~~ROMEO~~

Everyday Starts with Happy :)

என்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

திராத தலைவலியுடன் சென்றேன் மருந்து கடைக்கு

தேவதை ஒருத்தி என்ன வேண்டும் என்று கேட்டாள்

தலைவலி என்று இதய பகுதியை தொட்டு காமித்தேன்

சிரித்துகொண்டே கேட்டாள்





""லூசா பா நீ ""

திரும்பி பார்கிறேன் - 07/12/2009









சொந்த வீடு கட்டி குடியேறுவது என்பது எவ்வளவு பெரிய வேலை. கடந்த 6 மாதமாக இருந்த டென்ஷன் எல்லாம் ஒரு வழியாக முடிந்து நேற்று எங்களின் புதிய வீட்டுக்கு கிரக பிரவேசம் நடத்தி புதிய வீட்டில் குடி வந்துவிட்டோம். அப்பா அம்மாக்கு அளவில்லா மகிழ்ச்சியை குடுத்தது இந்த நிகழ்ச்சி. அப்பாவின் ஆசை என்பது ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே, 40 வருடங்கள் ஆகி விட்டது அவர் சென்னை வந்து. ரொம்ப கஷ்டப்பட்டு மேலே வந்தவர், அவரின் ஆசை நிறைவேறியது .

வீட்டிற்கு அப்பா அம்மாவின் பெயர் வைத்துளோம்.

அன்பாலே அழகான வீடு , ஆனந்தம் அதற்குள்ளே.......
----------------------------------------------------------------------------------

போன வார ஹாட் டாபிக் சேவாக் தான். மனுஷன் என்ன அடி அடிக்கிறார் ஒரு கட்டத்தில் எனக்கு சலிப்பே வந்து விட்டது அவர் அடிக்கும் பௌண்ட்ரி பார்த்து . பாவம் குலசேகரா தான் அவர் பவ்லிங் போட்டாவே அது எல்லை கோட்டை தண்டி தான் செல்கிறது. சங்ககார முகத்தில் சந்தோசத்தை பார்க்கவே முடியவில்லை.
ஒரு சில சமயம் இவரின் பேட்டிங் ஸ்டைல் பார்த்து வாய் அடைத்து போயிருக்கிறேன் , பல சமயம் சொற்ப்ப ரன்னில் அவுட் ஆகும் போது
ஏன்டா இவரை இன்னும் டீம்ல வச்சிருக்காங்க என்றே தோன்றும்.

எதுவாக இருந்தாலும் சரி இவரை பார்த்து எல்லா டீம்முக்கும் ஒரு பயம் இருப்பது என்னவோ உண்மைதான்.

----------------------------------------------------------------------------


ரேணிகுண்டா படத்தை பார்த்தேன். டிரைலர் பார்க்கும் போது இருந்த கற்பனையில் பாதி அளவே படத்தில் இருக்கிறது. ஆனால் படத்திற்கு செம ஓபனிங் என்றே சொல்லலாம்.

திரைகதையில் நிறைய ஓட்டைகள் இருக்கிறது. படத்தின் எலும்பு சக்தியின் ஒளிப்பதிவு தான். பர பர சீன் எல்லாம் செம கிளாசா இருக்கு. அதும் ஜானி போடும் அந்த சண்டை கட்சியில் இவரின் கேமராதான் ஸ்டன்ட் மாஸ்டர். கால் ஊனமுற்ற பையன் என்னமா நடிச்சி இருக்கான். காமெடி , ரவுடி என்று அவன் செய்யும் சேட்டைகள் பல பல.

இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் இதை விட நல்ல படத்தை இதை விட தரமானதாக தர முடியும்.

ஒரு தடவை பார்க்கலாம். விரிவான விமர்சனத்துக்கு தல கேபிள் சங்கர் பதிவை பார்க்கவும்.

------------------------------------------------------------------

ஒரு சொல்லை ஒருவர் எத்தனை முறை சொன்னால் கேட்க புடிக்கும் ? ஒரு விளம்பரத்தை எத்தனை தடவை பார்த்தால் புடிக்கும் ? ஒரு பாடலை எத்தனை தடவை கேட்டால் புடிக்கும்??

எல்லாவற்றுக்கும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா !!

சாப்பிட சாப்பிட அமுதமும் நஞ்சு ஆகும் என்பது மாதிரிதான் இருக்கிறது இந்த Tata DOCOMO விளம்பரம். சேனல் திருபினால் docomo , docomoன்னு சொல்லுறத கேக்கும் போதே நம்ம மண்டைல யாரோ டொக்கு டொக்குன்னு கொட்டுற மாதிரி இருக்கு. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ஆரமிக்கும் இந்த விளம்பரம் தாம்பரம் வரை ஒவ்வொரு ரயில் நிலையம் வரும் போது கேட்டு கொண்டு இருக்கும். முதலில் இந்த விளம்பரம் வந்த போது ரொம்ப வித்தியாசமான சவுண்டா இருக்கே என்று விரும்பி பார்த்தேன். எங்க போனாலும் இந்த ஜிங்கல்ஸ் கேட்டு கேட்டு எரிச்சல் தான் இப்பொது வருகிறது. அதும் அந்த Friends Train என்கிற விளம்பரம் வரும் போது எல்லாம் எங்க இருந்துதான் எனக்கு அவ்வளவு எரிச்சல் வருமோ தெரியாது. டூ ட் டூ , டூ ட் டூ , டூ ட் டூ என்று இவர்கள் சொல்லுவதை கேட்கும் போது இவர்களிடம் "டூ" விட வேண்டும் என்கிற எண்ணம் தான் வருகிறது.

இப்போ புதுசா UNINOR என்கிற ஒரு மொபைல் கம்பெனி சென்னையில் காலடி எடுத்து வைத்து இருக்கிறது, இவர்கள் என்ன பாடுப்படுத்த போறார்களோ ..
----------------------------------------------------------------------

இன்னைக்கு படிச்சது போதும் நாளைக்கு திரும்ப வந்து பாருங்க. புது பதிவு இருந்தா அத படிங்க, புதுசு இல்லை என்றால் ????






















இதையே படிச்சிட்டு போங்க..

My Sassy Girl - 2003 & 2008




அழகான ராட்சஸி என்று தமிழ்ல் பெயர் வைத்து இந்த படத்தை யாராவது ரீமேக் செய்து வெளியிட்டால் படம் பிச்சிக்கிட்டு ஓடும்.

ரொமான்டிக் காமெடி படங்களை பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது. ரொமான்டிக் படங்களில் காமெடி என்பது ஒரு இலை மாதிரி ஒட்டி கொண்டு வரும்.

ஆனால் இந்த படத்தில் காமெடிக்குள் தான் ரொமான்டிக் இருக்கிறது.

My Sassy Girl கொரியா மற்றும் ஆங்கிலதில் வெளிவந்த அருமையான படம்.

நான் முதலில் பார்த்தது My Sassy Girl - 2008 ஆங்கில பதிப்பை.




கதையின் ஓட்டம் நம்மை எங்கும் செல்ல விடாமல் கட்டி போட்டு விட்டது. ரொம்ப ரசனையான திரைக்கதை , சிரித்து சிரித்து ரசித்து ரசித்து பார்த்தேன்.

ஆங்கில பதிப்பை பார்த்த பிறகு கொரியன் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்கிற வெறி உண்மையில் எனக்கு வந்தது.


எனது ராசி அடுத்த நாளே அந்த படத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன். You Tube மூலமாக .

My Sassy Girl - 2003 (Korea)


உங்கள் காதலி என்னவெல்லாம் செய்தால் ரசிப்பிர்களோ அதை தான் கதையின் நாயகன் செய்கிறான். என்ன ஒரே வித்தியாசம் இதில் அவள் செய்வது இவனை இம்சை படுத்துவது தான்.

எல்லாத்துக்கும் ஒரு அளவு உண்டு அதை தாண்டும் போது தான் நாம் கோவப்படுகிறோம். ஆனால் இவனோ இவள் செய்யும் எல்லாவற்றையும் ரசிக்கிறான்.

இவளால் போலீஸ்யிடம் மாட்டிகொள்வது, பொது இடத்தில அவளின் ஹீல்ஸ் செப்பல் போட்டு கொண்டு நடப்பது, அவள் ரசிக்கும் அல்லது அவள் எதை எல்லாம் செய்ய வேண்டும் என்கிறாளோ அதை எல்லாம் மறுப்பு சொல்லாமல் செய்வது. அவள் அடிக்கும் அடிகளை பெற்றுக்கொண்டு அவன் காட்டும் முகப்பாவனைகள் எல்லாம் அவர்ளுடன் சேர்ந்து நாமும் ரசிக்கலாம்.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ரயில் வண்டியுள் ஒரு சிறுவன் கோட்டை கிழித்து கொண்டு இருப்பான். இவள் ஒரு போட்டி வைப்பாள் , அதில் அவன் தோற்று அவளிடம் அடிவாங்கும் காட்சி செம சிரிப்பை வர வைக்கிறது.

படத்தில் நடித்து இருக்கிற பெண்ணைவிட அந்த பையன் தான் சூப்பர். வீட்டில் அடிவாங்கும் போதும் சரி , அவளிடம் அடிவாங்கும் போதும் சரி அவன் காட்டும் முகப்பாவனை சூப்பர் ...

கொரியா படத்தில் இருக்கும் ரசனை , ஆங்கில படத்தில் இல்லை என்றே சொல்லலாம். ஆங்கில படத்துக்காக பலது மாற்ற பட்டு இருக்கிறது.

ஆங்கில படத்தில் ஹீரோ இமேஜ் கேட்டு விடாமல் இருக்கும். ஆனால் கொரியன் படத்தில் அது எல்லாம் இருக்காது, இயல்பான நடிப்பின் மூலம் அழகா தெரிகிறது .

----------------------------------------------------------------
படத்தில் ஒரு காட்சியை பார்த்த போது இதை எங்கையோ பார்த்து இருக்கேன் என்று யோசித்தேன்.

அட அது நாம சிவா மனசுல சக்தி படத்துல வர சீன்.

கொய்யால இப்படி எல்லாம் சுட்டு தான் தமிழ் சினிமா வளந்துட்டு இருக்கு ..

படத்தை பார்க்காதவர்கள் அட்லீஸ்ட் You Tube வெப்சைட்ல பார்த்துடுங்க.
Torrentல சரியா டவுன்லோட் ஆகவில்லை.