~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பி பார்கிறேன் - 12/10/09

வேட்டைக்காரன் பாட்டு ரிலீஸ் ஆனாலும் ஆனது எங்க ஏரியால பசங்க ஸ்பீக்கர்ல போட்டு கலக்கிட்டு இருக்காங்க. சீனா மற்றும் கொரியா மொபைல் யூஸ் பண்ணுறவங்க புலி வருது பாட்ட ரிங்க்டோனே வச்சிக்கிட்டு செம ரகள பண்ணுறாங்க.


பக்கத்துக்கு ஏரியா கோவில்ல எதோ விசேஷம் நண்பன் வீடும் அங்கதான் இருக்கு. அவன பார்க்கலாம்ன்னு போனேன் பத்து ஸ்பீக்கர்ல புலி வருது பாட்டு பிச்சிக்கிட்டு பாடுது. அவன் இருக்குற தெருல ஒருத்தர் வீடும் திறந்து இல்ல எல்லா கதவு , ஜன்னல் எல்லாம் முடி இருக்கு அங்க இருந்தா பேச முடியாதுன்னு அவனும் நானும் கொஞ்சம் தூரம் இருக்குற ஒரு டீ கடைக்கு போனோம்.
"ஏன்டா மச்சி இந்த மாதுரி சவுண்ட் அதிகமா வச்சி பாட்ட போடுறாங்களே ஏன் இப்படி பண்ணுரிங்கன்னு அவங்கள கேட்க மாட்டிய?? பாரு உன் வீட்டுக்கு முன்னாடிதானே ஸ்பீக்கர் கட்டி இருக்காங்க!! சரியான காட்டு மிராண்டி பசங்கள இருப்பானுக போல" என்று கண்ட மேனிக்கு அவங்களை திட்டினேன். அதுக்கு அவன் சொன்னான், இந்த ஸ்பீக்கர் செலவ இவங்க ஏரியா விஜய் ரசிகர் மன்றம் ஏத்து இருக்கு அதும் இல்லாம இவன மாதுரி பசங்க 10 பேருக்கு வேட்டைக்காரன் படம் முதல் ஷோக்கு ப்ரீயா டிக்கெட் தராங்களாம் அதனால இவனுக ஏதும் கண்டுகிறது இல்ல". பேசி முடிச்சி அவன வீட்டுல டிராப் பண்ணலாம் என்று வீட்டு அருகில் சென்றோம்.


ஒலி பெருகியில் ஒருவர் கோவில் திருவிழாக்கு ஸ்பன்செர் பண்ணவங்க பெயர் சொல்லிடு இருந்தாரு. " மைக் , ஸ்பீக்கர் மற்றும் மின்சார உபகரணம் ஸ்பன்செர் செய்த நமது விஜய் ரசிகர் மன்ற தலைவர் நண்பர் சரவணனை மனமார வாழ்த்துகிறோம்"

எனது நண்பன் பெயர் சரவணன்.

என்னை பார்காமலே வீட்டுக்குள் சென்றான்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேத்து The Taking of Pelham 1 2 3 இந்த படத்த பார்த்தேன் . Denzel Washington மற்றும் John Travolta நடிச்சது . படம் ஆரமிச்ச 5 ஆவது நிமிடத்தில் இருந்து திரைகதை செம வேகத்தில் செல்கிறது.
கதையின் சுருக்கம் : John மற்றும் அவரின் சகாக்கள் முன்று பேரு சேர்ந்து லோக்கல் ட்ரைன் கடத்துகிறார்கள். கடத்திய பிறகு John லோக்கல் ட்ரைன் கண்ட்ரோல் சென்டர்க்கு தொடர்பு கொள்கிறான். அந்த தொடர்பை ரயில்வே கட்டுபாடு அறையில் இருக்கும் சாதாரண ஊழியர் Denzel யிடம் ரயில் கடத்த பட்டு இருப்பதையும் இன்னும் ஒரு மணி நேரத்தில் 10 மில்லியன் டாலர் பணம் வேண்டும் அப்படி வர வில்லை என்றால் அங்கு பிணைகைதி யாக இருக்கும் 19 நபர்களில் 61வது நிமிடத்தில் இருந்து கொலை செய்யப்படும் என்று மிரட்டுகிறான். இதற்கு பிறகு நடக்கும் பர பர கதை சூப்பர்.

Denzel Washington நடிப்பு அருமை ரயில் கடத்தப்பட்டு இருப்பதில் இருந்து இவரின் முக மாற்றங்கள் மாறும் ஒவ்வொரு சீன்லையும் கலக்கி உள்ளார்.
John Psycho வில்லன் என்றே சொல்லலாம். ஹிஸ்டிரிய நோயாளி போல சில சமயம் காட்டு கத்தல் கத்துவதும். பின்பு அருமையாக சிரிப்பதும் என்று கலக்கி உள்ளார்.

Dont miss the chance to watch this Movie.

இந்த படம் ஆரமிக்கும் போது தட்டில் சாப்பாடு போட்டு உட்கார்ந்தேன் படம் முடியும் வரை பாதி கூட சாப்பிடவில்லை. ஒரு சீன் கூட மிஸ் பண்ண முடியாமல் பார்த்து கொண்டு இருந்தேன். அம்மாவிடம் சரியான டோஸ் வாங்கினேன். பின்ன சாப்பாடு போட்டு ஒரு மணி நேரம் ஆகியும் பாதி சாப்பாடு கூட சாப்பிட வில்லை என்றால்??
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வாரம் நமக்கு தலை தீபாவளி. மாமனார் மாமியார் தீபாவளிக்கு வந்து அழச்சிட்டு போய்டாங்க ஆனா எப்படி போறதுன்னு தான் தெரியல. எப்பயும் ரயில தான் போவேன் டிக்கெட் சுத்தம்மா இப்ப இல்ல ஸ்பெஷல் ட்ரைன் டிக்கெட் எல்லாம் வைடிங் லிஸ்ட் 300க்கு மேல இருக்கு. நாளைக்கு தக்கல் டிக்கெட் ஒபெனிங் இதுக்காக காலைல 5 மணிக்கும் எல்லாம் ரயில்வே ஸ்டேஷன் போகலாம்ன்னு இருக்கேன். பதிவர்கள் யாராவது தக்கல் டிக்கெட் எடுக்குறவங்க இருந்திங்கன சென்னை சென்ட்ரல் அல்லது சென்னை பீச் ஸ்டேஷன் வரதா இருந்த சொல்லுங்க சேர்ந்தே போகலாம். ஆன்லைன்ல புக் பண்ணல்லாம் என்று ஐடியா குடுகத்திங்க IRCTC சர்வர் எல்லாம் 8 to 9am சுத்தமா அவுட் ஆகிடும். அனுபவம் தான் வேற என்ன ....

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவர் சுந்தர்ரை பதிவர் ரோசா தாக்கி சம்பவம் நினைக்கும் போது ரொம்ப கவலையா இருக்கு. அவர் நலமுடம் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார மொக்கை ஜோக்

போன நூற்றாண்டு மில்லியன் டாலர் வேள்வி ஆனால் இது வரைக்கும் யாராலயும் பதில் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களே..




""கார் வச்சி இருந்த சோப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சி இருக்காங்க"" ??

அட பார் ரா... லுக் - 5

அட பார்ரா இந்த காமெடிய . ஏன்டா உங்க ஊருகாரன் எல்லாம் இங்க படிக்கிறதா நீ இது வரைக்கும் சொல்லவே இல்லையே என்று குமார் கேட்டான்.

டேய் அவன் எங்க ஊரு இல்லடா பக்கத்துக்கு ஊரு, நேத்து தான் எனக்கே தெரியும். எக்ஸாம் பீஸ் கட்ட போன இடத்துல இவன் நின்னுட்டு இருந்தான். நான் சீனியர் பையன்னு பயந்து ஒதுங்கி போனேன், அவனே கூப்பிட்டு பேனா கேட்டான். நான் பயந்துடே போனேன், ஆனா அவன் சிரிச்சிட்டு இருந்தான், அப்பறம் தான் சொன்னான் காலேஜ் முடிச்சி ஒரு வருஷம் ஆச்சாம் இப்ப அர்ரியர்ஸ் எழுத வந்து இருக்கான். நான் எந்த ஊருன்னு கேட்டான் சொன்னனேன் இவன் பகத்து ஊரு. டைம் ஆச்சுன்னு நான் கிளம்பிட்டேன். இங்க என்னடானா இவன் அடி வங்கி இருக்கான்.

சரி ரமேஷ் வரான் என்னன்னு கேளு.

"மச்சி செயின் கிடைச்சிடுச்சு டா தலைகாணி குள்ள இருந்துச்சு. என்னடா ஒரே கும்பலா இருக்கு?? எசகு பிசகா அடிச்சதுல படாத எடத்துல பட்டு மண்டைய போடுடான இவன் ? சொல்லுடா எப்படியும் காலேஜ் லீவ் விடுவாங்கள" என்று ஸ்கூல் பசங்க லீவ்க்கு அலையுற மாதுரி கேட்டான்.


"டேய் ஓவர்ரா பேசாத கொஞ்ச நேரம் பொத்திட்டு இரு" என்று மடக்கினேன் .

கணேஷ் எங்கடா ?

அவன் ரூம்ல இருக்கான், இருட்டுல அந்த அடி அடிச்சான்ல இப்ப கூப்பிட்டா இவனுகள பார்த்து பயபடுறான். நான் வரல நீ போய் உங்கள கூட்டிடு வான்னு ஜகா வாங்கிட்டான் .

சரி வா நாம இடத்த காலி பண்ணலாம் போற வழில நான் சொல்லுறேன் இப்ப கொஞ்சம் அமைதியா வா.

"சரி அடி வாங்கினவன் முஞ்சிய பார்த்துட்டு வரேன் இரு" என்று கிளம்பினவனை குமார் அவனின் தோல் பட்டையை அழுத்தி இழுத்து கொண்டு வந்தான்.

போகிற வழியில் அவனிடம் எல்லாவற்றையும் சொன்னேன். பயபுள்ள ஏற்கனவே பீதில இருகுறவனையும் பேதி வரவசிடுவான் போல அந்த மாதுரி பயப்படுத்தி விட்டுட்டான்.


மச்சி இந்த மேட்டர் நம்ம நாலு பேருக்கு தான் தெரியும் இத தப்பி தவறி யாரும் யார்கிட்டையும் சொல்லிட கூடாது. கடுகு அளவு மேட்டர் கசின்ஜாலும் நம்ம நாலு பேருக்குதான் ஆப்பு அத தெரிஞ்சிகோங்க.


ரூம்க்கு வந்தா கணேஷ் எங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தான்.

"டேய் வெளிய போய்டாதடா நீ அடிச்ச அடில அவன் மண்டைய போட்டுடான். போலீஸ் அங்க இருக்குறவங்க கிட்ட எல்லாம் விசாரணை பண்ணிட்டு இருகாங்க" என்று கணேஷிடம் பெரிய குண்டு தூகி போட்டான் கேட்ட உடனே கணேஷ் முகம் அம்மாவசை கணக்காக இருண்டு போனது.

"டேய் மச்சி என்னடா சொல்லுர ??"

"ஆமா டா நீ அடிச்ச அடில அவன் மண்டைய போட்டன். போலீஸ் எல்லாம் வந்து இருக்கு. நி எதுக்கோ கொஞ்சம் உசார இருந்துக்கோ."


"டேய் ஏன்டா அவன பயபடுத்துற. மச்சி அது எல்லாம் ஒன்னும் இல்ல" என்று அவனை சமாதானம் படுத்திவிட்டு நடந்த உண்மையை முதலில் இருந்து சொன்னேன்.

டேய் நாயே கொஞ்ச நேரத்துல என்னைய ஒரே அடியா ஆட வச்சிடேயே என்று அவன் மீது செருப்பை துக்கி வீசினான் .


சரி விடுங்கடா காலேஜ்க்கு டைம் ஆச்சு கிளம்பலாம்.

ரமேஷ் கிட்ட இருக்கிற டிரெஸ் எடுத்து நானும் குமாரும் போட்டு கொண்டு கிளம்பிநோம்.

காலேஜ் போனதும் கொஞ்ச நேரத்தில் ஆபீஸ் பாய் வந்து என்னை ஆபீஸ்ல வர சொல்லி கூப்பிட்டார், பக்கத்தில் இருந்த குமார் பயப்படாத எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்லு.

என்னை மட்டும் ஏன் வர சொன்னாங்க என்று புரியாமல் சென்றேன்.


திரும்ப கிளாஸ்ரூம் போகும் போது சிரித்து கொண்டே வந்ததை பார்த்து ரமேஷ் , குமார் எல்லாம் ஒரு மாதுரியாக பாத்தார்கள் ...

அவங்களுக்கு எப்படி தெரியும் அங்க நடந்த கூத்த ???

திரும்பி பார்கிறேன் - 06/10/09





நைட் ஷிபிட்ல வேலை பார்க்குறது எவ்வளவு கொடுமை தெரியுங்களா?? போன வாரம் எல்லாம் நைட் ஷிபிட் நைட் 10pm - 6am. பதிவாளர் சந்திப்பு முடிச்சிட்டு அப்படியே ஆபீஸ் வந்துட்டேன், அங்க மழைல நனைத்து ஆபீஸ் வந்தால் AC கும்முன்னு ஓடிட்டு இருக்கு கொஞ்ச நேரம் கை கால் எல்லாம் நடுங்க ஆர்மிசிடுச்சி பொறுக்க முடியாம செக்யூரிட்டி கிட்ட சொல்லி AC ஆப் பண்ண சொன்னேன். வெயில் அருமை அப்போது தான் தெரிந்தது. நைட் புல்லா தூங்கமா இருந்தது காலைல வீட்டுக்கு போகும் போதே தூக்கம் கண்ணை சொருகுது, அம்மா சாப்பிட்டு தூங்கு என்று சொல்லுவதை எல்லாம் என்னோட காதுல விழவே இல்ல. அப்படியே மட்டை ஆகிட்டேன் எழுந்து பார்த்தா மணி மாலை 5. வயிறு கப கபன்னு எரிது அப்பறம் சாப்பிட்டு ஆபீஸ் கிளம்பி போனேன். தினமும் காலை உணவு என்பது 9 அல்லது 10 மணிக்கும் தான் எங்கள் வீட்டில் தயார் ஆகும், ஆனா போன வாரம் பாருங்க 8 மணிக்கும் எல்லாம் அம்மா எதாவது ரெடி பண்ணி வச்சிடுறாங்க. அவ்வளவு பாசம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



அக்டோபர் 2 என்பது காந்தி ஜெயந்தி டாஸ்மாக் கடை எல்லாம் மூட சொல்லி அரசு உத்தரவு போட்டு இருகாங்க அப்படியே பார்ரையும் மூட சொல்லுங்கப்பா. எங்க ஏரியால இருக்குற தலை சிறந்த குடிகாரர் தொல்லை தாங்க முடியல. அன்னைக்கு நான் வீட்டுக்கு போயிட்டு இருக்கும் போது குறுக்கே வந்து கொஞ்ச நேரம் காதை புண் ஆகி விட்டு சென்றார். அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில் தான் என்னை இப்படி ஒரு கோரிக்கை வைக்க சொன்னது. காந்தி ஜெயந்தி அன்னிக்கு கவேர்மேன்ட் டாஸ்மாக் மட்டும் தான் மூட சொல்லி இருக்காங்க பார்ர இல்ல கடைல இருக்குற சரக்கு எல்லாம் சைடுல இங்க வந்துடுது அப்பறம் எதுக்கு டாஸ்மாக் மட்டும் மூட சொல்லுராங்க ?? மத்த நாள்ல எப்படி சேல்ஸ் ஆகுமோ இல்லையோ இந்த மாதுரி விடுமுறை நாட்களில் மட்டும் டபுள் சேல் ஆகுது. பேசாம சனி இரவு எல்லாம் கடை திறந்து வைத்து இருந்தால் அரசுக்கு குடுத்தால் லாபம் கிடைக்கும். இதையும் கொஞ்சம் பரிசிலிங்க .

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சண்டே நைட் விஜய் டிவில கலக்க போவது யாரு ஜூனியர் நிகழ்ச்சியை எதற்ச்சியா பார்க்க நேர்ந்தது. அதுல வைதேகி என்கிற சிறுமி பரத நாடிய டிரஸ் போட்டுட்டு வந்து நின்னாங்க, எதோ மொக்கையா பண்ண போறாங்கன்னு பார்த்துட்டு இருந்தேன் ஆனா அவங்க வெஸ்டர்ன் , குத்து பாட்டுக்கு பரத நாட்டியம் சூப்பர்ரா ஆடினாங்க. நாக்க முக்கா , கத்தாழ கண்ணால, பாட்டுக்கு பரத நாட்டியம் ஆடி கலகிட்டாங்க . ஒரு பக்கம் சிரிப்பு தாங்கல இன்னொரு பக்கம் ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு இப்படி எல்லாம் கூட நடனம் ஆட முடியுமா என்று. Hats off Vaidegi .

அதே மாதுரி நீயா நானா நிகழ்ச்சில மாணவர்களுக்கு எதிராக காலேஜ்ல நடக்குற அடக்குமுறை பற்றி சுடா விவாதிக்கபட்டது . மாணவர்கள் சைடுல இருந்தவங்க முக்கியமா சென்னைல இருக்குற முக்கியமான ஒரு கல்லூரியில் நடக்கும் அகிரமங்களை அடித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சிய அந்த காலேஜ் டீன் பார்த்து கொஞ்சம் திரிந்தினால் தேவலாம்.


"சத்யமா" நான் எந்த காலேஜ் பத்தியும் பேசலைங்க .. ஹி ஹி ஹி
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போன வாரம் நடந்த சென்னை பதிவாளர் சந்திப்பு பற்றி அதில் கலந்து கொண்டவர்கள் எழுதி இருந்த பதிவு எல்லாம் அருமை. கேபிள் சங்கர் படங்கள் போடு அசதி இருந்தாரு அதே மாதுரி எவனோ ஒருவன் பதிவு படிச்சு சிரிக்காம இருக்க முடியல. யாருக்கு எனது பெயர் நினைவு இருந்ததோ இல்லையோ பதிவாளர் முரளி கண்ணன் ராஜாராஜன் என்று அறிமுகம் படுத்தியதில் இருந்து விடை பெற்று போகும் வரை பார்க்கும் போது எல்லாம் பெயர் சொல்லி கூப்பிட்டார். நானும் இங்க சொல்லி கொள்கிறேன் " அடுத்த தடவை மழை , வெயில்யில் இருந்து தப்பிக்க ஏதுவான இடமா பாருங்க" .

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கலையரசன் என்கிற பதிவாளரின் வலைபூவை அடிகடி படிப்பேன். நேத்து அவர் ஒரு பதிவு போடு இருந்தார் ஐயோ என்ன கொடுமை சார் அது. பாகிஸ்தானில் நடந்த மனித உரிமை மீறல் பற்றியது. இந்த சுட்டிய சொடுக்கி பாருங்க..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார மொக்கை ஜோக்


சின்ன ஏமாற்றம் நம்மை கலங்க வைக்கும


சின்ன பிரிவு நம்மை அழ வைக்கும


ஆனால்



சின்ன வீடு நம்மை குஜால் படுத்தும். ஹி ஹி ஹி