~~ROMEO~~

Everyday Starts with Happy :)

புத்தக சந்தையில் - இரண்டாம் நாள்

பதிவரும் திருநெல்வேலி ஹலோ FM பண்பலை தொகுப்பாளியான தமயந்தி அவர்களுக்கு ஆனந்த விகடன் 2009கான சிறந்த தொகுபாளியாக தேர்ந்தெடுத்து இருக்கார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அதே போன்று நமது பாசத்துக்குரிய, மரியாதைக்குரிய, நேசத்துக்குரிய அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் சிறுகதை புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------

பதிவர்கள் சிலர் தங்களது பதிவில் புத்தக கண்காட்சிக்கு எதிரே பழைய புத்தகங்கள் விற்பனை செய்வதை எழுதி இருந்தார்கள், அதையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வரலாம் என்று நேற்று புத்தக கண்காட்சிக்கு திரும்ப சென்றேன். பதிவர் சங்கர் கண்காட்சிக்கு வருவதாக சொல்லிருந்தார் அவரையும் பார்த்த மாதிரி இருக்குமே என்று சென்றேன்.

பழைய புத்தங்கள் விற்பனை செய்யும் இடத்தில் ஆங்கில புத்தகங்களே 95% ஆக்கிரமித்து இருந்தது. ஆங்கில புத்தகங்களை படிக்கும் அளவுக்கு இன்னும் அறிவு வரவில்லை என்பதால் ஏதும் வாங்காமல் பார்த்து கொண்டே வந்தேன். இரண்டு புத்தகங்கள் என்னை ரொம்ப ஈர்த்தது 1. Khushwant Singh எழுதிய Women and Men in my Life 2. The White Tiger by Aravind Adiga. இரண்டும் விலை கம்மியாக கிடைத்தது இருந்தாலும் Women and Men in my Life புத்தகத்தை மட்டும் 20 ரூபாய்க்கு வாங்கினேன். White Tiger புத்தகத்தின் விலையோ 70 ருபாய் (புத்தக சந்தையில் அதன் விலை 395ருபாய்).

மாலை 3 மணிக்கே கண்காட்சில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எல்லா கடைகளிலும் திரும்ப ஒரு முறை சென்றேன்.

அப்பாக்கு "தினம் ஒரு திருவாசகம்"
அம்மாவிற்கு "கம்பராமாயணம்"
எனக்கு "திருக்குறள்" . முன்று புத்தகங்களை மட்டும் வாங்கினேன்

காலச்சுவடு அருகில் வருவோர் போவோருக்கு எல்லாம் கைகளில் இலவசமாக தங்களது காலச்சுவடு பத்திரிகையை திணித்து கொண்டு இருந்தார்கள், நானும் 2 பிரதி வாங்கினேன் தேதி பார்த்தேன் 2005யில் வெளிவந்த பத்திரிக்கை!!!!
ஒரு புரட்டு புரட்டினேன் மக்கி போக இருக்கும் பேப்பர் வாசனை வந்தது. பழையது என்றாலும் உள்ளே இருக்கும் தொகுப்புகள் நன்றாக இருந்தது படிப்பதற்கு. "Old is Gold"
கால சுவடு மாதிரி முலிகை குழந்தை என்கிற பத்திரிகையை 3 குடுத்தார்கள்.

எனது கல்லூரில் படித்த எனது சீனியர் மற்றும் ஜூனியர் இருவரை சந்தித்தது சந்தோஷமாக இருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சி.

நடிகர் சிவகுமார் காலச்சுவடு அரங்கில் பேசினார், கூட்டம் அதிகமாக இருந்ததால் என்ன பேசினார் என்று ஒண்ணும் கேட்கவில்லை. கவிஞர் சல்மா வந்திருந்தார், திருக்குறள் புத்தகத்தில் அவரின் கையெழுத்து வாங்கினேன், என்ன திருக்குறள் புத்தகம்?என்றார் . நான் படிக்க தான் வாங்கினேன் என்றேன். ரொம்ப ஆச்சரியமாக பார்த்தார் ( ஏங்க நான் திருக்குறள் படிக்க கூடாத என்ன ??).
பதிவர் எறும்பு மற்றும் சங்கருடன் சிறிது நேரம் அரங்கில் செலவிட்டது சந்தோஷமாக இருந்தது. இன்று நிறைய புகை படங்கள் எடுத்தேன் அவைகள் இங்கே





இன்று மாலை அரங்கில் நடக்கும் சிறிய பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். அதை பற்றிய விரிவான சிறிய பதிவு நமது அண்ணன் கேபிளார் பதிவில் உள்ளது.


மீண்டும் சந்திப்போம் ......
With Love
Romeo ;)

புத்தக சந்தையில்

படிக்கணும் பாஸ் .. நிறைய படிக்கணும். அலுக்க அலுக்க படிக்கணும். தேடி புடிச்சி படிக்கணும், வெறியா படிக்கணும்..

யாராவது என்னை புத்தகம் படிப்பதை பற்றி கேட்டால் நான் முன்னர் சொன்னது தான் பதிலாக இருக்கும்.

நேற்று புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தேன் .. ஒவ்வொரு ஸ்டாலாக சென்று என்ன மாதிரியான புத்தகம் இருக்கிறது என்று பார்த்து கொண்டே வந்தேன்.

சிறுவர்களுக்கு என்று நிறைய புத்தகங்கள் இருக்கிறது. சில புத்தகங்களை வாசித்த போது நான் சிறியவனாக இருந்தே இருக்கலாம் என்று தோன்றியது.

மாணவ மாணவியர்கள் படிப்பு சம்பந்தப்பட்ட கடைகளில் மொய்த்தார்கள்.

கிழக்கு பதிப்பக நூல்கள், சுஜாதா நூல்கள் தான் நிறைய கடைகளில் இருந்தது. புத்தக கண்காட்சியில் அறிவியல் பற்றிய நிறைய நூல்கள் இடம் பெற்றிருந்தது சந்தோஷமே.


கண்காட்சில் எடுத்த சில புகைப்படங்கள்.

3 மணிக்கு சென்றவன் மாலை 7.30 மணிக்கு தான் வெளியே வந்தேன். 3 மணி முதலே மக்கள் வர ஆரமித்து விட்டார்கள் நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே தான் இருந்தது

சாரு, ராமகிருஷ்ணன் அவர்களை பார்த்தது சந்தோசமாக இருந்தது. இருவரிடமும் அவர்களின் புத்தகங்களின் பிரதிகளில் கையெழுத்து வாங்கினேன்


உரிமை பதிப்பகத்தில் நிறைய கூட்டம், அதே போன்று கிழக்கு பதிப்பகத்தில்.



கை நிறைய புத்தகங்களுடன் வெளியே வந்தேன், வாங்கிய புத்தகங்கள் பட்டியல்

நக்கீரன் - சேலஞ்ச
நான் சந்தித்த மரணங்கள்
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
மாமனிதர் நபிகள் நாயகம்
ராஜீவ் கொலை வழக்கு
கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளி
சர்வம் ஸ்டாலின் மயம்
பாரதியார் கதைகள்
ஊறு பசி - ராமகிருஷ்ணன்
காமரூப கதைகள்
ரெண்டாம் ஆட்டம்
கடவுளும் நானும்
அதிகாரம், அமைதி, சுதந்திரம்
கொல்லனின் ஆறு பெண் மக்கள் - கோணங்கி
மரப்பாச்சியின் சில ஆடைகள்
பெருவெளி சலனங்கள்


பண பற்றாக்குறை காரணமாக வா.மு. கோமுவின் ‘சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்” , ஜெயமோகனின் ஏழாம் உலகம் , ராமகிருஷ்ணனின் யாமம் புத்தகங்கள் வாங்க முடிவில்லை.



இன்றோ நாளையோ கண்டிப்பாக திரும்ப செல்வேன் என்று நினைக்கிறன்.

கொலுசு - முதல் சிறுகதை


என் இனிய நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

2004
நான் எவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கேன், சும்மா பார்த்துட்டே இருக்கியே எதாவது பேசு,
உன்னதான் எதாவது பேசு டா .
நீ ரொம்ப அழகா பேசுற
போடா உனக்கு இதே வேலையா போச்சு
- வெட்கப்பட்டாள்

எனக்கு ஒரு ஆசைடி, உனக்கு ஒரு கொலுசு வாங்கி தரனும்
அத போட்டுகிட்டு ஜல் ஜல்ன்னு நீ நடந்து வரத பார்க்கணும்
உனக்கு ஏன் இந்த மாதிரி ஆசை?
ஏனென்றால் உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்
உண்மையா ??
- வெட்கப்பட்டாள்

2005
எனக்கு ஒரு ஆசைடி
போதும் நிப்பாட்டு, உன்னோட ஆசையை தூக்கி குப்பைல போடு
நான் என்ன பண்ணட்டும் காசு இருந்தா இப்பவே வாங்கி தருவேன்
அப்ப காசு இருக்கும் போது இந்த டயலாக் பேசு.
-கோவப்பட்டாள்

2006
கொலுசு நல்ல இருக்கா?? என் அப்பா வாங்கி தந்தார்.
2000 ரூவா.
நான் 5000 ரூவாக்கு கொலுசு வாங்கிடறேன் பாரு

ஹலோ யார் பிரசாத்தா?
ஆமா நீங்க யாரு?
நீ லவ் பண்ணுறியே சங்கீதா அவளால ஏமாத்தப்பட்டவன்
என்ன சொல்லுர? என் சங்கீதா அந்த மாதிரி எல்லாம் பண்ணமாட்ட
ரொம்ப ஓவரா நம்பாத அவள. நான் வாங்கி குடுத்த கொலுசதான் இப்ப போட்டு இருக்கா
2000 ரூவா , அவ அப்பன் வாங்கி குடுத்தான்னு சொல்லி இருப்பாளே??
என்ன சொல்லுர நீ? அப்ப அந்த கொலுச நீதான் வாங்கி கொடுத்தியா ?


ஹாய் டா ஏன் முகம் ரொம்ப சோர்ந்து போய் இருக்கு ?
யாரு அந்த பையன் ?
யாருனா ? எந்த பையன கேக்குற ?
உனக்கு கொலுசு வாங்கி குடுத்தானே அவன கேக்குறேன்.
-மௌனம் ஆனாள் .

2008
என்னங்க நான் ஒரு கொலுசு வாங்கிட்டுமா
நான் அன்னைக்கே சொன்னேன்ல நான் ஏன் கொலுசு வெறுக்கிறேன்னு, வேற எது வேணா கேளு வாங்கிதறேன் கொலுசு மட்டும் வேண்டாம்.
-அமைதி ஆனாள்.

2018
அப்பா
என்னடா செல்லம்
என்னோட பர்த்டேக்கு என்ன வாங்கி தருவிங்க?
உனக்கு என்னடா வேணும்?
எனக்கு கொலுசு வேணும் பா.
அப்பாக்கு கொலுசு புடிக்காதே மா.
அப்ப எனக்கு பர்த்டே கிப்ட் ஏதும் வேண்டாம் போ.
-கோவப்படாள்

அப்பாகிட்ட என்னடா கோவம் உனக்கு? டின்னர் வேண்டாம்ன்னு சொன்னியாமே?
ஆமா எனக்கு கொலுசு வாங்கி தர மாட்டேன்னு சொன்னிகள்ல
அதுக்காக சாப்பிடமாட்டியா?
கொலுசு வாங்கிதறேன் வா வந்து சாப்பிடு.
தேங்க்ஸ் பா
- நான் சந்தோஷமானேன்.

-----------------------------------------------------------------------------------------------