளது. நான் பார்த்தவரை தமிழில் இந்த மாதிரியான பாண்டஸி படம் எடுப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும், அதும் சோழ மன்னர்கள் பற்றி என்றால் நிறைய மெனக்கெட வேண்டும். இவர்களின் உழைப்பு ஒவ்வொரு பிரேமில் தெரிகிறது.

Hatts Off to Selva and Team .

-------------------------------------------------------------------------
படத்தை பார்த்துவிட்டு கேபிள் சங்கருடன் பேசியபோது அவரின் கருத்துகளும் எனது கருத்துகளும் வேறு வேறு மாதிரி இருந்தது (இருக்கிறது) , ஆனால் இந்த படத்தை இப்படி கூட எடுக்கலாம் என்று ஒரு கதை சொன்னார்,



படத்தின் முதல் 10 நிமிடங்கள் அதே போன்று இருக்கும், ரீமா சென் தொல்பொருள் ஆராய்சியாளர் அவருக்கு உதவ கார்த்திக் வருகிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் மலர்கிறது, ரொம்ப உறுதியான காதலில் இருக்கும் இருவரும் சோழர்கள் வாழும் அந்த இடத்திற்கு வருகிறார்கள். பழங்கால மண்டபங்கள் இருக்கும் இடத்திருக்கு வரும் போது கேட்கும் அந்த வீநோத ஒலி இருவரையும் பலநூறு வருடங்கள் பின்னோக்கி அழைத்து செல்கிறது. கார்த்திக் சோழ வம்சத்தில் பிறந்தவன் என்கிற அடையாளங்கள் காட்டபடுகிறது , ரீமா பாண்டிய வம்சத்தில் பிறந்தவள் போல அடையாளம் காட்டப்படுகிறது. இப்பொது பாண்டிய மற்றும் சோழ வம்சத்தில் பிறந்த இந்த காதலர்கள் எதிரிகள் ஆகிறார்கள். ரீமா தனது ஆட்களை கொண்டு கார்த்திக்கை எதிர்க்கிறார். கார்த்திக் சோழ வம்சத்தில் இப்போது இருக்கும் சிலருடன் எதிர்க்கிறார். ரீமாவின் ஆசை எல்லாம் அந்த சிலையின் மீதுதான் இருக்கிறது, கடைசி கட்டத்தில் இவர்கள் சண்டையிட்டு இருக்கும் இடம் வெடித்து சிதறுகிறது. சோழ வம்சத்தை சார்ந்த இளவரசன் ஒருவனை கார்த்திக் காப்பாற்றுகிறார். ரீமாவிற்கு அந்த சிலை கிடைகிறது. இருவரும் சகஜ நிலைமைக்கு திரும்புகிறார்கள். சேர்ந்தே இந்திய வந்தடைகிறார்கள்.

- Story by Cablesankar.





கதை எப்படி ?? கருத்துகள் எல்லாம் கேபிள் சங்கருக்கே.


With Love
Romeo ;)

ஆப் சென்சுரி..... :) , Paa மற்றும் ஆரியா - 2




அட கொக்காக மக்கா , நானும் 50 பதிவ எழுதிட்டேனா என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. அப்படி இப்படின்னு ஏதும் உருப்படியா எழுதல ஏதோ எழுதி இருக்கிறேன் அவ்வளவு தான் இவ்வளவு நாட்களாக என்னோட பதிவை படிச்சி பின்னுடம் போட்டு என்னை வாழ வைத்துகொண்டு இருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி நன்றி சாமியோ...

---------------------------------------------


நேற்று "பா" படத்தை பார்த்தேன் என்ன ஒரு நக்கல் , நையாண்டி, நடிப்பு என்று படம் மனசை அள்ளுது. எந்த இடத்திலையும் படம் சோர்வு அடையாமல் செல்கிறது. ஆரோ என்கிற கதாபாத்திரத்தில் அமிதாப் நடிப்பு அருமை. படத்தின் ஆரம்பத்தில் ஆரோவை அமிதாப் எப்போதும் போல நடித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தானே பார்த்தேன், சிறிது நேரத்தில் அமிதாப் மறந்து போக வைத்துவிடுகிறார் அவரின் நடிப்பால். படத்திற்கு ஏன் "பா" என்று வைத்தார்கள் என்று தெரியவில்லை, "மா" என்று வைத்து இருக்கலாம் , அபிஷேக்விட வித்யாபாலன் தான் ஆரோவை எல்லா வகையிலும் தாங்குகிறார். இளையராஜா இசை மென்மையாக எல்லா இடத்திலையும் மனதை ஆட்கொள்கிறது, விக்ரமன் படங்களில் ஒரே ஒரு தீம் மியூசிக் வைத்து எல்லா இடத்திலை அதையே போட்டு வைப்பார். அதே போன்று தான் இந்த படத்தின் தீம் மியூசிக் எல்லா இடங்களிலயும் வருகிறது. சோகம் என்றாலும் சரி, சந்தோசம் என்றாலும் சரி.

அமிதாப் நிறைய அவார்ட் வாங்க போறார் என்பது நிச்சயம்.

--------------------------------------------------------

ஆர்யா - 2 கேபிளார் விமர்சனத்தை படித்து பார்த்து கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று பார்த்த படம். சும்மா சொல்ல கூடாது படம் டாப் கிளாஸ்.

அல்லு அரவிந்த் நடிப்பு சூப்பர். எல்லாவற்றையும் செய்து விட்டு ஒண்ணுமே செய்யாததை போல இருக்கும் உலகமாக கேடி. காஜல் நடிப்பு கூட சூப்பர், திடிர் திடிர் என்று எக்ஸ்பிரஷன் மாத்தி நம்மை ஜொள்ளு விட வைக்கிறார். (ஹ்ம்ம் ரொம்ப அழகா இருக்கா பா )

படத்தை தூக்கி நிறுத்துவது திரைக்கதை தான். அடுத்து என்ன சீன் வர போகுதுன்னு நம்மளால கணிக்கவே முடியாது அந்த அளவுக்கு டக்கு டக்குன்னு மாறிட்டே இருக்கு கதையின் ஓடம்.

கண்டிப்பாக படத்தை பாருங்க உங்களுக்கு இந்த கேடியை பிடிக்கும் ..

My Sassy Girl - 2003 & 2008




அழகான ராட்சஸி என்று தமிழ்ல் பெயர் வைத்து இந்த படத்தை யாராவது ரீமேக் செய்து வெளியிட்டால் படம் பிச்சிக்கிட்டு ஓடும்.

ரொமான்டிக் காமெடி படங்களை பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது. ரொமான்டிக் படங்களில் காமெடி என்பது ஒரு இலை மாதிரி ஒட்டி கொண்டு வரும்.

ஆனால் இந்த படத்தில் காமெடிக்குள் தான் ரொமான்டிக் இருக்கிறது.

My Sassy Girl கொரியா மற்றும் ஆங்கிலதில் வெளிவந்த அருமையான படம்.

நான் முதலில் பார்த்தது My Sassy Girl - 2008 ஆங்கில பதிப்பை.




கதையின் ஓட்டம் நம்மை எங்கும் செல்ல விடாமல் கட்டி போட்டு விட்டது. ரொம்ப ரசனையான திரைக்கதை , சிரித்து சிரித்து ரசித்து ரசித்து பார்த்தேன்.

ஆங்கில பதிப்பை பார்த்த பிறகு கொரியன் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்கிற வெறி உண்மையில் எனக்கு வந்தது.


எனது ராசி அடுத்த நாளே அந்த படத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன். You Tube மூலமாக .

My Sassy Girl - 2003 (Korea)


உங்கள் காதலி என்னவெல்லாம் செய்தால் ரசிப்பிர்களோ அதை தான் கதையின் நாயகன் செய்கிறான். என்ன ஒரே வித்தியாசம் இதில் அவள் செய்வது இவனை இம்சை படுத்துவது தான்.

எல்லாத்துக்கும் ஒரு அளவு உண்டு அதை தாண்டும் போது தான் நாம் கோவப்படுகிறோம். ஆனால் இவனோ இவள் செய்யும் எல்லாவற்றையும் ரசிக்கிறான்.

இவளால் போலீஸ்யிடம் மாட்டிகொள்வது, பொது இடத்தில அவளின் ஹீல்ஸ் செப்பல் போட்டு கொண்டு நடப்பது, அவள் ரசிக்கும் அல்லது அவள் எதை எல்லாம் செய்ய வேண்டும் என்கிறாளோ அதை எல்லாம் மறுப்பு சொல்லாமல் செய்வது. அவள் அடிக்கும் அடிகளை பெற்றுக்கொண்டு அவன் காட்டும் முகப்பாவனைகள் எல்லாம் அவர்ளுடன் சேர்ந்து நாமும் ரசிக்கலாம்.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ரயில் வண்டியுள் ஒரு சிறுவன் கோட்டை கிழித்து கொண்டு இருப்பான். இவள் ஒரு போட்டி வைப்பாள் , அதில் அவன் தோற்று அவளிடம் அடிவாங்கும் காட்சி செம சிரிப்பை வர வைக்கிறது.

படத்தில் நடித்து இருக்கிற பெண்ணைவிட அந்த பையன் தான் சூப்பர். வீட்டில் அடிவாங்கும் போதும் சரி , அவளிடம் அடிவாங்கும் போதும் சரி அவன் காட்டும் முகப்பாவனை சூப்பர் ...

கொரியா படத்தில் இருக்கும் ரசனை , ஆங்கில படத்தில் இல்லை என்றே சொல்லலாம். ஆங்கில படத்துக்காக பலது மாற்ற பட்டு இருக்கிறது.

ஆங்கில படத்தில் ஹீரோ இமேஜ் கேட்டு விடாமல் இருக்கும். ஆனால் கொரியன் படத்தில் அது எல்லாம் இருக்காது, இயல்பான நடிப்பின் மூலம் அழகா தெரிகிறது .

----------------------------------------------------------------
படத்தில் ஒரு காட்சியை பார்த்த போது இதை எங்கையோ பார்த்து இருக்கேன் என்று யோசித்தேன்.

அட அது நாம சிவா மனசுல சக்தி படத்துல வர சீன்.

கொய்யால இப்படி எல்லாம் சுட்டு தான் தமிழ் சினிமா வளந்துட்டு இருக்கு ..

படத்தை பார்க்காதவர்கள் அட்லீஸ்ட் You Tube வெப்சைட்ல பார்த்துடுங்க.
Torrentல சரியா டவுன்லோட் ஆகவில்லை.



மோதி விளையாடு - திரைவிமர்சனம்


இந்தியாவில் இருக்கும் மிக பெரிய பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் கலாபவன் மணி. இவரது மகன் வினய். பணம் பற்றி எந்த ஒரு அறியாமையும் இல்லாமல் அது எதோ ஒரு பேப்பர் மாதுரி செலவு செய்யும் மேல் தட்டு வர்கத்து பையன் . இவரோட நண்பன் மனோஜ் , குழந்தையில் இருந்து இவருடன் இருக்கிறார். தனது மகனுக்கு எதிரிகளால் ஆபத்து இருப்பது தெரிந்து வினய் சுற்றி எப்போது ஒரு செக்யூரிட்டி கும்பல் இருந்து கொண்டே இருக்கும்.

கதாநாயகி காஜல் அகர்வால் செய்யும் ஒரு சிறு தவறல் வினையின் கார் விபத்தில் மாட்டி கொள்ள , காரின் செலவை ஈடு கட்ட தனது வீட்டுக்கு வேலைக்காரியாக வந்து வேலை செய்து அதை கழித்து கொள்ள சொல்கிறார். இவர் வீட்டுக்கு போனதும் அங்கு இருக்கும் மதனிடம் கொஞ்சம் ஓவரக வழிய அது காதல் என்று அவர் எடுத்து கொள்ள, இதற்கு இடையில் வினய் காஜல் மீது காதல் கொள்ள, காஜல் வினய் மீது காதல் கொள்கிறார். தனது காதலை காஜல்லிடம் கூற வினய் ஒரு ஹோட்டல்க்கு வர சொல்கிறார். வினய் வருவதற்கு முன்பாக மனோஜ் அங்கு சென்று காஜல்லிடம் தனது காதலை கூறி இது வினைக்கு தெரியும் என்று கூறுகிறார். இந்த விஷயம் தெரிந்து வினய் மனோஜுடன் காஜல் யாரை காதலிக்கிறார் என்று கேட்டு முடிவு பண்ணலாம் என்று இரண்டு பேரும் காரில் பயணிக்கும் போது மனோஜ் எதிர்பாராத விதமாக கலாபவன் மணியின் எதிரிகளால் சுட்டு கொலை செய்யபடுகிறார்.

மனோஜ் இறந்த பிறகு வினய் வாழ்கையில் பல மாற்றங்களை சந்திக்கிறார், அவரின் செக்யூரிட்டி விளக்கி கொள்ளப்படுகிறது. யாரும் அற்ற ஆனதை போல் ஆகிறார் , இந்த இடத்தில தான் அவருக்கு உண்மை தெரியவருகிறது தான் கலாபவன் மணி மகன் இல்லை மனோஜ் தான் உண்மையான மகன், தனது மகனை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வினய்யை தான் தனது மகன் என்று எல்லோருக்கும் தெரியும் படி நடத்தி இருக்கிறார் .

ஒரு புறம் கலாபவன் மணி ஆட்கள் இவரை துரத்த, இன்னொரு புறம் கலாபவன் மணி எதிரிகள் இவரை துரத்த இவர்களிடம் இருந்து வினய் எப்படி தப்பித்தார் என்பதை கொஞ்சம் கூட சூடே இல்லாமல் இயக்கி இருக்கிறார் சரண் ..

வினய் சொந்த குரலில் பேசி இருப்பது நல்ல முயற்சி, இவரின் கொஞ்சும் தமிழ்தான் காது குடுத்து கேட்க முடியவில்லை. நீங்க இன்னும் வளரனும் வினய்... ( உயரத்தில் அல்ல , தமிழ் உச்சரிப்பில் )

காஜல் கொஞ்சம் போல குறும்பு செய்து விட்டு போய் இருக்கிறார் .

படத்தின் பெரும் பங்கு ஒளிப்பதிவாளர் கருண்ணுகே சேரும் . படத்தின் காட்டப்படும் அந்த பங்கள , அலுவலங்கள் , கடற்கரை எல்லாம் ரிச்நெஸ் சூப்பர்ராக இருக்கிறது .

மியூசிக் டைரக்டர் அவரின் பங்கை செய்வனே செய்து காட்டி ஒரு பாடலில் தேவா உடன் வந்து பாடிவிட்டு போகிறார் .

சரண் படம் என்றாலே திரைகதை பெரிய பங்கு பெரும் . இதில் கொஞ்சம் கூட அது இல்லை. மனோஜ் தான் கலாபவன் மணியுடைய மகன் என்று இடைவேளைக்கு முன்பே கணிக்க முடிந்தது. லாஜிக் இல்லாத விஷயங்கள் இதில் நிறைய உண்டு. இந்தியாவில் இருக்கும் மிக பெரிய பணக்காரர் ஒரே நாளில் ரோட்டுக்கு வருவது கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் சொன்னது பெரிய சறுக்கல் சரணுடைய படங்களில் எல்லாம் எதாவது ஒரு இடமோ இல்லை ஒரு பொருளோ கண்டிப்பாக அந்த படத்தை சுற்றியே வரும். இவரது அமர்க்களம் படத்தில் வரும் ஸ்ரீனிவாச தியேட்டர் , அல்லி அர்ஜுன படத்தில் வரும் போலீஸ் ஸ்டேஷன் போன்றவற்றை பார்க்கலாம் . இந்த படத்தில் இந்திய பெரும் தலைகள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் மற்றும் அவர்களின் அலுவலங்கள் அவர்களின் பங்களா என்று படம் முழுக்க பரவ விட்டு இருக்கிறார் .

சரண் சார் - அடுத்த படம் நம்ம தல நடிக்கிறது . கொஞ்சம் பார்த்து பண்ணுக சார் ..

மோதி விளையாடு : திரைகதையில் இருக்கும் பெரிய ஓட்டையால் பெரிதாக விளையாட முடியவில்லை



நாடோடிகள் திரை விமர்சனம் ..









ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது தியேட்டர் சீட் நுனி வரை இழுத்து சென்ற காட்சிகள் கொண்ட படத்தை பார்த்து ... முதலில் டைரக்டர் சமுத்திரகனிய பாராட்டனும் , சுப்பிரமணியபுரம் படத்துல நடிச்சு அத களம் பணின மனுஷன் இந்த படத்துல டைரக்டர் ஆகா இருந்து அத களம் பண்ணிட்டாரு.

படம் ஆரமிக்கும் போதே " எனது நண்பனுடைய நண்பன் எனக்கும் நண்பன்" என்ற வாசகம் எத்தனை உண்மை .. உங்கள் நண்பன் அவனின் நண்பனை அறிமுகப்படுத்தும் போதே அவன் நமது நண்பன் ஆகிவிடுகிறான். நண்பன் என்ற உறவைவிட வேறு எந்த உறவும் அங்கு நாம் எதிர் பார்க்க முடியாது .

நடு ரோடில் பயண பட்டு கொண்டே டைட்டில் கார்டு வரும் போதே எதோ ஒரு வித்தியாசம் காண முடிகிறது .அதும் படத்தின் தீம் மியூசிக் பின்னணில் ஒலித்து ஒரு வித எதிர்பார்பை நம்முள் ஏற்படுத்தி விடுகிறது .

படத்தில் நடித்து இருக்கும் சசி, பரணி, விஜய் இந்த முன்று கதாபாத்திரங்கள் தான் முக்கியமாக படத்தை கொண்டு செல்கிறார்கள் .

சசியின் நண்பன் அவரை தேடி ராஜபாளையம் வருகிறார். இவர்களுக்குள் சிறுவயது முதலே நட்பு இருக்கிறது. வந்தவர் ஒரு நாள் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயல்கிறார் . அதில் இருந்து காப்பற்றி ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்று விசாரிக்கும் போது, தான் ஒரு பெண்ணை காதலிபதாகவும், தன் காதலியின் அப்பா மற்றும் இவனின் அம்மா இதற்கு சமதிக்கவில்லை என்ற விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்கிறார் . இவரின் காதலுக்கு சசி மற்றும் இவரின் நண்பர்கள் பரணி மற்றும் விஜய் உதவிக்கு வருகிறார்கள் .

இதற்கு பிறகு நடக்கும் விறுவிறு கதையை திரைகதையின் முலம் நம்மை கொஞ்சமும் சோர்வடையாமல் நகர்த்தி செல்கிறார் சமுத்திரகனி. சமுத்திரகனிக்கு இது மூன்றாவது படம், தனது மூன்றாவது படத்தின் முலம் இவரால் முத்திரை பதிக்க முடிந்தது.

முதலில் சசியின் நடிப்பை பாராடியே திர வேண்டும் . தனது மாமா மகளிடம் காதல் கொள்ளும் போது அதை சிறப்பாக செய்து இருக்கிறார் . தனது நண்பன் தற்கொலைக்கு முயலும் போது அது தெரியாமல் பரணி தான் அவனை கிணற்றில் தள்ளி வீட்டதாக நினைத்து அவனை அடிக்கும் போதும், உண்மை தெரிந்து அவனை சமாதனம் படுத்தும் போதும் உண்மையாக இதே போன்று சில நண்பனை நாம் பார்த்து இருப்போம்.

நண்பனின் காதலியை கடத்தும் போது அந்த பர பர கட்சிகளில் கொஞ்சம் கூட டெம்ப் (Temp) குறையாமல் நடித்து தூள் கிளப்பி இருக்கிறார். பரணி மற்றும் விஜய் இருவரும் உடல் ஊனம் ஆகிவிட்டதை கண்டு அழுவதும் . தனது பாட்டி இறந்த பிறகு அவர் இருந்த இடத்திற்கு போய் அழுவதும் . மாமா மகள் இன்னொருவரை கல்யாணம் கொண்டு வரும் வேளையில் தனது காதல் தோற்றுவிட்டதை எண்ணி அழுவது. கல்யாணம் பண்ணி வைத்த பிறகு அவர்கள் பிரிந்ததை எண்ணி ஆதிரத்தில் பெருமவதும் என்று மனுஷன் படம் முழுக்க ஜொலிக்கிறார் .

பரணி படத்தின் அடுத்த ஹீரோ ... பெண்களை கண்டாலே MGR மாதுரி உதட்டை காவுவதும், அவரை பெண்கள் எல்லாம் மதிக்காமல் போனாலும் கொஞ்சம் கூட கேத்து குறையாமல் அடுத்த பெண்ணை பார்ப்பதும் என்று நன்றாக லுட்டி அடித்து உள்ளார். அந்த கடத்தல் காட்சியில் இவர் வாங்கும் அந்த அடி பார்க்கும் நமக்கே காதுக்குள் கோய் என்று சவுண்ட் கேட்க வைக்கிறது. கடைசி காட்சியில் அந்த பெண்ணை சுமோ காரில் வைத்து இவர் அடிக்கும் காட்சிகள் தியேட்டர் அதிர கை தட்டுகிறார்கள் மக்கள்.

விஜய் இவருக்கு ஏற்று இருக்கும் பாத்திரம் தெரிந்து அதிகம் சிரமம் படாமல் நடித்து இருக்கிறார். நண்பனின் தங்கையை காதலிக்கும் போது இவரின் அப்பா ஐடியா தருவதும் அதையே இவர் செய்வது என்று கொஞ்ச நேரம் நன்றாக கலகலப்பு ஆகி சென்றார் .

படத்தில் ஒரு வார்த்தை கூட பேசாத அந்த இன்னொரு நண்பரை கண்டிபாக பாராட்ட வேண்டும். இவர் சில கட்சிகளே வந்த போதும் சசிக்கு மிக முக்கியமான சந்தர்பத்தில் வந்து உதவுவது படத்திற்கு இன்னும் ஒரு ரசனை .

சசியின் மாமா மகள் அனன்யா இவர் பார்பதற்கு கொஞ்சம் போல் சர்மிலி நியாபகம் படுத்துகிறார் . எப்போதும் எதையாவது சாப்பிட்டு கொண்டே சசியை சுற்றி சுற்றி வருவது அப்பா தன்னை வேறு ஒருவருக்கு கல்யாணம் பணிக்க சொல்லி கேட்ட உடன் அதற்காக அழுது தனது இயலாமை இதுதான் என்று பார்பவர்கள் கண்களை கொஞ்சவும் கலங்கவும் வைத்துவிடுகிறார். எதுவாகிலும் அம்முனியை கொஞ்ச நாட்களுக்கு தமிழ் சினிமாவில் எதிர் பார்க்கலாம் அதற்கு உண்டான தகுதி உள்ளது என்றே நம்பலாம் .

சசியின் தங்கையாக வரும் அபிநயாவை பாராடியே தீர வேண்டும் . இவர் வாய் பேசமுடியாத காது கேக்க முடியாதவர். இதை நான் ஒரு பத்திரிகை முலமாக படம் பார்த்த பிறகுதான் படித்தேன். கொஞ்சம் கூட மற்றவர்களுக்கு தெரியாமல் இவர் நடித்து இருக்கும் காட்சிகள் எல்லாம் பிரமாதம் . அதும் விஜய்யை முனங்கிக்கொண்டே தூ என்று துப்புவது. விஜயின் கால்கள் இல்லததை பார்த்து அழுவது , தனது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பும் போது தனது அண்ணன் இடம் போய் தஞ்சம் அடைவது என்று இவரின் பாத்திரம் கொஞ்சம்னும் இம்மி பிசுகாமல் ஒரு தேர்ந்த நடிகை போல் நடித்து உள்ளார் . ஹட்ஸ் ஆப் அபிநயா .

படத்தின் கேமராமேன் கதிர் படதிற்கு நல்ல பலம். அந்த கடத்தல் காட்சிகளில் இவரின் ஒளிப்பதிவு இன்னும் ஒரு அதிர்வை கொடுக்கிறது. எடிட்டிங் ரமேஷ் எந்த காட்சிகளுக்கு என்ன மாதுரி எப்படி வர வேண்டும் என்று இவரும் தனது பங்கை சூப்பர்ரக செய்து முடித்து உள்ளார் , இவரின் எடிட்டிங் அந்த கடத்தல் காட்சியே போதும். அதே சமயம் "அடுங்கட" பாடலில் இவரின் கேமரா அங்கும் இங்குமாக அலை பாய்கிறது . இது இவரின் தவற இல்லை எடிட்டிங் தவற என்று தெரியவில்லை.

படத்தில் வரும் பரணி அப்பா , சசி அப்பா , விஜய் அப்பா, அனன்யா அப்பா என்று வித வித அப்பாகளை நமது கண்முன் நிழல் ஆட விட்டு இருக்கிறார். ஒவ்வொரும் ஒவ்வொரு விதம் தனது இரண்டாம் மனைவிக்கு பயந்து முதல் மனைவியின் மகனான பரணியை திட்டுவது அவர் சென்ற பிறகு இவனிடம் வந்து கொஞ்சுவது , தனது மகனின் காதலுக்கு தந்தையே ஐடியா குடுக்கும் விஜய் அப்பா. தனது மகன் எது செய்தாலும் அது நல்லதுக்கு என்று மகனுக்கு சப்போர்ட் பண்ணும் சசி அப்பா. அரசு துறையில் வேலை செய்யும் ஒருதருக்கு தான் தனது மகளை கல்யாணம் பண்ணிகூடுபேன் என்று எளவு வீட்டில் வந்து சவுண்ட் விடும் அனன்யா அப்பா என்று வித விதமான அப்பாக்கள் ..


முக்கியமாக இரண்டு பேரை நான் சொல்லியே ஆகவேண்டும் . முதலானவர் படத்தின் மியூசிக் டைரக்டர் சுந்தர்.C.பாபு . படத்தின் ஒவ்வொரு காட்சியில் படத்தின் டைரக்டர் , நடிகர்களின் உழைப்பை விட இவரின் உழைப்பு நமது கண்களுக்கும் காதுகளுக்கும் மிக பெரிய தீனி , இவர் இந்த படத்திற்கு மட்டும் 25 நாட்களுக்கு மேல் எடுத்து பின்னணி இசை சேர்த்து உள்ளார். இவரின் முந்திய படங்களான அஞ்சாதே மற்றும் சித்திரம் பேசுதடி படங்களில் கூட இவரின் பங்களிப்பு அருமையாக இருக்கும் . இந்த படத்தில் பாடல்கள் என்று சொல்லும் படியாக இருக்கும் சம்போ சிவா சம்போ கண்டிபாக ஒரு உற்சாக டானிக் தான். வெறி கொண்டு மட்டும் செய்ய துண்டும் எந்த ஒரு காரியத்தையும் இந்த பாடல் கேட்டு கொண்டு செய்தால் கண்டிபாக நம்முள் பெரிய உற்சாகத்தை கொடுக்கும் .

அடுத்து இயக்குனர் சமுத்திரகனி .. இவரின் முதல் இரண்டு படங்கள் சோடை போனதில் இருந்து மூன்றாவது படத்தை தமிழ் திரையுலகமே இவரை நிமிர்ந்து பார்க்க வைத்து உள்ளார் . இந்த கதையை இவர் எத்தனை தயாரிப்பாளர் , நடிகர்கள் இடம் சொல்லி எவரும் தயாரிக்க வராமல் நொந்து போய் இருந்த நேரத்தில் மைக்கல் ராயப்பன் தயாரிக்க முன்வந்தது பெருமைக்குரிய விஷயம் . இவரின் உழைப்பு படத்தை பெருமையை எங்கோ கொண்டு சென்றுவிட்டது . இந்த கருவை வைத்து கொண்டு நிறைய படங்கள் வந்து விட்டாலும் அதன் வலி , வேதனை என்று எவரும் சொல்லாத , செல்லாத பாதையில் கதையை நகர்த்தி சென்றது இவரின் சாமர்த்தியம் .. ராஜபாளையம் , நாமக்கல் , கன்னியாகுமரி என்று இந்த முண்று இடங்களை வைத்து கதையை நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார். நண்பன் கன்னியாகுமரி , நண்பனின் காதலி நாமக்கல் . இவர்கள் இருப்பதோ இந்த இரண்டு இடத்துக்கும் நடுவில் ராஜபாளையம் .
சசி நண்பனை கல்யாணம் பண்ணி வைத்து விட்டு அவர்கள் போகும் போது தனது கழுதில் இருக்கும் செயின் , பணம் எல்லாம் குடுத்து அனுப்பி விடும் கட்சி நிஜமாகவே ஒரு நண்பன் நமக்கு இந்த மாதுரி கிடைக்க மட்டான என்று ஏங்க வைக்கிறது. இந்த கட்சி முடியும் போது சசி நண்பர் பைக்கில் வந்து அவரை கூட்டிக்கொண்டு செல்லும் இடம் திரைகதையின் நச் என்று நமது மனதில் பதிய வைக்கிறார் . மற்ற நடிகர்களிடம் வேலை வாங்குவதை விட அபிநயாவிடம் வேலை வாங்குவதை ஒரு சவாலாக ஏற்று கொண்டு அவரிடம் இருந்த நடிப்பு திறனை உலகு அறிய செய்து இருக்கிறார், இதற்காக இவருக்கு மிக பெரிய பூ கோத்தே கொடுக்கலாம்.


இந்த படத்தை இன்னும் பார்க்காதவர்கள் உங்கள் வேலையை மற்றும் மற்ற சிந்தனையில் மட்டுமே இருப்பிர்கள் . படத்தை பார்த்த பிறகு கண்டிபாக மற்றதை மறத்து விடுவிர்கள்.

இந்த மாதுரி ரிஸ்க் எடுத்து நண்பன் கல்யாணத்தை நடத்தி வைத்த ஒருத்தர் இந்த படத்தை பார்த்த பிறகு கண்டிபாக அந்த ஜோடி இப்பொது என்ன பண்ணிக்கொண்டு இருக்கும் என்று நினைக்காமல் இருக்க மாட்டார் .


தியேட்டர்யில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

தியேட்டர்ரில் மெதுவாக ஆட்கள் வர ஆரமித்தர்கள் படதின் பெயர் போடும் போது அரங்கமே நிறைந்து இருந்தது .

எனது இருக்கை பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ஒரு ரசிகர் படத்தில் எங்கு எல்லாம் கை தட்ட வேண்டுமோ அங்கு எல்லாம் விசில் சேர்த்து கொண்டார்.

படத்தின் கடைசியில் பரணி அந்த பெண்ணை போட்டு ஆத்திரத்தில் கும்மு கும்மு என்று கும்மும் போது " அவ கழுதுலையே போட்டு மேதிடா " என்று குரல் குடுத்து அரங்கையே திரும்பி பார்க்க வைத்தார் .

இந்த மாதுரி ரசிகர்கள் இருக்குற வரைக்கும் தமிழ் சினிமாவில் இது போன்ற படங்கள் கண்டிபாக பிச்சிக்கிட்டு ஓடும் ..