~~ROMEO~~

Everyday Starts with Happy :)

தனி மனித சுதந்திரம், MP3 Player அல்லது ஊளையிடுவது


தனி மனித சுதந்திரம் என்றால் என்ன ? உனது செயல் மற்றவர்களை துன்புருத்தாத எந்த ஒரு செயலும் அது தனி மனித சுதந்திரம். ஆனால் ஒருவர் தனது இஷ்டம் போல ஒரு பொது இடத்தில் மற்றவர்களின் விருப்பு, வெறுப்பு தெரியாமல் செய்யும் செயல் தனி மனித சுதந்திரம் ஆகுமா?

FM ரேடியோ, MP3 பிளேயர் உள்ள மொபைல் போனில் இருக்கும் சௌகரியம் நமக்கு கிடைத்த வரம் என்று சொல்லலாம். தொலைதூர பயன்களில் நம்மை சுட்டு எரிக்கும் வெயிலோ அல்லது இரவில் தூக்கம் வராமல் பயணத்தை மேற்கொள்ளும் போது நமக்கு மட்டுமே கேட்கும் படி நமக்கு பிடித்த பாடல்களை ஹியர் போனில் கேட்டவாறு பயணத்தை ரசித்து கொண்டே செல்லலாம். ஆனால் இந்த மாதிரியான வரமே நமக்கு இம்சை ஆனால் ??

மின்சார ரயிலில் தினமும் பயணம் செய்வதால் புத்தகம் இல்லாத சமயங்களில் அவ்வபோது ஹியர் போனில் பாடல்கள் கேட்டு செல்வேன். கையில் எதாவது புத்தகம் இருக்கும் எனில் அன்று எனது சிந்தனை எல்லாம் புத்தகத்தில் தான் இருக்கும்.

நேற்று இரவு பணி முடித்துக்கொண்டு கிண்டியில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார வண்டியில் ஏறினேன். கையில் சாரு எழுதிய "முடு பனி சாலை". இந்த புத்தகத்தை இதற்கு முன்னர் இரண்டு முறை படித்து இருந்தாலும் திரும்ப படிக்க துண்டியது. புத்தகத்தை இரண்டு பக்கங்கள் கூட படித்து இருக்க மாட்டேன் எனக்கு பின்னால் இருந்த ஒரு அன்பர் "அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்" என்று தனது மொபைல் போனில் லௌட் ஸ்பீக்கர்ல போட்டுவிட்டார்.அவர்கள் பார்ப்பதற்கு முரட்டு ஆசாமி போல இருந்தார்கள். சந்தோசமாக பாடலை ரசித்தார்கள் என்பதை அவர்களின் வாய் முணுமுணுபு காட்டியது.

அவர்களின் சந்தோசம் என்பது என்னை எரிச்சல் அடைய வைத்தது. பெட்டியில் இடம் காலியாக இருந்ததினால் வேறு ஒரு இடம் மாறி உட்கார்ந்தேன். விட்ட இடத்தில் இருந்து ஆரமித்தேன், 10 பக்கங்கள் கூட தாண்டி இருந்து இருக்க மாட்டேன் "கருத்த மச்சான் " காதில் வந்து விழுந்து மண்டை காய வைத்தது. இப்பொழுது எனக்கு எதிரில் இருந்த இன்னொரு அன்பர். இங்கயுமா என்கிற கேள்வியுடன் அவரை ஒரு பார்வை பார்த்தேன், என்னை ஏற்எடுத்து பார்த்தவர் அந்த பாட்டுக்கு தனது கால்களில் தாளத்தை போட்டார். அவருடைய தாளம் என்னை தாளாத துயரத்தில் ஆழ்த்தியது.

அவர் யாரை பற்றியும் கவலைப்படாமல் ஒலியை அதிகமாக வைத்து பாடல் கேட்டு கொண்டு இருந்தார். எனது சிந்தனை எல்லாம் இப்பொழுது அந்த பாடலில் வரும் "ட்ட்யே ட்ட்யே" என்கிற BGM மேல் இருந்தது. இவரும் அந்த கோஷ்டி ஆள் போலவே இருந்தார். இரவில் செல்லும் அனைத்து ரயில் வண்டிகளிலும் பெண்கள் பெட்டியில் ஒரு போலீஸ்காரர் இருப்பார் இது பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட பாதுகாப்பு இதை பேசாமல் பொது பெட்டியிலும் அமல்படுத்தினால் தேவலாம் இந்த மாதிரியான இம்சைகளிடம் இருந்து நம்மை காப்பற்றி கொள்ள. கொஞ்சம் தைரியம் வரவழைத்து கொண்டு அவரிடம் படலை நிப்பாட்ட சொல்ல நினைத்தேன். அதற்கு வேலையில்லை என்பது போல அவருக்கு யாரோ போனில் கூப்பிட்டர்கள்.
அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது எனக்கு அவரின் வாயால் "ஹல்லோலோ" என்று அவர் போட்ட சத்தம் அந்த பெட்டியில் இருந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. பின்பு அவரின் பேச்சை அந்த பெட்டியே கேட்கும் படி ஊளையிட்டார் . படிக்கும் சுவாரசியமே எனக்கு போய்விட்டது , புத்தகத்தை மூடி வைத்து கதுவு அருகில் வந்து நின்று கொண்டேன். ரயில் செல்லும் வேகத்துக்கு காற்று பலமாக எனது முகத்தில் மோதியது இருந்தாலும் அந்த காற்றில் இருந்த ஈர பசையை ரசித்தேன்.


திரும்பி பார்த்தேன் ஊளை இன்னும் ஓய்ந்த பாடு இல்லை ...

அட பார் ரா... லுக் - 6


அட பார் ரா ஹா ஹா ஹா என்று கிளாஸ் ரூம் அதிர சிரித்து மச்சி அப்ப எஸ்கேப்ன்னு சொல்லு, இனி எவனும் நம்ம கிட்ட வேலை காட்ட மாட்டாங்க என்று சந்தோஷத்தில் இருந்தான் கணேஷ்

அப்படி சொல்ல முடியாது மச்சி யாருன்னு தெரியாத வரைக்கும் நாம எஸ்கேப் தெரிந்தன்னு வை அப்பயும் நாம எஸ்கேப் தான் காலேஜ் விட்டு. சரி விடு அடி வாங்கினவனே போலீஸ் கிட்ட ஏதும் சொல்ல வேண்டம்ன்னு சொல்லிட்டான் அப்பறம் என்ன.
சரி அந்த பையன் ஏன்டா உங்கிட்ட அடிவாங்கினது யாருகிட்டையும் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்னு தான் தெரியலையே.
எங்க ஊரு பசங்க சில பேரு அவனுக்கு தெரியுமா டா அதனால்தான் யார்கிட்டையும் சொல்லிடாதன்னு சொன்னான்.
எங்களின் பேச்சு கொஞ்ச நேரம் நிடித்து அடுத்த வகுப்பு ஆசிரியர் வந்ததும் நின்றது. இந்த சம்பவத்துக்கு பிறகு எங்க சீனியர் பசங்க கொஞ்சம் அடக்கியே வசித்தார்கள் . அவர்களை குறிவைத்து தாக்க நினைத்து வேறு ஒருவன் மாட்டி கொண்டது அவர்களிடம் கொஞ்சம் பயம் கொள்ள வைத்தது. அதன் பிறகு எங்களை ராக்கிங் என்கிற பெயரால் யாரும் தொந்தரவு செய்ய வில்லை.
முதலாம் ஆண்டு முடியும் வரை நாங்கள் நிம்மதியாக இருந்தோம். எங்களுக்கு பிறகு வந்த ஜூனியர் மாணவர்களிடம் நாங்கள் நட்புடனே பழகினோம். அதே சமயம் சீனியர் என்கிற கேத்து கொஞ்சம் கூட குறையாமல் வளம் வந்தோம்.
பிரிவு உபசார விழாவின் கண்களை கசக்கி கொண்டே விடை பெற்றோம். சரக்கு என்றால் அரை கிலோமீட்டர் ஓடும் அப்புராணி பசங்க கூட ஒரு பெக் அடித்து எங்கள் உடன் ஒரு இரவு வாந்தியுடன் அடுத்த நாள் காலை பிரிந்தது எங்கள் நினைவின் இருந்து நீங்கா இடம் பெற்றது.
இன்று எங்கள் உடன் படித்த நண்பர்கள் வட்டம் ரொம்ப சுருங்கி போய்விட்டது. குமார் மற்றும் கணேஷ் மட்டுமே எப்போதும் தொடர்பு எல்லைக்கு உள்ளே இருகிறார்கள். மற்றவர்கள் அவுட் ஆப் ரீச் தான்.
வேலை நிமித்தமாக நான் சென்னை வந்தது குமார் இருக்கும் தைரியம் தான். அவன் என்னை போல் இல்லாமல் கல்லூரி படிப்பு முடித்தவுடன் கம்ப்யூட்டரில் VB, Java, C, C++ என்று படித்து இப்பொது முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்கிறான். மேன்சன் வாசியா இருந்தாலும் அவன் தங்கி இருக்கும் அறை ரொம்ப சுத்தமாக இருந்தது. ஹிந்து நாளிதழில் வந்த வேலை வாய்ப்பு பகுதியை எனக்காக எடுத்து வைத்து இருந்தான். அதில் எனக்கு எது செட் ஆகும் என்று தேடி 10 கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தேன்.
அவன் மேன்சன் மேனேஜர்யிடம் ஏற்கனவே பேசி எனக்கான ஒரு ரூம் தேர்வு செய்து வைத்து இருந்தான். அவர் வந்ததும் என்னிடம் பெயர் , விலாசம் என்று எல்லா குறிப்புகளையும் வாங்கி கொண்டு குமார் ரூம்க்கு இரண்டு ரூம் தள்ளி இருந்த ஒரு ரூம்மை எனக்காக ஒதுக்கி தந்தார்.

ரூம் பிரச்சனை திர்ந்தது.

அடுத்தது வேலை ..

திரும்பி பார்கிறேன் - 19/10/09

தீபாவளிக்கு எப்படிடா ஊருக்கு போறதுன்னு தெரியமா இருந்தது பஸ்ல ட்ரைன்ல எதுலையும் டிக்கெட் இல்லையே அந்த கவலைதான், வியாழன் காலை நேர பணியில் இருந்தேன் மதியம் அப்படியே கோயம்பேடு சென்று திருச்சி செல்லும் எதாவது ஒரு பேருந்தில் சென்று விடலாம் என்று. மேனேஜர்யிடம் இரண்டு மணிநேரத்துக்கு முன்னதே கிளம்புவதற்கு அனுமதி வாங்கி கோயம்பேடு வந்து அடைந்தேன். எவ்வளவு கூட்டம் இருக்குமோ என்கிற பயத்துடன் திருச்சி செல்லும் பேருத்தை அருகில் சென்றேன்.


எதிர் பார்த்தற்கு நேர் எதிராக இருந்தது பேருந்து நிலையம். சார் மதுரையா?? , சார் நாகர்கோவில்லா?? , சார் திருச்சியா ?? வாங்க வாங்க சீட் இருக்கு வாங்க என்று இழுக்காத குறையாக அழைகிறார்கள். ஓவர்ரா கற்பனை பண்ணிட்டோமோ என்கிற நினைப்புதான் இருந்தது. ஒரு பேருந்து கிளம்ப தயாராக இருந்தது அதில் ஜன்னல் ஓர சீட் அமர்ந்து கொண்டேன். மதியம் 1 மணிக்கும் கிளம்பின வண்டி 3.30 மணிக்கும் ஒரு ஹோட்டலில் நின்றது (கையேந்தி பவனே நன்றாக இருக்கும் அந்த ஹோட்டல்லை ஒப்பிட்டு பார்க்கும் போது) சாப்பிடுவதற்கு மனசே வரவில்லை ஒரு காபி மற்றும் பிஸ்கட் பாக்கெட் வாங்கி சாப்பிட்டேன். திருச்சி வருவதற்கு இரவு 8.30 மணி இத்தனைக்கும் நான் ஏறியது எக்ஸ்பிரஸ் பஸ்சில். பிரைவேட் பஸ்காரங்கதான் டிக்கெட் விலையை அதிகமா வைத்து விற்கிறார்கள் என்றால் அரசு பேருந்தில் இந்த மாதுரி எக்ஸ்பிரஸ் என்று சொல்லி டப்பா பஸ்சை காட்டி கல்லா கட்டி விடுகிறார்கள். அங்கு இருந்து கருர் செல்லும் பேருந்தில் ஏறி இரவு 10.30க்கு வீட்டுக்கு சென்று அடைந்தேன்.

ஒரு மாதமாக மனைவியை பார்க்காமல் இருந்த ஏக்கம் அவளை பார்த்தும் திறந்தது. அந்த ஒரு மாதமாக போனில் கொஞ்சல் , சண்டை என்று மாறி மாறி பரிவர்த்தனைகள் நடந்தாலும் அவை எல்லாம் அவளை பார்த்தும் மறந்தது. ஒரு மாதம் இருந்த ஏக்கம் எல்லாம் அந்த ஒரு நாள் இரவில் சந்தோசமாக கழிந்தது. அடித்து போட்டது போன்ற தூக்கம் கண்ணை திறந்தால் மணி காலை 11 .

தீபாவளிக்கு என்னவளுக்கு பரிசு ஒன்றும் தர முடியவில்லை. இந்த மாதம் கொஞ்சம் அல்ல நிறையவே பண முடக்கம். தீபாவளி பரிசாக அவளுக்கு நான் வாங்கி தந்தது ஒரு பொட்டு பாக்கெட் மட்டுமே.

பட்டாசு வெடிப்பதில் இருந்த ஆர்வம் எல்லாம் எப்போதோ மலை ஏறி விடத்தினால் அதன் சத்தம் கூட கேட்க பிடிக்கவில்லை. புது துணி உடுத்தி கொண்டு கோவிலுக்கு சென்று வந்தோம் மாலை நேரம் பக்கத்துக்கு வீட்டில் ராக்கெட் , பூந்தொட்டி, சங்கு சகரம் , அணுகுண்டுடை பற்ற வைக்க பயந்து கொண்டு இருந்த சின்ன பையன் என்று அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டு நானும் மகிழ்ந்தேன்.


நேற்று சாயங்காலம் 6 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டேன் திருச்சி வழியாக,

இரவு 9 மணி அளவில் திருச்சியில் இருந்தது கிளம்பி பேருந்து காலை 4 மணி அளவில் சென்னை வந்து அடைந்தது .

என்னவளுக்கு சென்னை வந்து விட்ட செய்தியை குறுந்செய்தி அனுப்பினேன். அவளிடம் இருந்தது அப்பவே திரும்ப கிடைத்தது பதில்.

"அடுத்து எப்ப வருவிங்க " நிறை மாத கர்ப்பிணியான என்னவளின் கேள்வி.
"சிகிரமே" என்று பதில் அனுப்பினேன்.

அடுத்தது சின்ன பிரிவு மட்டுமே இருக்கும் என்கிற நம்பிக்கையில் வீடு வந்து அடைந்தேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------