~~ROMEO~~

Everyday Starts with Happy :)

அப்படி இப்படி





தமிழ்படம் பார்த்து வயறு வலிக்க சிரித்தேன். படம் வெளிவருவதற்க்கு முன்பே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்துச்சு, அதை மறக்காம பூர்த்தி பண்ணி இருக்காங்க.
இந்த படத்தை பார்த்த 95% மக்கள் சூப்பர்ன்னு தான் சொல்லுறாங்க. சிலர் மட்டும் படம் குப்பைன்னு சொல்லுறாங்க. வேட்டைக்காரன் படத்தை சூப்பர்ன்னு சொன்ன ஒரு நண்பருக்கு இந்த படம் குப்பையாம்!!!!
அட ராமா நீங்க எல்லாம் திருந்தவே மாடிங்களா ??? அவன் சொன்ன ஒரு கண்டுபுடிப்பு தான் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
"மச்சி படத்துல கதையே இல்லடா. மத்த படத்தோட சீன் எல்லாம் உருவி இதுல சேர்த்து இருக்காங்க" எவ்வளவு நாள் கழிச்சு இந்த படத்தை பத்தி ஒரு கண்டுபுடிப்பு !!!!!

"இனிமேல நீ எந்த படத்தையாவது பத்தி பேசுன அன்னைக்கே நமக்குள்ள இருக்குற நட்பு முறிஞ்சிடும்டா" சொல்லி போன் கட் பண்ணினேன்.

--------------------------------------------------------------------------------------------

இந்த மெகா சீரியல் தொல்லை வர வர ஓவரா ஆகிட்டு இருக்கு. சாயந்திரம் வீட்டுல ரிலாக்சா ஒரு சேனல் பார்க்க முடியல. 7 மணிக்கு ஆரமிக்கிற இந்த கொடுமை நைட் 10 மணிவரைக்கும் நம்மளை படுத்தி எடுக்குது. வீட்டுல அப்பா கூட அடிமை ஆகிட்டாரு என்பதுதான் வேதனை :(. ஊருக்கு போனபோது தங்கமணி சொன்னா "7.30 - 8.30 நான் சீரியல் பார்ப்பேன் நீங்க குழந்தையை பார்த்துகோங்க"

அப்பவே பையனுக்கு ஒரு பாட்ட பாடி காமிச்சேன்

"உன்னை சொல்லி குதம் இல்லை,
என்னை சொல்லி குதம் இல்லை
காலம் செய்த கோலமடா "

என்ன?? என்றாள் தங்கமணி.

மீ தி எஸ்கேப்ன்னு ஓடிட்டேன்.

--------------------------------------------------------------------------------------------

சென்னை மாநகர் பேருந்துல நடத்துனர் என்று ஒரு சீட் இருக்கும். எவன் டிக்கெட் வாங்கினா என்ன வாங்காட்டி என்ன நம்ம சீட் நல்லா இருக்கான்னு பார்த்து உட்கார்ந்து இருப்பாங்க. போன வாரம் நான் வந்த பஸ்ல கூட்டம் இல்ல டிரைவர் சீட்க்கு ரெண்டு சீட் தள்ளி ஒரு பேமிலி உக்கார்ந்து இருந்தாங்க. அவங்க டிக்கெட் வாங்க கைல காசு வச்சு இருந்தாங்க ஆனா நடத்துனர் அவர் சீட்ல இருந்தபடியே காசு குடுத்து விடுங்க என்றார். அந்த நபர் அது எல்லாம் முடியாது நீங்க இங்க வந்து வாங்கிகோங்க என்றார், இதுல என்ன தப்பு இருக்கு?? அவரோட வேலையதானே செய்ய சொன்னார். செம சூடான அந்த நடத்துனர் அவர் முன்னாடி வந்து தாட்டு புட்ன்னு கத்த ஆரமிசிட்டார்!!. நான் ஒரு கவேர்மென்ட் சர்வென்ட் நீதான் என்னை தேடி வரணும், என்னைய வரசொல்லி சொல்லுறதுக்கு உனக்கு அதிகாரம் இல்லைன்னு ஏதோ சட்டத்தை இவரே எழுதினது மாதிரி லா பேசினார்.

கொஞ்சம் கூட டென்ஷன் பண்ணாம அந்த நபர் தன்னோட ID கார்டு எடுத்து காமிச்சு சொன்னார். இப்ப எனக்கு டிக்கெட் தரலைனா அப்பறம் நீ கன்சூமர் கோர்ட்க்கு வரவேண்டி இருக்கும். அவ்வளவு தான் அந்த நடத்துனர். கப்சிப்ன்னு ஆகிட்டார். அப்பறமா தான் தெரிஞ்சது அவரு ஒரு லாயர்ன்னு.

எனக்கு ஒரு கேள்வி எழுந்துச்சு. தமிழ்நாட்டுல சென்னைல மட்டும் தான் நடத்துனர்க்கு என்று தனியாக ஒரு சீட் குடுத்து இருக்காங்க. அது ஏன் ?? மத்த மாவட்டதில் இந்த மாதிரி எல்லாம் இல்லையே. ஏன் ??

--------------------------------------------------------------------------------------------
அடுத்த இடைதேர்தல்க்கு ஆளும் கட்சி ரெடி பண்ணிடாங்க. இன்னும் ஒரு வருடம் தான் இருக்கு பொதுதேர்தலுக்கு அதுக்குள்ள இன்னும் எத்தனை பேரு கோபாலபுரம் வீடுக்கு மாற போறாங்கன்னு தெரியல. தனது கட்சி ஆளுங்க ஜகா வாங்குறத பொறுக்காமல் அம்மாவே ரோடுக்கு வந்துட்டாங்க.
அட நான் சொல்லுறது விழுப்புரத்தில் நடக்கும் போராட்டத்தில் அம்மையார் கலந்துகொள்ள போறாராம். கட்சிய காப்பாத்த எப்படி எல்லாம் ஸ்டண்ட் அடிக்க வேண்டியதா இருக்கு பாருங்க .

--------------------------------------------------------------------------------------------

தல படம் ரிலீஸ் ஆகிடுச்சு.
எப்படியும் போல அண்ணன் கேபிளார் விமர்சனத்தை படித்தேன். எனக்கு தெரிஞ்ச ரிசல்ட் படம் ஓகே. அடுத்த மாஸ் படம் வரவரைக்கும் "அசல்" படம் பதிவர்களுக்கு "அவல்".

--------------------------------------------------------------------------------------------
போன பதிவை படிச்சிட்டு நண்பன் பேசும் போது கேட்டான் " நீ உண்மையிலே அந்த லேடி கிட்ட பேரு கேக்கலையா?? என்னால நம்ப முடியலையே" ரொம்ப டவுடா கேட்டான்.
ஊரபட்ட பொய் சொன்னா நம்புறாங்க ஒரு உண்மைய சொன்னேன் அத நம்பமாட்டேன்னு சொல்லுறாங்க. நம்புங்கபா நம்புங்க எனக்கு அவங்க பேரு தெரியாது.

--------------------------------------------------------------------------------------------

ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளிவரும் ராஜேஷ்குமார் தொடர்கதை இனி, மின்மினி படிக்க படிக்க சுவாரசியாம இருக்கு. என்னோட கணிப்பு எல்லாம் தோற்று கொண்டு இருக்கிறது என்பது உண்மையே.
நாவலா இருந்தா சுவாரசியம் தாங்காம கடைசி பக்கம் போய் படிச்சிடுவேன். இது தொடர்கதை என்பதால் வாரா வாரம் காத்து கொண்டு இருக்கவேண்டியதா இருக்கு. ரொம்ப நாள் கழித்து ராஜேஷ்குமார் கதையை படிக்கும் போது பழைய நினைவுகள் வருவதை தடுக்க முடியவில்லை.

--------------------------------------------------------------------------------------------


ரயில் பயணங்கள்



சென்றவாரத்தில் மகனை பார்க்க சென்று இருந்தேன். அது என்னவோ தெரியவில்லை நான் போற ட்ரெயின் மட்டும் எப்பயும் லேட்டாக தான் கரூர் செல்கிறது. அன்று வழக்கம் போல 1 மணிநேரம் லேட். தூக்கம் கலைந்தது, அது என்ன ஸ்டேஷன் என்று தெரியவில்லை மணி பார்த்தேன் காலை 5.30 இந்த நேரத்தில் கண்டிப்பாக திருச்சி தான் வந்து இருக்கும் என்கிற எண்ணத்தில் சிரிது நேரம் புரண்டு படுத்தேன் தூக்கம் முழுவதுமாக கலைந்தது. பனி வேகமாக வண்டியில் ஊடுருவி இருந்ததால் பாத்ரூம் கண்டிப்பாக செல்லவேண்டும் என்கிற நிலைமையை உண்டாகியது. எழுந்து பாத்ரூம் சென்றேன், சைடு லோயரில் ஒரு பெண்மணி முக்காடுடன் அந்த அதிகாலையில் ஒரு புத்தகத்தை படித்து கொண்டு இருந்தார் . திருச்சி தாண்டிடுச்சா என்று கேட்டேன், ஆமாம் என்றார் அப்பொழுது எனது தெரிந்தது அவர் பெண் போலீஸ் என்று, பனியில் இருந்து காப்பற்றிகொள்ள முக்காடு போட்டு இருந்தார். நீங்க எங்க இறங்கனும் என்று கேட்டார். கரூர் என்று சொல்லியவாறே அங்கு இருந்து நடையைகட்டினேன். பல் துலக்கலாம் என்று பிரஷ் , பேஸ்ட் உடன் வாஷ்பேசின் பக்கம் வந்தேன் அவர் இன்னமும் அதே பக்கத்தை தான் படித்து கொண்டு இருந்தார். அந்த புத்தகத்தை பார்த்த போது அவர் ஏதோ தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருக்கிறார் என்பது தெரிந்தது. . சிறிது நேரத்தில் அவர் கதவுக்கு அருகில் வந்து நின்றார், கதவின் ஜன்னல் வழியாக வந்துகொண்டு இருந்த பனியை கண்ணாடி ஜன்னலை கொண்டு அடைத்தார். குளிர் நின்றதின் நிம்மதியை அவரின் முகத்தில் பார்த்தேன். ஒரு புன்னகை செய்து தேங்க்ஸ் என்றேன்.

பதிலுக்கு புன்னகைத்தவர், எங்க இருந்து வரிங்க என்றார், சென்னை என்றேன் . சிறிது நேரத்தில் சகஜமாக பேசிக்கொள்ள ஆரமித்தோம். ஜன்னல் வழியாக சூரியன் எழுவது சிறிது தெரிந்தது. எனது வேலையை பற்றி கேட்டார், பொட்டி தட்டுறேன் என்று சொன்னதும் சிறிது முழித்தார். சிரித்து கொண்டே எனது வேலை பற்றி சொன்னேன். சம்பளம் எவ்வளவு என்றார் உண்மையை சொன்னால் இவ்வளவுதான என்று கேட்டு விடுவார் என்பதால் கொஞ்சம் அதிகமாக சொன்னேன். அவருக்கு லீவ் எப்படி என்று கேட்கும் போது அவரின் முகத்தில் ஒருவித ஏமாற்றத்தை பார்த்தேன். எங்களுக்கு லீவ் எல்லாம் இல்லைங்க 24 மணிநேரமும் நாங்க டுட்டில இருக்கணும். CL, EL, ML சிலதை சொன்னார். விஷேதத்துக்கு கலந்துக்க முடியாமல் சில நேரம் டுட்டி வந்துடும், எதிர்ப்பார்க்காத சில நேரத்தில் தூக்கம் இல்லாம வேலை பார்க்கவேண்டி வரும். சிறிது வினாடிகள் பேசாமல் இருந்தோம், எனது இருக்கைக்கு செல்கிறேன் என்று சொல்லி அவரிடம் இருந்து விடை பெற்றேன். 6 பர்த்தில் நான் மட்டுமே எழுத்து இருந்தேன் மற்றவர்கள் எல்லாம் தங்களது போர்வைக்குள் முடங்கி இருந்தார்கள். எனது பேக் எடுத்து கொண்டு அந்த பெண்மணி எதிரில் காலியாக இருந்த இடத்தில உட்கார்ந்தேன். 45 நிமிடத்தில் கரூர் வந்துவிடும் என்று அவரே பேச்சை ஆரமித்தார், நீங்க எது வரை போறீங்க என்று கேட்டேன், நானும் கரூர் தான் என்றார். இந்த ரூட் கொஞ்சம் ஈஸியா இருக்கும் அதனால தான் வரேன் என்றார். அந்த புத்தகத்தின் பக்கங்கள் புரட்டப்படாமல் அதே பக்கங்களில் இருந்தது.

மகாதானபுரம் என்கிற இடத்தில சிக்னலுக்காக வண்டி நின்றது. வெளியே இறங்கி நின்றேன், வயதான ஒரு கிழவி வாழைபழங்களை விற்றுக்கொண்டு வந்தார். அவர் கடந்து சென்ற பிறகு குல்லாய் போட்ட ஒருவர் பழம், பழம் என்று கத்தினார். அந்த கத்தல் அவரின் இருந்த பெட்டியை தாண்டி செல்லவில்லை, அந்த கிழவியோ 2 பெட்டிகள் தாண்டி சென்றுவிட்டார். அந்த அதிகாலையில் பழம் கிடைக்காத விரக்தியில் அவர் உள்ளே சென்றார். வண்டி கிளம்ப தயாரானது நான் படிக்கட்டில் நின்று கொண்டே பார்த்தேன், விரக்தியில் தளர்ந்து நடந்து வந்தார் கிழவி, கையில் விற்காமல் இருந்த பழங்களை எல்லாம் தலையில் இருந்த கூடைக்கு சென்றது . திரும்பி பார்த்தேன் அந்த பெண்மணி ஒரு நோட்டில் வண்டி எங்கு எல்லாம் நிற்கிறதோ அப்போது எல்லாம் குறித்து கொண்டு வந்தார்.

கரூர் வர 20 நிமிடங்கள் இருக்கும், புத்தகத்தை பார்த்தேன் அந்த பக்கம் அப்படியே இருந்தது படிப்பதை அவர் நிறுத்தி வெகு நேரம் ஆனதை காட்டியது அந்த பக்கம். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம், சென்னையில் சிறிது நேரம் வேலை செய்ததை பற்றி சொன்னார். கரூரில் எவ்வளவு நேரம் இருப்பிர்கள் என்று கேட்டேன் அடுத்து திருச்சி செல்லும் வண்டி 9.30 மணிக்கு வரும் அதில் செல்வதாக சொன்னார். வண்டி கரூர் வந்தடைந்தது இறங்கியவர் எனக்காக காத்துகொண்டு இருந்தார். நான் கிளம்புறேன் என்றேன், அடுத்த முறை திருச்சி வரும் போது பார்க்கலாம் என்று சொன்னேன். இது நடக்குமோ இல்லையோ ஒரு பேச்சுக்கு சொன்னேன். இருவர் பாதைகளும் பிரிந்தது என்னை எதிர் பார்த்து எனது மாமா காத்துகொண்டு இருந்தார். அடுத்த வண்டியை எதிர்பார்த்து அவர் நடைமேடையில் நின்று கொண்டு இருந்தார் கையில் அந்த புத்தகம்
அதே பக்கத்தை பிடித்தபடி இருந்தது.

வீட்டுக்கு சென்றதும் தான் எனக்கு நினைவுக்கு வந்தது அவரின் பெயரை கேட்காமல்விட்டது.


சில நட்புகள் எல்லாம் இப்படி தான் சொல்லாமல் கொள்ளாமல் வரும், அப்படியே சென்றுவிடும்.

சுட்ட கவிதை

எனது தோழி கண்மணி அனுப்பிய கவிதை இது. காதலில் ரொம்ப அவஸ்தைபட்டவர். அவரின் கவிதைகள் எல்லாம் ரொம்ப சோகமாக தான் இருக்கும். இன்று ஏனோ கொஞ்சம் சந்தோஷத்துடன் இந்த கவிதையை எழுதி இருக்கார். ரொம்ப நாளுக்கு பிறகு அவரிடம் தெரிந்த சந்தோஷத்தை. அவரின் ஒப்புதலுடன் சில மாற்றங்கள் செய்து இங்கே.



நீ
எனது
நடமாடும்
இரண்டாம் உயிர்
என் வானத்தில் இரு சந்திரன்
ஒன்று மேலே .
மற்றது என்னருகில் நீ.


காற்றின் மேல்
எனக்கு தீரா கோபம் !
ஐந்து அங்குல இடைவெளியில்
நீ
கொடுத்த முத்தத்தை
காற்று எனக்கு வேண்டும் என்று கவர்ந்து சென்றது ..


உன் இடையில் ஹெல்மட் வைத்து
நீ
நடக்கையில்
ரசித்து நான் சொல்லுவேன் . .
இத மாதிரி நான் நம்ம
குழந்தைய சுமக்கனும்டா என்று.
சொல்லுகையில் நெற்றி பொட்டில்
நீ
முத்தமிடுகையில்
அந்த ஆசையெல்லாம் அடங்கி செத்துவிட தோணுமடா


உன் தோளில் தெரியாத்தனமாய்
பட்டாம்பூச்சி உட்கார ....
நீ
அதை "சூ" என்று துரத்தினாய் ,,,,
நான் பதிலுக்கு அதை நசிக்கியே விட்டேன் ..
அத ஏண்டி கொன்னுட்ட என்று நீ கேட்டபோது
வாழ்கையில் அது செய்த மிகபெரிய தவறு உன்மேல் உட்கார்ந்தது அதற்கு உண்டான தண்டனையை நான் குடுத்தேன்...
உன் மூச்சு காத்து என்மேல் மட்டும் தான் படனும்டா.
நீ
எனது தெய்வம் டா .


உங்க வீட்டு தஞ்சாவூர்
பொம்மை மட்டும்
தலையை ஆட்டுவதற்கு
பதிலாக கண்ணடிக்க தொடங்கிற்றே . .
அதற்கும் உன்மேல் காதலா

நீ
முகம்
கழுவும் தண்ணீரை
நான் பருக வந்த போது ..
"போடீ லூசு " என்று நீ விரட்டினாய் ,
முகம் சுருங்கி போன என்னை
அள்ளி அனைத்து எச்சில் பண்ணினாய் கண்ணத்தை ..
சிணுங்கலுடன்
"நான் தண்ணி தானே கேட்டேன் ..
நீ
தீர்த்தமே கொடுத்துட்ட "


ஒருநாள் உன்னுடன் நான் பேசுகையில்
நகம் கடித்த போது
நகத்தை கடிக்காத என்று சட் சட் எனது விரலில் அடித்தாய்
அன்றில் இருந்து இன்று வரை
உன்முன் நகத்தை கடிக்காமல் நான் பேசியதில்லை

உனக்கு என்னடா பிடிக்கும்
என்று நான் கேட்ட போது
நீ
சொன்னாய் "உன்ன தாண்டி பிடிக்கும்"
உனக்கு என்று திருப்பி கேட்டாய்
"உன் நிழல் கூட பிடிக்கும் " என்று
நான் சொன்னவுடன் .
நீ
கட்டி அணைத்ததில்
உன் உப்பு நீர் வாசமும் பிடித்துப்போனது எனக்கு..



With Love
Romeo ;)