~~ROMEO~~

Everyday Starts with Happy :)

படித்து முடித்த புத்தகம் - சே குவேரா வேண்டும் விடுதலை

சே குவேரா - வேண்டும் விடுதலை

அன்று நான் ஒரு முதியவரை மின்சார ரயில் வண்டியில் சந்தித்தேன். எனது நண்பன் சே புகைப்படம் அச்சிடப்பட்ட பனியன் அணித்து இருந்தான். நாங்கள் கொஞ்ச நேரம் மற்ற நண்பர்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். எதிரில் இருந்த அந்த முதியவர் எனது நண்பனிடன் பேச்சு குடுத்தார். எங்கள் பெயரை கேட்டு கொண்டு அவன் அணிந்து இருக்கும் பனியன் எங்கு வாங்கினிர்கள் என்று வினாவினர் . நண்பன் ரொம்ப பெருமையாக அதை Tnagarயில் வாங்கியதாகவும் கடைகாரர் 200ருபாய் என்று கூறியதை இவன் 100ருபாய்க்கு பேசி வாங்கி வந்ததாக சொன்னான்.

சரி தம்பி இந்த படத்தில் உள்ள நபரை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ? நண்பன் பெயரை மட்டுமே சொன்னான் .

அதற்கு பிறகு அவர் கேட்ட கேள்விகளுக்கு திரு திரு என்று முழித்தான்.


உண்மையில் சே படம் போட்ட பனியன் அணிந்து இருக்கும் நிறைய பேர் அவரை பற்றி ஒன்றுமே தெரியாதவர்களா தான் இருகிறார்கள்.



எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லுகிறோமே அது இவருக்கு சரியாக பொருந்தும்.
ஒரு உலக புகழ் பெற்ற போராளியை நிறைய தெரிந்து கொள்ள வசதியாக உள்ளது ஆசிரியர் மருதன் எழுதிய சே குவேரா - வேண்டும் விடுதலை.

இவர் பிறகும் போதே ஒரு போராளியாதான் பிறந்தாரா ? இல்லை!!

கொஞ்சம் சொகுசு வாழ்கை தான் இவரின் குழந்தை பருவம். படித்தது மருத்துவர் படிப்பு பின் எதற்காக இவர் போராளியனார் ?
அர்ஜென்டினா நாட்டில் பிறந்தவர் ஏன் க்யூபாவின் விடுதலைக்காக ஃபிடல் காஸ்ட்ரோ உடன் போராடினார்.


எல்லாம் அவர் எதிர்த்த அமெரிக்க ஏகதியபதியம் தான். இவர் தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சுற்றுபயணம் தான் இவர் அமெரிக்க ஏகாத்தியபதியத்தை எதிர்க்க சென்றது .

காஸ்ட்ரோவின் அறிமுகம் இவரை புரச்சி படைக்கு சிப்பாயி ஆக்கியது.
புத்தகத்தில் கூறி உள்ள தொகுப்பு படிக்கும் போது அவர் இப்படி எல்லாம் கஷ்டபடுவதை நாமும் அவருடன் பங்கு பெற்றது போல உள்ளது.
ஒரு நாட்டுக்கே முக்கிய மந்திரியாக இருக்க வேண்டியவர் ஏன் பொலிவியா சென்றார் என்கிற கேள்வி நமக்குள் எழுவதை மறுக்க முடியாது. அவரிடம் இருந்த போர் குணத்தை ஏன் ஒரே இடத்தில இருந்து வீண் அடிக்காமல் மற்றவர்களுக்கு பயன் பெறட்டும் என்கிற எண்ணம் இருக்கலாம். அமெரிக்காவின் CIA ஆட்கள் இவரை சல்லடை போட்டு தேடி கடைசில் இவரை கொன்ற பிறகு அவரின் கைகளை வெட்டி செல்லும் அளவுக்கு இவரை அவர்கள் எப்படி வெறுத்தார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள் .

சே பற்றி முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் அவரை பற்றி அருமையாக எழுதி உள்ளார் ஆசிரியர்.

கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது

புத்தகம் கிடைக்கும் இடம்
சே குவேரா
ISBN 978-81-8368-244-2
ஆசிரியர்: மருதன்
விலை: Rs. 90.00
கிழக்கு பதிப்பகம்
New Horizon Media Private Limited
33/15, Eldams Road,
Alwarpet, Chennai 600018,
Tamil Nadu, India
Ph: 91 44 4200 9601
Fax: 91 44 4300 9701

திரும்பி பார்கிறேன் 21/09/09

இந்த வாரம் கொஞ்சம் டல் தான் . இந்த வாரம் எல்லாம் காலை நேர வேலை என்பதினால் காலை 4 மணிக்கே எழுந்து குளிச்சி கிளம்பி விடுகிறேன். 2 பஸ் , 1 ட்ரைன் புடிச்சு ஆபீஸ்க்கு வரதுகுள்ள கண்ணுல பாதி துக்கம் வந்துடும் . என்ன தான் கிளபினாலும் 6 மணி ஷிபிட்க்கு 6.30 மணிக்கும் தான் ஆபீஸ் போறேன். கிண்டில என்னுடன் ட்ரைன்ல வருகிற வேற கம்பெனி பெண்கள் கையில் சாப்பாடு பையை பார்க்கும் போது ஆச்சரியமாக தான் இருக்கிறது. இவர்கள் எல்லாம் எத்தனை மணிக்கும் எழுந்து சமைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை . நடுத்தர வர்க்க பெண்கள் தான் அனைவரும் காசோட அருமை தெரிந்தவர்கள் . .

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வாரம் முழுக்க பிரபல பதிவாளர்கள் உன்னை போல ஒருவன் விமர்சனம் எழுதி ஹிட் மேல ஹிட் வங்கிடங்கன்னு சொல்லலாம். அந்த படத்தை நான் ஹிந்தியில் ஏற்கனவே பார்த்துவிட்டேன் இருந்தாலும் தமிழுக்கு ஏற்றவாறு எப்படி செய்து இருகிறார்கள் என்று பார்க்கலாம் என்று தான் பார்த்தேன்.
மிக அருமை, படத்தின் இசை யாரையும் சார்ந்து இல்லாமல் சுருதிஹாசன் அருமையாக செய்து உள்ளார். படத்தின் கேமராமேன் உழைப்பு சூப்பர். கமல் நின்று இருக்கும் அந்த மொட்டை மாடியில் இருந்து காட்ட படும் காட்சிகள் சிம்ப்ளி சூப்பர். இப்ப வர படத்தில் எல்லாம் ஒரு கலர் டோன் எங்கேயும் தெரியும் படி காமித்து விடுகிறார்கள் அந்த வகையில் சில்வர் கலர் போன்ற மேக கூட்ட கலர் கமல் இருக்கும் இடத்தை ஆக்கிரமிப்புக்கு செய்து விடுகிறது.
Don't Miss the chance to watch this movie in Theater.


----------------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்று எங்க கம்பெனி மேனேஜர்க்கு நிச்சயதார்த்தம். அதுக்காக ஆபீஸ்ல இருந்து ஒரு கும்பலே புறப்பட்டு வேன்ல திண்டிவனம் போனோம். அங்கு போய் மேனேஜர் கிட்ட ட்ரீட்ன்னு அவர் செலவில் தண்ணிய போடலாம் என்று பிளான் பண்ணினோம் .
வண்டி மரக்காணம்ல காலை டிபன்காக நின்னுச்சு, ஹோட்டல் சரவணா பவன் உயர் தர சைவ உணவகம் என்று எழுதி இருந்த ஹோட்டல்க்கு உள்ளே சென்றோம். கை கழுவலாம் என்று வாஷ் பேசின் தேடினால் ஒரு இருட்டு ரூம்ல ரெண்டு பேரு கைய துடச்சிட்டு வந்தாங்க. உள்ள போனா ஒரே இருட்டு அப்படி இப்படின்னு தட்டி தடவி கைய கழுவிட்டு வந்து டேபிள்ல உட்கார்ந்தோம். சர்வர் தண்ணி கொண்டு வந்து வைத்தார் அதை பார்த்த உடனே கோவம் தலைக்கு ஏறியது. பின்ன அவரு தண்ணி கொண்டு வந்த குடுத்த கிளாஸ்குள்ள எல்லா விரலையும் தண்ணிக்குள்ள விட்டு கொண்டு வந்தாரு. அத பார்த்தா கோவம் வருமா வராதா? வைத்த உடனே அதை எடுத்துட்டு போ என்று திட்டிவிட்டேன். அவருக்கு கோவம் வந்து முனைங்கிடே எடுத்துட்டு போய்ட்டாரு.


ஆளுக்கு 3 இட்லி என்று முதலில் சொல்லிவிட்டு Bisleri வாட்டர் பாட்டில்ல இருக்கும் கண்ணனுக்கு தெரியாத கிரிமியை குடித்தோம். இட்லி முடிச்சு அடுத்ததுக்கு வெயிட் பண்ண முடியாது என்று அங்கு இருந்து எழுந்து வந்துட்டேன். நம்ம பிரண்ட் Wills வாங்கி பற்றவைத்தேன். சிறிது நேரத்தில் எல்லோரும் வந்துவிட வண்டி திண்டிவனம் நோக்கி நடையை கட்டியது. ஏதே எதோ ஊரு எல்லாம் சுத்திட்டு போச்சு, எங்க மேனேஜர் சந்தோசமா வண்டில முன்னாடி உகாந்துக்கிட்டு இயற்கையை தனது டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து கொண்டு வந்தார். மனுஷன் கொஞ்ச நாள் தான் இனி சந்தோசமா இருக்க போகிற என்கிற நினைப்பில் அவரை பார்த்து பரிதாபட்டேன் ( அனுபவம் தான் வேற என்னத்த சொல்லுறது).

நிச்சயதார்த்தம் சுபமாக நடந்தது பசி வேற உயிர் போகுது மச்சி உனக்கு பசிகலையாடா என்று கூட இருந்த நண்பனிடம் கேட்டேன் . நான் தான் 3 இட்லி 2 புரி செட் சாபிட்டேன்ல அதன் பசிகல என்று பதில் வந்தது. அடடா நாம தான் சுறு சுருபா எழுந்து வந்துடோம் , இவங்க எல்லாம் காலைலே புல்லா கட்டிடங்க என்று பந்திக்கு முந்திக்கோ என்கிற வாசகம் நினைவுக்கு வர சாப்பிடும் இடம் நோக்கி சென்றான் மற்றவர்கள் பிறகு வந்து சேர்ந்து கொண்டார்கள். சாப்பாடு அருமையாக இருந்தது பெல்ட் லூஸ் பணிகொண்டு மேலெ வந்து உட்கார்ந்தால், நண்பன் கேட்டான் மச்சி சரக்கு அடிக்கலாமா என்று ??? கொஞ்ச நேரத்துக்கு இந்த இடத்தை விட்டு நகர முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டேன்.


எல்லாம் நல்லபடியாக முடிந்து சென்னைக்கு வந்து சேர்ந்தோம் ஆபீஸ்ல பார்க் பண்ணி வைத்த வண்டிய எடுக்கலாம் என்று சென்றேன். ஏதோ ஒன்று குறைகிறதே என்று தேடினால் வண்டில மாட்டி வைத்து இருந்த ஹெல்மெட் காணோம் !!!!

என்ன கொடுமை சார் இது ?? அந்த ஹெல்மெட் மோந்து பார்த்தா மயங்கி விழுதுடுவங்க என்று தான் நான் அத பார்கிங் ஏரியாலயே விட்டு போறேன் அத ஒருத்தன் ஆட்டைய போட்டுட்டு போய்டான். அவன் நிலைமை என்ன அச்சோன்னு தான் கவலையா இருக்கு ..
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார மொக்கை ஜோக் :

தெரியாமல் இருப்பது தவறு இல்லை ,

தெரிந்து கொள்ளாமல் இருப்பது தான் தவறு .





குவாட்டர் : 68 ருபாய் .





நான் என் வரலாறு கூறுதல் - 2


திருப்பூர் வலைப்பதிவர்கள் said... நல்ல பகிர்வு. நீங்க எப்படி பதிவு எழுத வந்தீங்கனு சொல்லவே இல்லியே ராஜராஜன்!


நான் என் வரலாறு கூறுதல் என்கிற தொடர் பதிவில் நான் எப்படி பதிவு எழுத வந்தேன் என்று சொல்ல மறந்துவிட்டேன், உண்மை என்னவென்றால் அந்த பதிவு எழுத ஆரமிக்கும் போது பழைய நினைவுகள் அசை போட்டவாரு இருந்ததால் இதை மறந்து போனேன் .


படிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. தினமும் பேப்பர் படிக்கும் வழக்கம் நான் 7ஆம் படிக்கும் போது ஆரமித்தது . பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் போது பாட புத்தங்கள் உடன் குங்குமம் வார இதழ் படித்து கொண்டு இருப்பேன். நாங்கள் இருந்த பகுதி தமிழ்நாடு மின்சார வாரியம் அமைத்து கொடுத்த குடியுருப்புயில் அது அப்பார்ட்மென்ட் போல இருக்கும். மாடியில் படிக்க போறேன் என்று சொல்லி விட்டு கும்குமம் வர இதழை மறைத்து எடுத்து சென்று படிப்பேன் எனக்கு வர இதழ் என்றல் குங்குமம் புத்தகம் மட்டுமே இருக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தேன். ராணி , தேவி போன்ற இதழ்கள் எல்லாம் கடைகளில் பார்த்து அது பெண்களுக்கான பத்திரிகை என்று வாங்காமல் இருந்து உள்ளேன்.
பிறகு காலேஜ் சேர்ந்த பிறகு கல்லூரி நண்பன் முத்துகிருஷ்ணன் ராஜேஷ்குமார் நாவல் அறிமுகம்படுத்தி வைத்தான். காலேஜ் முடியும் வரை ராஜேஷ்குமார் நாவல் அதிகமாக படித்து இருக்கிறேன். அவரின் நாவலை முதல் பத்து பக்கங்கள் படித்து விட்டு அப்படியே ஜும்ப் பண்ணி கடைசி பக்கம் சென்று முடிவை தெரிந்து கொண்டு பிறகு முதலில் இருந்து படிக்க ஆரமிப்பேன் . இந்த மாதுரி கதைகளை படிக்கிறது ஒருவித ஆர்வம் மற்றும் பொழுதுபோக்கு மட்டுமே .

கட்டுரைகள் எல்லாம் படிக்கமாட்டேன். சினிமா , கிரைம் , கதைகள் , கிசு கிசு இது மட்டும் தான் ரொம்ப ரசித்து படிப்பேன். தொடர் கதைகள் ஒரு வாரம் படிக்காமல் விட்டுவிட்டால் பிறகு அதை தொடர்ந்து படிக்க மாட்டேன், சுவாரசியம் போய்விடும் என்கிற காரணத்தினால் (எடுத்துகாட்டு - ஆனந்த விகடன்ல இப்பொது தொடர் கதையாக வந்து கொண்டு இருக்கும் குமார சம்பவம் முன்று வரங்கள் படித்தேன் நான்கு மற்றும் ஐந்து ஆம் வாரம் படிக்காமல் விட்டதினால் அந்த தொடரை இப்பொது படிப்பதே இல்லை).

ராஜேஷ்குமார் நாவல் படித்த பிறகு நாம் ஏன் கதை எழுத கூடாது என்ற எண்ணம் தோன்றியது அவ்வாரே எனது கல்லூரியில் படிக்கும் போதே ஒரு நாவல் எழுதினேன், தமிழை நான் படிக்கும் அளவுக்கு எழுத தெரியாது, இப்பொது கூட என்னுடைய எழுத்துகளில் நிறைய எழுது பிழைகளை காணலாம்.

நண்பன் ஒருவன் படித்து பார்த்து ரொம்ப கேலி செய்தான் "நீ எல்லாம் கதை எழுதி என்ன பண்ண போற? ஒழுங்கா அர்ரியர் முடிக்க பாரு" என்று திட்டினான். இது எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு நாம எழுதுறது இவனுக்கு புடிகலையா இல்ல கதை நல்ல இல்லையா என்று தெரியவில்லை சரி இத்தோட கதை எழுதுறத விட்டுடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்.
கால சக்கரம் என்னை எங்கு எங்கோ அழைத்து சென்றது, ஆனந்த விகடன் அறிமுகம் ஆகி பிறகு அதற்கு அடிமை ஆகிவிட்டேன். ஒவ்வொரு வாரமும் புத்தகம் வரும் நாளில் ஒரு வித உற்சாகம் பிறந்து விடுகிறது , காலையில் ரொம்ப சந்தோசமா புக் வாங்கி படிப்பேன் ஒரு சிகரெட் பற்றவைத்து கொண்டு ஒரு புரட்டு புரடிட்டு செல்வேன். புத்தகம் கையில் இருந்தால் உலகத்தையே மறத்துவிடுவேன் என் மனைவி கூட அடிகடி திட்டுவாள் "ஏன் இப்படி பைத்தியமா புக் படிகிரிங்க ?" என்று கேட்பாள் ,
"ஏன் இப்படி காதலிகிரிங்க"? என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவது ?? அதே மாதுரி தான் இதும். கிரைம் புத்தகம் கூட இப்படித்தான் அறிமுகம் ஆகியது. இப்பொது வாரம் ஆனால் ஜூனியர் விகடன் மற்றும் ஆனந்த விகடன் வாங்க மறப்பதில்லை, என்னோட அப்பா வார வாரம் ஜூனியர் விகடன் வாங்கிடியா என்று மறக்காமல் கேட்பார்.
சாரு நிவேதா, குஷ்பு கற்பு பற்றி பேசிய பேச்சுகள் எல்லாம் ஓய்ந்த பிறகு ஆனந்த விகடன் பத்திரிகையில் இவரின் பேட்டி வந்தது , அதை படித்து பார்த்த போது யாருடா இந்த ஆளு இவள்ளவு தைரியமா பேசுறாரே என்கிற ஒரு வித மதிப்பு மற்றும் பிரமிப்பு வந்தது. இன்டர்நெட்ல சும்மா இவரை பற்றி எதாவது இருக்கன்னு தேடும் போது இவரே ஒரு வெப்சைட் வைத்து இருக்கிறார். என்னத்த எழுதி இருகார்ன்னு கொஞ்சம் கொஞ்சம் படிக்க ஆரமித்த உடன் என்னையும் அறியாமல் அவரின் வெப்சைட்யை bookmark செய்தது. இவரின் 0டிகிரி நாவல் தான் நான் வாங்கிய முதல் குண்டு புஸ்தகம். முதல் தடவை படிக்கும் போது ஒண்ணுமே புரியல, காசு வேஸ்ட் பணிடோமோன்னு நினைச்சேன்.

டிரைன்ல போகும் போது திரும்ப திரும்ப முன்று தடவை படித்தேன் அப்பதான் கொஞ்சம் புரிந்தது இந்த புத்தகத்தை வாங்கியது வீணாக போகவில்லை என்று. அதன் பிறகு இவரின் ராஸ லீலா , முடு பனி சாலை , மதுமிதா சொன்ன பாம்பு கதை என்று இவரை சுற்றி பயணிக்க ஆரமித்தேன்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு புத்தங்கள் எல்லாம் அருமை, அதும் Biography புத்தகம் எல்லாம் சுவாரசியம் குறையாமல் நேர்த்தியான படைப்பில் உள்ளது. இப்பொது எல்லாம் மாதத்துக்கு ஒரு புத்தகம்மாவது வாங்கி படித்து விடுகிறேன். அடுத்து லக்கிலுக் .. இவர்தான் எனக்கு முதலில் அறிமுகம் ஆனார் அது எப்படின்னு தெரியல. ஒரே ஒரு கட்டுரை தான் படித்தேன் அழகாக எழுதி இருந்தார். இவரை தொடர்ந்து அதிஷா , கேபிள் சங்கர், பரிசல் , கார்க்கி , ஜாக்கி சேகர், வால் பையன் இன்னும் பலரை படித்து கொண்டு இருந்தேன்.
இவர்கள் பார்த்துதான் நான் எழுத வந்தேன் , நமக்குன்னு ஒரு ப்ளாக் ஓபன் பண்ணனும் அதை எப்படி பண்ணுறதுன்னு தெரியல. யாருகிட்டையும் கேக்காம நானே எல்லாதையும் செய்தேன். வால் பையன் ஒரு முறை தமிழில் டைப் பண்ண உதவும் ஒரு சாப்ட்வேர் குடுத்தார்.. ஆனால் அதை சரியாக உபயோக படுத்த தெரியவில்லை. இப்போது google transliterate தான் எனக்கு தமிழில் டைப் பண்ணுவதற்கு உதவுகிறது. என்னுடைய ப்ளாக் எப்படி தமிழ்மணத்தில் சேர்ப்பது என்று கொஞ்சம் யோசிச்சு அவர்கள் முலமாக தெரிந்து கொண்டேன்.

கேபிள் சங்கர் எழுதும் விமர்சனம் ரொம்ப அருமையா இருக்கும் அதை பார்த்து நான் இரண்டு படங்களுக்கு விமர்சனம் எழுதினேன், ஆனா அவர் மாதுரி எழுத முடியல "உனக்கு தெரிஞ்சத உன்னால எது முடியுமோ அத மட்டும் எழுது மத்தவங்கள பார்த்து காபி அடிக்காதன்னு" மனம் சொல்லியது .



அப்ப என்னோட தனி தன்மை எது ?? இதற்கு விடை தொடர் கதை . அட பார் ரா என்கிற தொடர் கதையை நான் எழுத ஆரமித்தேன். மறைந்த எழுத்தாளர் சுஜாதா குமுதம் பத்திரிகைக்கு குடுத்த ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். கணேஷ் , வசந்த் புதிய தொடர் முதல் வாரம் வந்தது அதற்கு பிறகு அவர் சொல்லியது "இனி இந்த தொடர் எப்படி வரும் என்று எனக்கே தெரியாது" அதே மாதுரி தான் நானும் தொடர் கதை எழுத ஆரமிக்கும் போது இது எப்படி போகும் என்று தெரியவில்லை ஆனால் சுவாரசியம் குறையாமல் எழுதவேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தது. இப்பொது எல்லாம் பதிவு எழுதும் போது நிறைய சந்தோசமா இருக்கு, நான் ஏதோ சாதித்து விட்டது போல ஒவ்வொரு பதிவையும் பதிவேற்றம் செய்யும் போது தோன்றும்.


சந்தோசம் அவ்வளவே ,

இது தொடர் பதிவு என்பதனால் கார்த்திகேயன் மற்றும் நிலாமதி இருவரையும் அழைக்கிறேன் ..