~~ROMEO~~

Everyday Starts with Happy :)

Showing posts with label தொடர் கதை ... Show all posts
Showing posts with label தொடர் கதை ... Show all posts

அட பார் ரா... லுக் - 6


அட பார் ரா ஹா ஹா ஹா என்று கிளாஸ் ரூம் அதிர சிரித்து மச்சி அப்ப எஸ்கேப்ன்னு சொல்லு, இனி எவனும் நம்ம கிட்ட வேலை காட்ட மாட்டாங்க என்று சந்தோஷத்தில் இருந்தான் கணேஷ்

அப்படி சொல்ல முடியாது மச்சி யாருன்னு தெரியாத வரைக்கும் நாம எஸ்கேப் தெரிந்தன்னு வை அப்பயும் நாம எஸ்கேப் தான் காலேஜ் விட்டு. சரி விடு அடி வாங்கினவனே போலீஸ் கிட்ட ஏதும் சொல்ல வேண்டம்ன்னு சொல்லிட்டான் அப்பறம் என்ன.
சரி அந்த பையன் ஏன்டா உங்கிட்ட அடிவாங்கினது யாருகிட்டையும் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்னு தான் தெரியலையே.
எங்க ஊரு பசங்க சில பேரு அவனுக்கு தெரியுமா டா அதனால்தான் யார்கிட்டையும் சொல்லிடாதன்னு சொன்னான்.
எங்களின் பேச்சு கொஞ்ச நேரம் நிடித்து அடுத்த வகுப்பு ஆசிரியர் வந்ததும் நின்றது. இந்த சம்பவத்துக்கு பிறகு எங்க சீனியர் பசங்க கொஞ்சம் அடக்கியே வசித்தார்கள் . அவர்களை குறிவைத்து தாக்க நினைத்து வேறு ஒருவன் மாட்டி கொண்டது அவர்களிடம் கொஞ்சம் பயம் கொள்ள வைத்தது. அதன் பிறகு எங்களை ராக்கிங் என்கிற பெயரால் யாரும் தொந்தரவு செய்ய வில்லை.
முதலாம் ஆண்டு முடியும் வரை நாங்கள் நிம்மதியாக இருந்தோம். எங்களுக்கு பிறகு வந்த ஜூனியர் மாணவர்களிடம் நாங்கள் நட்புடனே பழகினோம். அதே சமயம் சீனியர் என்கிற கேத்து கொஞ்சம் கூட குறையாமல் வளம் வந்தோம்.
பிரிவு உபசார விழாவின் கண்களை கசக்கி கொண்டே விடை பெற்றோம். சரக்கு என்றால் அரை கிலோமீட்டர் ஓடும் அப்புராணி பசங்க கூட ஒரு பெக் அடித்து எங்கள் உடன் ஒரு இரவு வாந்தியுடன் அடுத்த நாள் காலை பிரிந்தது எங்கள் நினைவின் இருந்து நீங்கா இடம் பெற்றது.
இன்று எங்கள் உடன் படித்த நண்பர்கள் வட்டம் ரொம்ப சுருங்கி போய்விட்டது. குமார் மற்றும் கணேஷ் மட்டுமே எப்போதும் தொடர்பு எல்லைக்கு உள்ளே இருகிறார்கள். மற்றவர்கள் அவுட் ஆப் ரீச் தான்.
வேலை நிமித்தமாக நான் சென்னை வந்தது குமார் இருக்கும் தைரியம் தான். அவன் என்னை போல் இல்லாமல் கல்லூரி படிப்பு முடித்தவுடன் கம்ப்யூட்டரில் VB, Java, C, C++ என்று படித்து இப்பொது முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்கிறான். மேன்சன் வாசியா இருந்தாலும் அவன் தங்கி இருக்கும் அறை ரொம்ப சுத்தமாக இருந்தது. ஹிந்து நாளிதழில் வந்த வேலை வாய்ப்பு பகுதியை எனக்காக எடுத்து வைத்து இருந்தான். அதில் எனக்கு எது செட் ஆகும் என்று தேடி 10 கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தேன்.
அவன் மேன்சன் மேனேஜர்யிடம் ஏற்கனவே பேசி எனக்கான ஒரு ரூம் தேர்வு செய்து வைத்து இருந்தான். அவர் வந்ததும் என்னிடம் பெயர் , விலாசம் என்று எல்லா குறிப்புகளையும் வாங்கி கொண்டு குமார் ரூம்க்கு இரண்டு ரூம் தள்ளி இருந்த ஒரு ரூம்மை எனக்காக ஒதுக்கி தந்தார்.

ரூம் பிரச்சனை திர்ந்தது.

அடுத்தது வேலை ..

அட பார் ரா... லுக் - 5

அட பார்ரா இந்த காமெடிய . ஏன்டா உங்க ஊருகாரன் எல்லாம் இங்க படிக்கிறதா நீ இது வரைக்கும் சொல்லவே இல்லையே என்று குமார் கேட்டான்.

டேய் அவன் எங்க ஊரு இல்லடா பக்கத்துக்கு ஊரு, நேத்து தான் எனக்கே தெரியும். எக்ஸாம் பீஸ் கட்ட போன இடத்துல இவன் நின்னுட்டு இருந்தான். நான் சீனியர் பையன்னு பயந்து ஒதுங்கி போனேன், அவனே கூப்பிட்டு பேனா கேட்டான். நான் பயந்துடே போனேன், ஆனா அவன் சிரிச்சிட்டு இருந்தான், அப்பறம் தான் சொன்னான் காலேஜ் முடிச்சி ஒரு வருஷம் ஆச்சாம் இப்ப அர்ரியர்ஸ் எழுத வந்து இருக்கான். நான் எந்த ஊருன்னு கேட்டான் சொன்னனேன் இவன் பகத்து ஊரு. டைம் ஆச்சுன்னு நான் கிளம்பிட்டேன். இங்க என்னடானா இவன் அடி வங்கி இருக்கான்.

சரி ரமேஷ் வரான் என்னன்னு கேளு.

"மச்சி செயின் கிடைச்சிடுச்சு டா தலைகாணி குள்ள இருந்துச்சு. என்னடா ஒரே கும்பலா இருக்கு?? எசகு பிசகா அடிச்சதுல படாத எடத்துல பட்டு மண்டைய போடுடான இவன் ? சொல்லுடா எப்படியும் காலேஜ் லீவ் விடுவாங்கள" என்று ஸ்கூல் பசங்க லீவ்க்கு அலையுற மாதுரி கேட்டான்.


"டேய் ஓவர்ரா பேசாத கொஞ்ச நேரம் பொத்திட்டு இரு" என்று மடக்கினேன் .

கணேஷ் எங்கடா ?

அவன் ரூம்ல இருக்கான், இருட்டுல அந்த அடி அடிச்சான்ல இப்ப கூப்பிட்டா இவனுகள பார்த்து பயபடுறான். நான் வரல நீ போய் உங்கள கூட்டிடு வான்னு ஜகா வாங்கிட்டான் .

சரி வா நாம இடத்த காலி பண்ணலாம் போற வழில நான் சொல்லுறேன் இப்ப கொஞ்சம் அமைதியா வா.

"சரி அடி வாங்கினவன் முஞ்சிய பார்த்துட்டு வரேன் இரு" என்று கிளம்பினவனை குமார் அவனின் தோல் பட்டையை அழுத்தி இழுத்து கொண்டு வந்தான்.

போகிற வழியில் அவனிடம் எல்லாவற்றையும் சொன்னேன். பயபுள்ள ஏற்கனவே பீதில இருகுறவனையும் பேதி வரவசிடுவான் போல அந்த மாதுரி பயப்படுத்தி விட்டுட்டான்.


மச்சி இந்த மேட்டர் நம்ம நாலு பேருக்கு தான் தெரியும் இத தப்பி தவறி யாரும் யார்கிட்டையும் சொல்லிட கூடாது. கடுகு அளவு மேட்டர் கசின்ஜாலும் நம்ம நாலு பேருக்குதான் ஆப்பு அத தெரிஞ்சிகோங்க.


ரூம்க்கு வந்தா கணேஷ் எங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தான்.

"டேய் வெளிய போய்டாதடா நீ அடிச்ச அடில அவன் மண்டைய போட்டுடான். போலீஸ் அங்க இருக்குறவங்க கிட்ட எல்லாம் விசாரணை பண்ணிட்டு இருகாங்க" என்று கணேஷிடம் பெரிய குண்டு தூகி போட்டான் கேட்ட உடனே கணேஷ் முகம் அம்மாவசை கணக்காக இருண்டு போனது.

"டேய் மச்சி என்னடா சொல்லுர ??"

"ஆமா டா நீ அடிச்ச அடில அவன் மண்டைய போட்டன். போலீஸ் எல்லாம் வந்து இருக்கு. நி எதுக்கோ கொஞ்சம் உசார இருந்துக்கோ."


"டேய் ஏன்டா அவன பயபடுத்துற. மச்சி அது எல்லாம் ஒன்னும் இல்ல" என்று அவனை சமாதானம் படுத்திவிட்டு நடந்த உண்மையை முதலில் இருந்து சொன்னேன்.

டேய் நாயே கொஞ்ச நேரத்துல என்னைய ஒரே அடியா ஆட வச்சிடேயே என்று அவன் மீது செருப்பை துக்கி வீசினான் .


சரி விடுங்கடா காலேஜ்க்கு டைம் ஆச்சு கிளம்பலாம்.

ரமேஷ் கிட்ட இருக்கிற டிரெஸ் எடுத்து நானும் குமாரும் போட்டு கொண்டு கிளம்பிநோம்.

காலேஜ் போனதும் கொஞ்ச நேரத்தில் ஆபீஸ் பாய் வந்து என்னை ஆபீஸ்ல வர சொல்லி கூப்பிட்டார், பக்கத்தில் இருந்த குமார் பயப்படாத எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்லு.

என்னை மட்டும் ஏன் வர சொன்னாங்க என்று புரியாமல் சென்றேன்.


திரும்ப கிளாஸ்ரூம் போகும் போது சிரித்து கொண்டே வந்ததை பார்த்து ரமேஷ் , குமார் எல்லாம் ஒரு மாதுரியாக பாத்தார்கள் ...

அவங்களுக்கு எப்படி தெரியும் அங்க நடந்த கூத்த ???

அட பார் ரா... லுக் - 4

அட பார் ரா ஆளு என்னமோ மைனர் மாதுரி கிளம்பிட்டன் .. கணேஷ் பார்த்து குமார் கிண்டலடித்தான் ..

ஹி என்று பல்லை இளித்தான் கணேஷ் .. "பின்ன இருக்காதா மச்சி நேத்து ஆசை தீர அடிச்சு அவனுகள ஒருத்தன சச்சிடோம்ல அந்த சந்தோசம் தான்" என்றேன். "நீ சொல்லுறது சரி தான் டா மச்சி, காலைல நம்ம ரூம்க்கு போனேன் பயங்க எல்லாம் இழுத்து போர்த்திடு தூங்கிட்டு இருக்காங்க நைசா போய் டிரஸ் எடுத்து வரலாம்ன்னு போனா பரணி பையன் எழுந்துட்டன் , எங்கடா நைட் உங்கள காணோமே எங்க போய் இருந்திங்கன்னு கேட்டான். நேத்து ரமேஷ் ரூம்ல யாரும் இல்ல அதனால நாங்க அங்க படுத்துடோம்ன்னு சொல்லிட்டேன் , ஆனா அவன் ஏதோ யோசனையா கேட்டான் கொஞ்சம் உசாரா இருக்கனும் டா"

"ஆமா டா நாம நைட் எங்க இருந்தோம்ன்னு யாரு கேட்டாலும் ரமேஷ் ரூம்ல தான் இருந்தோம்ன்னு சத்தியம் பண்ணி சொல்லணும், எவனும் மதி கித்தி சொல்லிடாதிங்க" என்று எச்சரிக்கை பண்ணினான் குமார் ..

"டேய் இங்க நாம இவ்வளவு சீரியஸ் மேட்டர் பேசிட்டு இருக்கோம் இவன பாரு முக்காடு போட்டுக்கிட்டு இப்படி தூங்கிட்டு" என்று ரமேஷ் போர்வையை இழுத்தேன் + அதிர்ச்சியில் உறைந்தேன் ... பய புள்ள ஜட்டிய கூட போடாம படுத்துட்டு இருக்கான் .. கருமம் புடிச்சவன் .. "டேய் என்னடா கோலம் இது லுங்கி எல்லாம் அவுந்து இருக்குறது கூட தெரியமா தூங்கிட்டு இருக்குற எழுந்துரா முதல" கொஞ்ச நேரத்தில் ஷகிலா மாதுரி லுங்கியை மார்பு வரை கட்டி கொண்டு எழுந்து வந்தான்,
கணேஷ் பார்த்து " என்ன மச்சி ரொம்ப சந்தோசமா இருக்குர போல இன்னைக்கு நைட் பார்ட்டி வைச்சிடு டா " என்று இப்பவே தண்ணி அடிச்சவன் போல ஒரு லுக் விட்டுட்டு சென்றான் ..
பாத்ரூம் போனவன் போன வேகத்தில் ஓடி வந்தான் .. டேய் என்னோட செயின் காணோம் டா " என்ற குண்டை தூக்கி போட்டன் .. என்னடா சொல்லுற நல்ல தேடி பாரு என்று ரூம் முழுக்க தேடி பார்தோம் ஓண்ணும் அக படவில்லை,
"என்னகு என்னமோ செயின் அந்த புதருகுள்ள தான் இருக்கும், டேய் அந்த செயின் என்னோட அப்பா ஆசையா வாங்கி குடுத்தாங்கடா. அதும் இல்லாம அந்த செயின் காலேஜ்ல இருக்குற எல்லோருக்கும் தெரியும்டா அத காணோமே" என்று புலம்பி அழுதான் .

"சரி மச்சி புலம்பாத நான் அங்க போய் பார்த்துட்டு வரேன்" என்று குமார் கிளம்பினான் நானும் வரேன் என்று அவனுடன் சென்றேன். நாங்கள் அந்த இடத்தை தொலைவில் இருந்தே நோட்டம்விட்டோம், இரவில் அந்த ஏரியா இருந்த மாதுரி இல்லை இப்பொது. ஆட்கள் நடமாட்டம் கொஞ்சம் இருந்தது. நாங்கள் பதுங்கி இருந்த இடத்திற்கு கொஞ்சம் தள்ளி ஒரு குடிசை இருந்தது. , ரமேஷ் செயின் சீனியர் பசங்க கிட்ட கிடைச்சா அவள்ளவு தான். அதும் அவன் போட்டு இருந்த செயின்ல இருக்குற விநாயகர் படம் ரொம்ப வித்தியாசமா இருக்கும். யானை முடியில் விநாயகர் உருவம் செய்து இருபார்கள்.

சீனியர் ரூம்க்கு முன்பாக கொஞ்சம் கும்பல் இருந்தது, உத்து பார்ததில் எல்லாம் எங்க காலேஜ் பசங்க போல இருந்தாங்க. இந்த கும்பலில் சேராமல் எங்க கிளாஸ்மேட் பசங்க ரெண்டு பேரு ஓரமா நின்னுட்டு இருந்தாங்க. அவனுக அப்பாஸ் என்கிற சீனியர் ஸ்டுடென்ட் தம்பி மற்றும் அவன் சொந்தகார பையன். இப்போ அங்க போறதா வேண்டாமா என்று தெரியவில்லை "டேய் முர்த்தி அங்க பாரு முஸ்தபா அப்பறம் இலியாஸ் நிக்குறாங்க , நாம இங்கயே நின்னுட்டு இருக்குது நல்லா இல்ல. எவனாவது சந்தேகம் வந்துட போகுது ஒன்னு இங்க இருந்து உடனே கிளம்பனும் இல்ல அங்க போய் எட்டி பார்த்துட்டு வந்துடலாம்" என்றான் குமார் "சரி வாடா போகலாம்" என்று கிளம்பினோம் . டேய் சாதரணமா வா, முஞ்சில பயத்த கொண்டு வராத என்று எச்சரித்தான். கொஞ்சம் சீரியஸ் ஆக முகத்தை வைத்து கொண்டேன். என்ன தான் முகம் சீரியஸ்சா இருந்தாலும் மனதுக்குள் பயம் ஓவர்ரா இருந்துச்சு.

அவர்கள் ரூம்க்கு பக்கத்தில் சென்றோம், சீனியர் பையன் ஒருத்தன் எங்களை பார்த்து அவன் பக்கத்தில் வர சொன்னான். பயந்த மாதுரியே சென்றோம், எனக்கு பயம் அதிகமாக இருந்தது .

"எங்கட இங்க வந்திங்க" என்று அவன் கேட்க, என்ன சொல்லுவது என்று தெரியாமல் முழித்தேன்.

சட்டேனே குமார் முந்திகொண்டு "அண்ணே அந்த சைடுல போயிட்டு இருந்தோம் உங்க ரூம் கிட்ட கூட்டமா இருந்துச்சு அதான் என்ன எதுன்னு பார்க்கலாம்ன்னு வந்தோம்" என்று கொஞ்சம் கூட பயம் இல்லாமல் பதில் கூறினான்.

"என்னனே எதாவது பிரச்சனையா" ?

"ஆமாடா நம்ம காலேஜ்ல எங்களுக்கு சூப்பர் சீனியர் இருந்த ஒருத்தர் அர்ரியர் பேப்பர் எழுத வந்து இருக்காரு, வந்தவரு எங்களுக்கு எல்லாம் தண்ணிய வாங்கி குடுத்தாரு. தண்ணிய போடுட்டு நாங்க எல்லாம் மட்டை ஆகிடோம், நைட் இவரு பாத் ரூம் போறதுக்கு போய் இருகாரு , அந்த நேரத்துல எவனோ களவாணி பையங்க இவர துக்கிட்டு போய் எதாவது பணம் செயின் இருக்குமான்னு பார்த்து இருந்து இருக்காங்க , ஒண்ணும் தேரலைன்னு நாலு சாது சாத்தி கயறு எடுத்து கை , கால் கட்டி வாசல போடுட்டு போய்டாங்க , அடிச்சது யாருன்னு தெரியல அந்த அளவுக்கு இவரும் போதைல இருந்து இருகாரு ".

அவன் அடுத்து சொன்னதை கேட்ட பிறகுதான் எங்களுக்கு பயம் அதிகம் ஆகியது. போலீஸ்க்கு சொல்லலாம் என்று முடிவு பண்ணி இருகிறார்கள் .
அடி வாங்கினவன் முகத்தை பார்க்கலாம் என்று அந்த கும்பலில் எட்டி பார்த்தோம்,

ஐயோ இவனா என்று மனம் முழுவதும் அலறியது!!!!! ...



அட பார் ரா... லுக் - 3

அட பார் ரா ..

இந்த மண்டை கூட ஏதோ யோசிக்குது என்று கணேஷ் குமாரை பார்த்து கிண்டல் அடித்தான்.
அவன் சொன்ன பிளானை கேட்ட பிறகு கூட கணேஷ் எப்படி இவள்ளவு ஜாலியா கிண்டல் பண்ணுறான் என்றுதான் புரியவில்லை.
மச்சி உண்மைய சொல்லு உனக்கு பயமா இல்லையாடா ?? என்று கணேஷ் பார்த்து கேட்டேன்.

" இப்ப எனக்கு இருக்குது எல்லாம் வெறிதான் டா . என்னைய எப்படி அரஞ்சன்னு எனக்குதான் தெரியும்" என்று அவன் கன்னத்தை தடவி சொல்லும் போதே அவன் கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.

ஓகே கோதாவுல இறங்கிடலாம் ,, ஏன் டா மச்சி அடி வாங்குனது 5 பேருக்கு மேல இருக்கும் அவனுகள விட்டுட்டு என்னையும் கணேஷ்யும் மட்டும் ஏன்டா தனியா வர சொன்ன?

மச்சி மத்த பசங்க முஞ்சிய நாம ஸ்டிரைக்ன்னு சொல்லும் போதே பார்த்தேன் பேய் அறஞ்ச மாதுரி முழிகுரங்க, இந்த மாதுரி நாம பண்ண போறோம்ன்னு சொன்னா அவ்வளவு தான் நாளா போல சீனியர் பசங்க கேட்டா அடிக்கு பயந்துட்டு நம்மள போட்டு குடுத்துடுவாங்க. சரி வாங்கடா நாம ரமேஷ் ரூம்க்கு போலாம் அவன் கூட இருந்தா நமக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும் .

ரமேஷ் ரூம்ல முக்காடு போட்டுக்கிட்டு நல்ல துங்கிட்டு இருந்தான். அவன எழுப்பி மேட்டர் சொன்ன உடனே பயபுள்ள ஏதோ கறி சோறு சாப்பிட கிளம்பினவன் மாதுரி ஒரு போர்வைய தூக்கிட்டு கிளம்பிட்டன்..

இரவு 11 மணி ஆகிவிட்டது, ஊருல நடமாட்டமே இல்ல, சீனியர் பசங்க தங்கி இருக்கும் ரூம்க்கு எதிர்ல இருக்குற புதர் மண்டில ஒளிஞ்சி இருந்தோம். ரமேஷ் விட்டா அங்கயே தூங்கிடுவன் போல மண்டைய மண்டைய ஆடிட்டு இருந்தான். கணேஷ் கொலை வெறில உக்காந்துட்டு இருந்தான்... கொஞ்சம் கூட பயமே இல்லாத மாதுரி நான் நடித்து கொண்டு இருந்தேன்.

இருந்ததுக்கு கை மேல பலன் கிடைத்தது.. கணேஷ் காமிச்ச ஒரு பையன் மேலே இருந்து பாத்ரூம் போவதற்கு கீழே வந்து கொண்டு இருந்தான்.. எல்லோரும் சுதாரித்து கொண்டோம் ரமேஷ் போர்வையை எடுத்து நன்றாக அவன் முகம் தெரியாத படி முடிகொண்டு முதலில் சென்றான், எங்களது பிளான் படி அவன் பாத்ரூம்யில் இருந்து வெளியேறி மாடிக்கு செல்லும் போது அவனை தூக்கிட்டு செல்ல வேண்டும். அவனை வெறி தீர அடிக்க வேண்டும் ..

ரமேஷ் முதல் படிக்கட்டில் நின்று கொண்டு இருந்தான் நாங்கள் ஆளுக்கு ஒரு புறம் பிரிந்து ஒளிந்து கொண்டோம். அவன் கதவை திறக்கும் சதம் கேட்டது .. அவனின் காலடி சத்தம் மாடி படி ஏற சென்றது ... ரமேஷ் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அவனை எதிர் கொள்ள துணித்து விட்டன் என்பது போல அவன் கையில் இருந்த போர்வையை பிடித்து இருந்தான்..

எங்களின் ஒவ்வொரு இதயமும் சாதரண நிலையில் இருந்து இருமடங்கு துடித்து கொண்டு இருந்தது... இன்னும் சிறு வினாடிகளில் அவன் ரமேஷ்யை நெருங்க போகிறான் என்று தெரிந்தது .. நாங்கள் கொஞ்சம் முன்னேறி சென்றோம் ... அவன் படிக்கட்டில் கால் எடுத்து வைத்த உடன் போர்வை கொண்டு அவனை அமுகினான் ரமேஷ் .. பின்னாளில் இருந்து நான் , குமார் மற்றும் கணேஷ் வேகமாக ஓடி சென்று அவனை அலேக்காக தூக்கினோம்.. கணேஷ் அவன் வாய்யை துண்டு கொண்டு அமுத்தினான்.. நான் அவனின் கால்களை பிடித்து தூக்கினேன், அவனின் கைகளை குமார் கெட்டியாக பிடித்து கொண்டான் அப்படியே அவனை புதர் மண்டிக்கு தூக்கி சென்றோம், கை , கால்கள் கட்ட பட்டு இருந்ததால் நகற முடியாமல் அங்கயே முனகி கொண்டு இருந்தான் .. கணேஷ் முதலில் அவனை நன்கு நன்கு என்று மேதிதான் .. பலம கொண்டு அவனின் கணங்களில் அறைந்தான்.. கணேஷ் அடி வாங்கினவன் என்பதனால் நாங்கள் அவனை ஏதும் பண்ணவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் அவனை கணேஷ் அடித்து இருந்தால் கண்டிபாக அவன் மூர்ச்சை ஆகி விடுவான் என்று தெரிந்தது .. ரமேஷ் மற்றும் நான் கணேஷ்யை போதும் என்று இழுத்து வந்தோம் ...

குமார் அவனை துக்கி கொண்டு படிக்கட்டு சென்றான் எங்களின் துணிகளால் கட்ட பட்டு இருந்த கை மற்றும் கால்களை விடுவித்து அங்கு துணி காய போட இருந்த நைலான் கயிர் கொண்டு கால்கள் மற்றும் கையை கட்டினான், கணேஷ் அவனின் லுங்கி உருவி முகத்தை கட்டினான் ....
எல்லோரும் அங்கு இருந்து வேகமாக ரமேஷ் ரூம் நோக்கி சென்றோம் ... அடுத்த நாள் நடக்க போகும் விபரிதம் தெரியாமல் நான்கு பேரும் சிரித்த படி புகைத்து கொண்டு இருந்தோம் .. ..

அட பார் ரா... லுக் - 2

அட பார் ரா ...


குமார் சொன்ன ஐடியா கேட்டு இன்னொரு நண்பன் ரமேஷ் இப்படி சொன்னான். எனக்கு தான் கொஞ்சம் கூட ஒத்து கொள்ள முடியவில்லை. பின்ன குமார் சொன்ன ஐடியா கேட்டு அடிக்காத குறையா திட்டினேன். அவன் சொன்ன ஐடியா இதுதான் ராக்கிங் பண்ற பசங்கள பத்தி அவங்க பெற்றோர்கள் கிட்ட போட்டு குடுத்துடலாம் என்று. உருப்புடுற மாதுரி எதாவது சொல்லுடா நாயே என்று திட்டினேன். அவனுங்கள ஆளு வச்சி அடிச்சிடலாம் என்று ஒரு அல்ல கை சொன்னான். எனக்கு என்னமோ இது எல்லாம் பிடிக்கவில்லை .


பேசாம ஸ்டிரைக் பண்ணலாம் இவனுக ராக்கிங் பண்ணுறத பத்தி நாளைக்கு பெரிய மேட்டர் ஆகும் டிவி, நியூஸ் பேப்பர்ல எல்லாம் வரும் என்று கூறினேன். இதுக்கு பாதிக்கு பாதி தான் பசங்க ஒத்துகிடங்க. குமார் இதுக்கு சரி என்று சொன்னான். நானும் அவனும் அடுத்து என்ன பண்ணலாம் என்று டீ கடையில் தம் அடித்து கொண்டே பேசிக்கொண்டு இருந்தோம்.


ரூம்க்கு வந்தா ஒருத்தனும் காணோம், எங்க போய் இருக்காங்கன்னு தெரியல. கொஞ்ச நேரம் கழிச்சு ஒருத்தன் அழுது கொண்டே ரூம்க்கு எட்டி பார்த்தான். அவன் முகம் எல்லாம் வீங்கி போய் இருந்தது.குமார் தான் அவனிடம் என்ன என்று விசாரித்தான், சீனியர் பசங்க வந்து அவங்க ரூம்க்கு எல்லோரையும் வர சொல்லிடு போனாக. போனதும் அவனுக இவனுகள அடிச்சு இருக்காங்க. குமார்க்கு இனிமேல சும்மா இருக்க முடியாது அவனுகள தட்டி வைக்கணும் என்று கதி கொண்டு இருந்தான் . நான் தான் கொஞ்சம் பொறுமையா இரு நாளைக்கு காலைல பாத்துக்கலாம் என்று சொன்னேன். ஒவ்வொருத்தனா வீங்கிய முகத்துடன் வந்தாங்க.



எல்லோரிடமும் பரிவாக பேசி மெஸ்க்கு சாப்பிட கிளம்பினோம், எங்க குரூப்ல இருக்குற ஒருதன் பேரு கணேஷ், மெஸ்க்கு போகும் வரை ஒரு வித பயத்துடனே வந்தான்.



விதி யாரைவிட்டது மெஸ்ல எங்களுக்கு முன்னாடியே சீனியர் பசங்க இருக்குற பரோட்டா எல்லாம் காலி பண்ணிட்டு இருந்தாங்க. கணேஷ் குமார சைடுல தள்ளிட்டு போனான். அவனிடம் அந்த சீனியர் கும்பல்ல இருந்த ஒருத்தன மட்டும் அடையாளம் கட்டி இவன்தான் எல்லோரையும் அடித்தான் என்று கூறினான் .



அவனுக போகுற வரைக்கும் ஒதுங்கியே இருந்தோம். குமார் அவனுக நல்ல தண்ணி போட்டு இருக்காங்க என்பதை அவங்களின் நடை வைத்தே கண்டுபிடித்து சொன்னான்.



சாப்பிட்டு விட்டு எல்லோரும் ரூம்க்கு கிளம்பும் போது குமார் , நான் மற்றும் கணேஷ் முவரும் பின்னால் வருகிறோம் என்று கூறி மற்றவர்களை அனுப்பி வைச்சோம்.


கணேஷ் சீனியர் பசங்க ரூம் எங்க இருக்கிறது என்று காட்டினான், அவங்க ரூம்க்கு கீழ தான் பாத்ரூம் எல்லாம் இருக்கும்.



குமார் கணேஷிடம் ரூம்க்கு போய் 3 துண்டு எடுத்துட்டு வா என்று அனுப்பினான்.


அவன் சென்ற பிறகு அடுத்த என்ன பண்ண போகிறோம் என்று அவன் சொன்னதை கேட்டு எனக்கு பாத்ரூம் போகணும் போல இருந்தது .



லுக் தொடரும்...