~~ROMEO~~

Everyday Starts with Happy :)

ரயில் பயணங்கள் - 1

சென்ற வாரம் தங்கையின் கல்யாணத்தில் கலந்து கொள்ள கோயம்புத்தூர் சென்று இருந்தேன். மாலையில் நடந்த வரவேற்பில் கலந்து கொள்ள முடியாத சுழ்நிலையில் இருந்ததால் காலையில் நடக்கும் முகுர்த்தத்தில் கண்டிப்பாக கலந்துகொள்ள சென்றேன். முன்பதிவின் இடம் கிடைக்காததால் பொது பெட்டியில் அமர்ந்து செல்ல வேண்டிய நிர்பந்தம். ரயில் நிலையம் சென்ற போது நீலகிரி எக்ஸ்பிரஸ் பொது பெட்டி நிரம்பி இருந்தது. அதில் பாதிக்கு பாதி வட மாநில ஆண்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள். உட்கார்வதற்கு இடம் இல்லாததால் முன்பதிவு பெட்டியில் ஏதேனும் இடம் காலியாக இருக்குமா என்று நப்பாசையில் ஒவ்வொரு பெட்டிளையும் ஒட்டி இருக்கும் சார்ட்யை பார்த்து கொண்டு வந்தேன். எல்லாம் புக் ஆகி இருந்ததால் ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் டிக்கெட் பரிசோதகரிடம் பேசி பார்க்கலாம் என்று அவர் வரும் வரை காத்துக்கொண்டு இருந்தேன்.

அடிக்கும் வெப்பத்திலும் கோட் போட்டு கையில் பெட்டியுடன் வருபவரை பார்த்தாலே கண்டு பிடித்து விடலாம் இவர் தான் டிக்கெட் பரிசோதகர் என்று. அவ்வாறே ஒருவர் வந்தார் யாரேனும் முந்தி கொள்வார்களோ என்கிற பயத்தில் அவர் பெட்டியில் ஏறும் முன்னரே " சார் ஓபன் டிக்கெட் தான் ஏதேனும் பர்த் கிடைக்குமா" என்று பொய்யான சிரிப்பு சிரித்து கேட்டேன். "S9ல உட்காருங்க வரேன்" என்றார், அவருக்கு என்று ஒதுக்க பட்டு இருக்கும் சைடு சீட்டில் எனக்கு முன்னர் ஒரு போலீஸ்காரர் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு முன்னால் காலியாக இருந்த ஒரு இடத்தில உட்கார்ந்தேன். அவரை பார்த்தேன் அவரின் கையில் ராஜேஷ்குமார் க்ரைம் நாவல். ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒருவர் ராஜேஷ்குமார் நாவல் படிப்பதை பார்க்கும் போது என்னை அறியாமல் சந்தோஷ சிரிப்பு வந்தது. அதை அவர் கவனித்து விட்டார் போல ஏன் சார் சிரிகிரிங்க என்று கேட்டு தனது கைகுட்டையால் முகத்தில் துடைத்து கொண்டார். எனக்கு கொஞ்சம் சங்கடம் ஆகிவிட்டது " ஒன்னும் இல்ல சார் ரொம்ப நாள் கழித்து ராஜேஷ்குமார் நாவலை ஒருத்தர் படிக்கிறத பார்க்கும் போதும் நான் ராஜேஷ்குமார் நாவல் படித்த நியாபகம் வந்துச்சு அதான் சிரிச்சேன்" என்ற உண்மையை சொன்னேன்.


ரசனை ஒற்றுமையோ என்னவோ இரண்டு பேரும் அரகோணம் வரும் வரை எங்களை பற்றி அறிமுகம், சொந்தபந்தம், வேலை, சேமிப்பு, படிப்பு, பொழுதுபோக்கு என்று இடைவேளை இல்லாமல் நீண்டு கொண்டு இருந்தது எங்கள் பேச்சு. அவரின் வயது 35 அல்லது 40 இருக்கும், ரொம்ப மரியாதையை குடுத்து பேசினார், கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்து இருந்ததால் அவரின் பேச்சில் மரியாதையை அவர் அறியாமல் வந்தது. டிக்கெட் பரிசோதகர் எனக்கு அடுத்த பெட்டியில் இடம் ஒதுக்கி தந்தார் இந்த முறை உண்மையான சிரிப்பு சிரித்து அவருக்கு நன்றி சொன்னேன். விடைபெறும் நேரம் என்பதால் அவரிடன் கை குலுக்கி சென்றேன். எனது சீட் நம்பர் தெரிந்து கொண்டவர் நிம்மதியாக துங்குங்க என்று சொல்லிவிடு அவர் தூங்காமல் பயணத்தை மேற்கொண்டார். அறிமுகம் இல்லாத ஒருவரிடம் அந்த ஒரு மணிநேரம் பேசியது நெருங்கிய நண்பன் இடம் பேசியதை போன்று இருந்தது.


எனக்கு குடுத்தது லோயர் பர்த் அங்கு சென்று பார்த்த போது வேறு ஒருவர் படுத்து கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் , இது என்னுடைய இடம் சார் என்றேன் மனிதர் நன்றாக தூங்கி கொண்டு இருந்தார் போல எழுந்ததும் என்னை எரித்துவிடுவது போல ஒரு பார்வை பார்த்தார். " அது எல்லாம் முடியாது வேற எங்கயோ போய் படு" என்று அவர் பேசி கொண்டு இருந்தார். எனக்கு ஒன்றும் புரியல " சார் இது எனக்கு ஒதுக்கிய இடம் நீங்க படுத்து இருக்கிங்க தப்பு உங்க மேல தான் இருக்கு முதல்ல எழுந்துரிச்சு உங்க பர்த்ல போயப்படுங்க" என்று நானும் எரிச்சலுடன் பேசினேன். எனக்கு எந்த சங்கடமும் இல்லை படுப்பதற்கு. அதை அவர் கனிவாக சொல்லி இருந்தால் கண்டிப்பாக சரி என்று சொல்லி இருப்பேன் ஆனால் ஏதோ அவரின் இடத்தை நான் கேட்டது போல என்மீது கோவபட்டது என்னையும் கோவமடைய செய்தது . அவருக்கு எதிரில் படுத்து இருந்த ஒரு பெண்மணி என்னிடம் மேல் பர்த்ல படுத்கொங்க சார் இவரால மேல ஏற முடியாது என்று வேண்டுகோள் விடுத்தார். அவரை பார்ப்பதற்கு ரொம்ப சாந்தமாக தெரிந்தார், " வேண்டுகோள சொன்ன கேக்குறேன் இவர் என்னமோ அதிகாரம் பண்றாரே?? . "மன்னிச்சிகோபா கொஞ்சம் புத்தி சுவாதினம் இல்ல இவருக்கு" என்று சொன்னார்.

ஓ நாம கூட கொஞ்சம் அவரசப்பட்டோம் என்று அவரிடம் வருத்தம் தெரிவித்து மேல் ஏறி படுக்க சென்றேன்.


என்னை யாரோ தட்டி எழுப்புவது போல இருந்தது. கண்களை திறந்தால் அந்த போலீஸ்காரர் "வடகோயம்புத்தூர் ஸ்டேஷன் வந்துடுச்சு சார் எழுந்துருங்க" என்றார். மணி பார்த்தேன் காலை 4. நன்றி கூறி கீழே இறங்கினேன் சிலர் என்னை ஒருமாதிரியாக பார்த்தார்கள். போலீஸ்காரர் வந்து எழுப்பியதை பார்த்தது நாளவோ இல்லை வேறு மாதிரி நினைத்தார்களோ என்னவோ ??


இறங்கிய பின் பார்த்தேன் அந்த பெரியவர் தலைக்கு அந்த பெண்மணி குல்லா மாட்டி விட்டு கொண்டு இருந்தார் பாசத்தின் பிணைப்பு ..

திரும்பி பார்க்கிறேன் - 26/10/2009

இரவை கண்டு பயபடாதவர்கள் பத்தில் இரண்டு பேர் தான் இருபார்கள். எனக்கு தனியாக இரவில் தூங்குவது என்பது கொஞ்சம் அல்ல நிறையவே கிலி. எல்லா விளக்குகளையும் எரிய விட்டே தூங்குவேன். எனது சிறிய வயதில் நாங்கள் குடியிருந்த இடத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும் நான் படித்த டியூஷன் சென்டர். நடந்தே சென்று வந்து விடுவேன். வழி எங்கும் தெரு விளக்கு எரிந்து கொண்டு இருந்தாலும் ஒரு குறிப்பிட இடத்தில மட்டும் கும் இருட்டு மையம் கொண்டு இருக்கும் அது ஒரு 50 அடி தூரமே இருந்தாலும் எனக்கு அந்த இடம் தாண்டி தனியாக செல்ல ரொம்ப பயம். அந்த இருட்டு துடங்கும் இடத்தில நின்று கொண்டு இருப்பேன், ஏதேனும் வண்டி வந்தால் அந்த வண்டியை வேகமாக பின்னாடியே ஓடுவேன் அந்த இடம் கடக்கும் வரை. போன வாரம் அந்த வழியாக நான் பைக்கில் சென்றேன் அதே இடம் ஆனால் அங்கு வேறொரு பையன் நின்று கொண்டு இருந்தான் அவனை நான் கடந்து செல்லும் போது எனக்கு பின்னாடி ஓடி வந்தான். எனக்குள் நானே சொல்லி கொண்டேன் "என்னை போல் ஒருவன்".


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எதற்கு வாங்கினேன் என்று தெரியாமல் வாங்கிய படங்கள் பலது ரொம்ப நன்றாக இருக்கும். விரும்பி வாங்கிய படங்கள் ரொம்ப சொத்தையாக இருக்கும். அதில் இந்த படத்தை எதற்காக வாங்கினேன் என்று தெரியாமலே வாங்கி வைத்து அது CD pouch ரொம்ப நாட்களாக இருந்தது. போர் அடித்ததால் இதை பார்க்கலாம் என்று படத்தை பார்த்தேன். படத்தின் பெயர் Roman Holidays - 1953 ஆம் ஆண்டு வெளிவந்தது ,


Wow .. Super ...
படத்தின் சுருக்கம் : இளவரசி ஆனி தனக்கு இருக்கும் வேலை பளுவை தாங்கிக்க முடியாமல் ஒரு நாள் அரண்மனையை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறி விடுகிறார். வந்தவர் ஒரு நாள் முழுவதும் அரண்மனைக்கு செல்லாமல் ரோம் நகரை ஹீரோவுடன் சந்தோசமாக வளம் வருகிறார். பின்பு ஹீரோவிடம் காதல கொண்டு வெகு சிரமத்துடன் அவரை பிரிந்து தனது அரண்மனைக்கு செல்கிறார்.


படத்தில் எனக்கு பிடித்து முன்று விஷயங்கள்
1. ஒளிப்பதிவு . 1953 எடுத்த படம் கருப்பு வெள்ளையில் எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்து இருப்பது அருமை. கண்டிபாக ஜக்கி சேகர்க்கு இந்த படத்தை பார்க்க சொல்லி பரிந்துரைக்கிறேன்.

2. படத்தில் உள்ள நகைச்சுவை. ஆரம்பம் முதல் இறுதி வரை எல்லாவற்றிலும் நகைச்சுவையை அழகாக கையாண்டு இருகிறார்கள்.

3. படத்தில் கிளைமாக்ஸ் , தமிழ் அல்லது இந்திய சினிமா போன்று இல்லாத ரொம்ப எதார்த்தமான கிளைமாக்ஸ். நாம் எதிர் பார்ப்பை வேறு ஒரு கண்ணோட்டத்தில் அழகாக முடித்து உள்ளார்கள் .


அருமையான படம் . DVD கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கவும் .

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் நண்பன் சந்தோஷ் உடன் தம் அடிக்க அடிகடி செல்வேன். போன வாரத்தில் நாங்கள் தம் அடித்து விட்டு லிப்டில் ஏறினோம் எங்கள் உடன் எங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் உடன் வந்தார். நாங்கள் இறங்க வேண்டிய ப்ளோர் வந்ததும் சந்தோஷ்யிடம் இருந்த மொபைல் போன் பார்த்து அவர் இது Nokiaவா இல்ல blackberryயா என்று கேட்டார். நான் அவன் பதில் சொல்வதற்கு முன் " சார் இது கொரியன் செட் " என்று உண்மையை சொல்லி சிரித்து விட்டேன் . கேட்ட உடன் அவரும் சிரித்துவிட்டார் எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. நண்பனை டம்மியாகியத்தில் . ஹா ஹா ஹா என்று ஹால் அதிர சிரித்து கொண்டு வந்து உடன் வேலை பார்க்கும் நண்பர்களிடம் சொல்லி கொஞ்ச நேரம் வாய் விட்டு சிரித்தேன். பாவம் சந்தோஷ் தான் கொஞ்சம் கடுபாகிடான். மேட்டர் நடந்தது மாலையில் அடுத்த நாள் ஆபீஸ்க்கு மதியம் வந்த போது காலை ஷிபிடில் வேலை பார்த்து கொண்டு இருந்த ஒரு தோழி " என்ன ராஜன் நேத்து சந்தோஷ் மானத்த வங்கிடிங்க போல" என்று கேட்டார். மேட்டர் அதுக்குள் இந்த ஷிபிட் ஆளுக்கு எல்லாம் தெரிஞ்சுடிச்சா என்று சிரித்து கொண்டே அந்த கதையை மறுபடியும் சொன்னேன்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரயில் பயணங்கள் என்கிற தலைப்பில் வாரம் ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன் அவ்வளவு கதைகள் , சம்பவங்களை உள்ளது என்னிடம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வாரம் ஒரு மொக்கை + விடுகதை.
" ஒரு தகர பெட்டிக்குள் 50 மோகினி பிசாசுகள் "

அது என்ன ?
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;


"லேடீஸ் காலேஜ் பஸ் "


நான் இப்ப எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

தனி மனித சுதந்திரம், MP3 Player அல்லது ஊளையிடுவது


தனி மனித சுதந்திரம் என்றால் என்ன ? உனது செயல் மற்றவர்களை துன்புருத்தாத எந்த ஒரு செயலும் அது தனி மனித சுதந்திரம். ஆனால் ஒருவர் தனது இஷ்டம் போல ஒரு பொது இடத்தில் மற்றவர்களின் விருப்பு, வெறுப்பு தெரியாமல் செய்யும் செயல் தனி மனித சுதந்திரம் ஆகுமா?

FM ரேடியோ, MP3 பிளேயர் உள்ள மொபைல் போனில் இருக்கும் சௌகரியம் நமக்கு கிடைத்த வரம் என்று சொல்லலாம். தொலைதூர பயன்களில் நம்மை சுட்டு எரிக்கும் வெயிலோ அல்லது இரவில் தூக்கம் வராமல் பயணத்தை மேற்கொள்ளும் போது நமக்கு மட்டுமே கேட்கும் படி நமக்கு பிடித்த பாடல்களை ஹியர் போனில் கேட்டவாறு பயணத்தை ரசித்து கொண்டே செல்லலாம். ஆனால் இந்த மாதிரியான வரமே நமக்கு இம்சை ஆனால் ??

மின்சார ரயிலில் தினமும் பயணம் செய்வதால் புத்தகம் இல்லாத சமயங்களில் அவ்வபோது ஹியர் போனில் பாடல்கள் கேட்டு செல்வேன். கையில் எதாவது புத்தகம் இருக்கும் எனில் அன்று எனது சிந்தனை எல்லாம் புத்தகத்தில் தான் இருக்கும்.

நேற்று இரவு பணி முடித்துக்கொண்டு கிண்டியில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார வண்டியில் ஏறினேன். கையில் சாரு எழுதிய "முடு பனி சாலை". இந்த புத்தகத்தை இதற்கு முன்னர் இரண்டு முறை படித்து இருந்தாலும் திரும்ப படிக்க துண்டியது. புத்தகத்தை இரண்டு பக்கங்கள் கூட படித்து இருக்க மாட்டேன் எனக்கு பின்னால் இருந்த ஒரு அன்பர் "அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்" என்று தனது மொபைல் போனில் லௌட் ஸ்பீக்கர்ல போட்டுவிட்டார்.அவர்கள் பார்ப்பதற்கு முரட்டு ஆசாமி போல இருந்தார்கள். சந்தோசமாக பாடலை ரசித்தார்கள் என்பதை அவர்களின் வாய் முணுமுணுபு காட்டியது.

அவர்களின் சந்தோசம் என்பது என்னை எரிச்சல் அடைய வைத்தது. பெட்டியில் இடம் காலியாக இருந்ததினால் வேறு ஒரு இடம் மாறி உட்கார்ந்தேன். விட்ட இடத்தில் இருந்து ஆரமித்தேன், 10 பக்கங்கள் கூட தாண்டி இருந்து இருக்க மாட்டேன் "கருத்த மச்சான் " காதில் வந்து விழுந்து மண்டை காய வைத்தது. இப்பொழுது எனக்கு எதிரில் இருந்த இன்னொரு அன்பர். இங்கயுமா என்கிற கேள்வியுடன் அவரை ஒரு பார்வை பார்த்தேன், என்னை ஏற்எடுத்து பார்த்தவர் அந்த பாட்டுக்கு தனது கால்களில் தாளத்தை போட்டார். அவருடைய தாளம் என்னை தாளாத துயரத்தில் ஆழ்த்தியது.

அவர் யாரை பற்றியும் கவலைப்படாமல் ஒலியை அதிகமாக வைத்து பாடல் கேட்டு கொண்டு இருந்தார். எனது சிந்தனை எல்லாம் இப்பொழுது அந்த பாடலில் வரும் "ட்ட்யே ட்ட்யே" என்கிற BGM மேல் இருந்தது. இவரும் அந்த கோஷ்டி ஆள் போலவே இருந்தார். இரவில் செல்லும் அனைத்து ரயில் வண்டிகளிலும் பெண்கள் பெட்டியில் ஒரு போலீஸ்காரர் இருப்பார் இது பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட பாதுகாப்பு இதை பேசாமல் பொது பெட்டியிலும் அமல்படுத்தினால் தேவலாம் இந்த மாதிரியான இம்சைகளிடம் இருந்து நம்மை காப்பற்றி கொள்ள. கொஞ்சம் தைரியம் வரவழைத்து கொண்டு அவரிடம் படலை நிப்பாட்ட சொல்ல நினைத்தேன். அதற்கு வேலையில்லை என்பது போல அவருக்கு யாரோ போனில் கூப்பிட்டர்கள்.
அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது எனக்கு அவரின் வாயால் "ஹல்லோலோ" என்று அவர் போட்ட சத்தம் அந்த பெட்டியில் இருந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. பின்பு அவரின் பேச்சை அந்த பெட்டியே கேட்கும் படி ஊளையிட்டார் . படிக்கும் சுவாரசியமே எனக்கு போய்விட்டது , புத்தகத்தை மூடி வைத்து கதுவு அருகில் வந்து நின்று கொண்டேன். ரயில் செல்லும் வேகத்துக்கு காற்று பலமாக எனது முகத்தில் மோதியது இருந்தாலும் அந்த காற்றில் இருந்த ஈர பசையை ரசித்தேன்.


திரும்பி பார்த்தேன் ஊளை இன்னும் ஓய்ந்த பாடு இல்லை ...