~~ROMEO~~

Everyday Starts with Happy :)

2009 எனது பார்வையில் - தொடர் விளையாட்டு

2009 என்னை எழுத தூண்டிய வருடம். படிப்பதில் இருந்த ஆர்வத்தை எழுத்தில் திருப்பிய வருடம். படிப்பதை ஒரு தவம் போல கழித்த நாட்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல, வலையுலகம் என்பது மிக பெரிய கடல் அதில் மிக அதிகமாக படித்துகொண்டு இருந்தேன். எங்கோ கிடைத்த ஒரு லிங்க் மூலம் படிக்க ஆரமித்த பழக்கம் என்னை ஒரு அடிமை போல ஆக்கிவிட்டது. யார் என்று தெரியாத பெரிய பெரிய எழுத்தாளர்களை ஒரு சேர வலைத்தளத்தில் வாசித்த நாட்கள் அதிகம். சாரு , ஜெயமோகன், ராமகிருஷ்ணன் என்று ஒரே நாளில் பலரின் எழுத்துகளை படித்தது ரொம்ப வித்யாசமான சுவையாக இருந்தது. புத்தகத்தின் மீது இருந்த மோகம் என்னை ஆட்டி படைத்த நாட்கள் அதிகம், ட்ரெயின் பாஸ் வாங்க வைத்து இருந்த பணத்தை புத்தகம் வாங்க செலவிட்டேன். வரலாறு புத்தகங்களை தேடி தேடி படித்த நாட்கள் எண்ணில் அடங்க முடியாததாக இருக்கிறது. பின்நவினத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல் படித்த புத்தகம் சிலது.


என்ன எழுதுவது என்றே தெரியாமல் எழுத வந்தவன். வாசிப்பு அனுபவமே இருந்த எனக்கு எப்படி எழுதுவது என்றே தெரியாமல் மனம்போன போக்கில் டைப் அடித்த நாட்கள் அதிகம். கொஞ்சம் போல் தெரிந்த எழுத்து நடையை எழுதுவதற்குள் சிரம்மப்படேன் ஆரம்பத்தில். சொந்த கதை, சோக கதை என்று சிலது எழுதினாலும் சிறுகதை எழுதுவதற்கு மிகவும் சிரமம் ஆகா இருக்கிறது எனக்கு. எப்படி எழுதினாலும் ஒரு பக்கத்துக்குள் ஒரு கதையை கொண்டு வர முடியவில்லை. பார்க்கலாம் 2010 ஆம் வருடம் எழுதுவேனா என்று. யார்றேன்று தெரியாமல் நண்பா, சகா, தலைவரே, தல, அண்ணே என்று அன்புடன் அழைக்கும் நண்பர்கள் நிறைய சேர்ந்துவிட்டன. உரிமையுடன் தவறை சுட்டி காட்ட, வயது விதியாசம் பார்க்காமல் கிண்டல் பண்ண பெரும் உதவி புரிந்தது பின்னுடமிடும் இடம்.

சொந்த வீடு கட்டியது, மகன் பிறந்தது என்று சந்தோசமாக இருந்த நாட்கள் அதிகம். மற்றவற்றை பார்த்தால் (+) (-) சரி விகிதத்தில் இருக்கிறது.

என்ன இருந்தாலும் 2009 ஆண்டு என்பது எனக்கு படிப்பதிலும் எழுதுவதிலும் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது.

--------------------------------------------------------------------------------------------------------

ஒரே கேள்விக்கு பலரின் வித்தியாச பதிலை படித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது . யாரவது இந்த விளையாட்டை ஆரமிப்பார்கள் என்று பார்த்தேன் ஒருவரும் முன் வரவில்லை . அதனால் இதை நானே தொடங்குவது என்று முடிவு செய்தேன்.

கேள்வி: 2009 எனது பார்வையில்

விதிமுறை :
ஒருவர் இரண்டு பதிவர்களை மட்டுமே அழைக்க வேண்டும்


நான் அழைக்க விரும்புவது

பரிசல்காரன் - இதை நன்றி கடன் என்று கூட சொல்லலாம், இவர் என்னை ஒரு தொடர் விளையாட்டு மூலம் நிறைய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
ஒரு சிறு வெளிச்சம் இருந்தால் போதும் நீங்கள் முன்னேறிவிடலாம் என்கிற வாசகத்துக்கு பொருந்தும் பெரிய வெளிச்சம் .

வால்பையன் - இவரை நான் சந்தித்ததை ஒரு பதிவாக எழுதி இருக்கிறேன். ரொம்ப அருமையான மனிதர். எதிர் விளையாட்டு விளையாட பிடிக்கும். வாரத்துக்கு ஒன்று தான் என்றாலும் பதிவு நச்சுன்னு இருக்கும்.
எனது பதிவுகளில் ஒரே ஒரு பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வாங்க காரணமாக இருந்தது வால்பையனுடன் ஒரு சின்ன சந்திப்பு என்கிற பதிவு.


திரும்பி பார்க்கிறேன் - 20/12/2009


மனைவி, மகனை பார்க்க ஊருக்கு போயிட்டு இருந்தேன், கரூர் கிட்ட வரும் போது எனக்கு எதிரில் இருந்த ஒரு அன்பர் என்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்று கேட்டார், நானும் சரி என்றேன்.

நீங்கள் எதற்காக வாழ்கிரிகள் ?? என்றார்.

என்னடா ஊருக்குள்ள இன்னும் கால் அடி எடுத்து வைக்கல அதுக்குள்ள 71/2 நம்மள தேடி வருதேன்னு நினைத்தேன்.

எதுக்காக கேக்குறிங்க ?

நான் ஒரு ப்ரொஜெட் பண்றேன் அதுக்காக வேணும் என்றார். இதுவரை 65 நபர்களிடம் இந்த கேள்வியை கேட்டாராம் அதில் 4 வயது ரொம்ப ஏழ்மையான பையன் சொன்ன பதிலும் 65 வயது ரொம்ப பணக்காரர் ஒருவர் சொன்ன பதிலும் ஒரே மாதிரி இருக்கு, வாழ்கையின் அர்த்தம் தெரியாமல் பதில் சொன்ன 4 வயது பையனும் , வாழ்ந்து முடித்த 65 வயது பெரியவரும் பதில் எப்படி ஒன்றாக இருக்கும் என்று நினைத்து பாருங்கள். நீங்க இப்பவே பதில் சொல்ல வேண்டும் அவசியம் இல்ல, என்னோட நம்பர் தரேன் அதுக்கு SMS மட்டும் பண்ணுங்க போதும் என்று அவரின் நம்பர் குடுத்தார்.

சார் நீங்க கேட்ட கேள்வி அருமையானது தான், இந்த கேள்வியை வேறு மாதிரியும் பார்க்கலாமா ?

எந்த மாதிரி ?

நீங்க எதற்கு பிறந்திர்கள்ன்னு வச்சுக்கலாமா?

அப்படி கூட வசிக்கலாம்.

அப்ப இந்த கேள்வியை எனது அப்பா , அம்மாவிடம் தான் நீங்க கேட்கணும், அவங்க என்ன சொல்லுவாங்க அவங்க அப்பா அம்மாவிடம் தான் இந்த கேள்வியை கேட்கணும்ன்னு, இப்படியே போன தலைமுறை, அதற்கு முந்தின தலைமுறைன்னு போயிட்டு இருக்குமே தவர பதில்வராது.

சற்று நேரத்தில் அவரின் பேச்சு வேறு பக்கமாக மாறியதை புரிந்து கொண்டேன். இயேசு பற்றி ரொம்ப சில்லாகி பேசினார், அவர் கண்டிப்பாக இந்த பூமியில் திரும்ப உயிர் பெறுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றார். நான் நாத்திகனும் அல்ல ஆத்திகனும் அல்ல, கோவில்க்கு போகணும்ன்னு தோணுச்சுனா போவேன், வேண்டாம்ன்னு தோணுச்சுனா போகமாட்டேன், ஒரு தடவை கோவிலுக்கு அருகில் சென்று ஏனோ போக பிடிக்காமல் எனது மனைவியை மட்டும் சாமி கும்பிட்டுவா என்று அனுப்பிவிட்டு நான் வெளியில் இருந்தேன். அப்படிபட்ட ஆளு நான் என்கிட்ட பிரசங்கம் பண்ணுறது எல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு அவருக்கு தெரியல. சிரிது நேரத்தில் கரூர் ஸ்டேஷன் வந்தது வெளியில் வந்ததும் நான் செய்த முதல் வேலை Xavier என்கிற பெயரை எனது மொபைல இருந்து அழித்தது தான்.

----------------------------------------------------------------------------------------

பர பர என்று ஒரு 1000 சரம் பட்டாசு வெடிச்ச மாதிரி இருந்துச்சு இந்தியா vs ஸ்ரீலங்கா முதல் கிரிக்கெட் மேட்ச். நினைச்சு பார்க்க முடியாத ஸ்கோர் சேஸ் பண்ண ஸ்ரீலங்கா வீரர்கள் தன்னம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியாது. தில்ஷன் ஆட்டத்தில் அனல் பறந்தாலும் சங்ககரா ஆட்டத்தில் தான் இடியுடன் கூடிய மின்னல் இருந்துச்சு. ஒரு கட்டத்துல வெறுத்து போய் சேனல் மாதி வேற சேனல் பார்த்தேன் திரும்ப neo sports சேனல் பார்த்தா இந்த இரண்டு பேரும் அவுட். இது நல்ல இருக்கேன்னு கொஞ்சம் நேரம் வேற சேனல் பார்க்கிறது , பிறகு கிரிக்கெட் சேனல்க்கு தாவ்றதுன்னு இருந்தேன், நினைத்த மாதிரியே விக்கெட் போய்ட்டு இருந்துச்சு, இந்தியாவும் ஜெய்ச்சிடுச்சு.அடுத்த மேட்சுல இதே மாதிரி பண்ணினேன் ரிமோட் போச்சு, இந்தியா தோத்துடுச்சு. இதுல இருந்து ஒண்ணு தெரியுது ரிமோட்க்கும் கூட இந்தியன் டீம் நிலைமை தெரிஞ்சி இருக்கு. அதுக்கே பொறுக்காம பனால் ஆகிடுச்சு
.

-----------------------------------------------------------------------------------------------



மேலே இருக்கும் படத்தை கொஞ்சம் உற்று பாருங்கள், மொபைல்ல கிளிக் பண்ணிய இடம் லயோலா கல்லூரி முன்பு, சாரு புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ள ஷேர் ஆட்டோல போயிட்டு இருந்தேன் அப்ப தான் இந்த பசங்க அபாயம் தெரியாமல் ரொம்ப மும்மரமா தம் அடிச்சிட்டு பேசிட்டு இருந்தாங்க. வீட்டில் உபயோகபடுத்தும் மின்சாரத்தை தொட்டாலே நாம காலி இவங்க கால் வச்சிக்கிட்டு இருக்குற இடம் ஒரு ஜங்ஷன் பாக்ஸ் உயர் அழுத்தம் உள்ள மின்சாரம் இருக்கும் இடம் ஷாக் அடிச்சிதுன்னு வைங்க ஆளே கருகி போய்டுவான். இதுல இன்னொரு கொடுமை அந்த மஞ்சள் நிற தார்பாய் இடத்துக்கு கீழே ஒரு டீ கடை இருக்கு.

ஒரு வார்த்தை இருக்கு படிச்சவனோ இல்ல படிக்காதவனோ சொல்லுவான் ஏதாவது ஒரு இடத்தில இதை கேட்கலாம், அது என்னனா

"படிச்சி இருக்கல அறிவு இல்ல ?? "

இதை இவர்களுக்கு நான் இங்கு சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன்.

------------------------------------------------------------------------------------

தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஒரு பாடல் இருக்கிறது " என் ஜன்னல் வந்த காற்றே " ரொம்ப மெலோடியா தொடங்கும் , அப்படியே வெஸ்ட்டன் அப்படியே செம குத்து . கேக்கும் போதே ரொம்ப வித்தியாசம் இருக்கு யுவன் மியூசிக். ரோஷினி, பிரியா , திவ்யா பாடி இருக்காங்க அவங்க அவங்க ட்ரக்கு ஏத்த மாதிரி நிறைய வித்தியாசதோட பாடி இருக்காங்க. மறக்காம கேளுங்க அப்பறம் அதை மறக்க மாட்டிங்க. 3 விதமான பெண்கள் , 3 விதமான பீட்ஸ் . கேட்கும் போதே தோணுது படத்தில் வரும் அந்த 3 பெண்களின் கேரக்டர் ஒரு பாடலில் சொல்லிவிட்டார்கள் என்று .




கேட்டாள் . . .

உனக்கு எத்தனை முறை சொல்லுவது
என்றாள்
தயவுசெய்து என் பின்னால் சுத்தாதே
என்றாள்
கடிதம் குடுக்குற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்
என்றாள்
அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்றாள்
கண்ணில் நீர்த்துளி படர
கேட்டாள்
ஏன் ரெண்டு நாளாவரல ??