~~ROMEO~~

Everyday Starts with Happy :)

சில மொக்கை ஜோக்ஸ் ..

எனக்கு பார்வேர்ட் மெசேஜ் நிறைய வரும் .. அதும் என்னோட தம்பி அனுப்புற மெசேஜ் எல்லாம் படிச்ச உடனே மண்டை காஞ்சிடும், அதில் சிலது இங்கே ..

1. Customer: Why are you giving free sweets?? Any function today ?

Servant: Nothing sir, its just annual Clearance sir ..

Customer : !!!

2. கடவுள் எப்போ கோவபடுவர்ன்னு தெரியுமா??

கல்யாணம் ஆகாத கன்னி பெண் கர்பபமா இருக்கும் போது அவ அம்மா
" அட கடவுளே இப்படி பண்ணிடியேன்னு"
இந்த மாதுரி சொல்லும் போது தான் ..

3. மகன்: அப்பா எனக்கு பேய் கதை சொல்லுங்க

அப்பா: ஒரு கதைல " அஜித்"ன்னு தமிழ் ஹீரோ இருந்தாரு .

மகன்: ஐயோ பயமா இருக்குபா ! இன்னைக்கு இது போதும் ...

4. ஹோட்டல்ல காசு கூடுகுலனா மாவு ஆட்ட சொல்லுவாங்க , ஆனா பஸ்ல காசு கூடுகுலனா பஸ் ஓட்ட சொல்ல மாட்டேன்குரங்க ஏன் ??

பால் கோவாவை பாலில் செய்யலாம் ,, ஆனால் ரசகுலவை ரசத்தில் செய்ய முடியுமா ??

அம்மா அடிச்சா வலிக்கும் ,, அப்பா அடிச்சா வலிக்கும் ,, சைட் அடிச்சா வலிக்குமா ??

ஒரு பொண்ணு போடோவில் தேவதை மாதுரி இருந்தாலும் , நெகடிவ்ல பிசாசு மாதுரி தான் இருக்கும் ..


5. டாக்டர் : எப்படிபா அடிபட்டுச்சு ??
பேசென்ட் : பஸ்ல போகும் போது அஜித் படம் போட்டங்க , தியேட்டர் நினைச்சு எந்துரிச்சு வெளிய வந்துட்டேன் ...
டாக்டர் : நீயுமா ???

6. LKG படிக்குற பையன் UKG படிக்குற பொண்ணுகிட்ட இப்படி லவ் பண்ணுறத சொல்லுறன் :

பையன்: ஐ லவ் யு .
பொண்ணு : சீ போடா நான் உன்ன விட பெரியவ .
பையன் : நான் ரொம்ப பைத்தியமா லவ் பண்றேன்.
பொண்ணு : போடா னா !!!
பையன் : அக்கா ப்ளீஸ்கா ..

7. Cow, Cell, Ya, Super , Ajaa, Ram , Aa , Poor, Wa , Sun, Ya, Pra, Worth, Tha , Thay !

என்ன புரியலையா ?? எல்லாதையும் பாஸ்ட் ஹ படிங்க ..

அட இது சுப்ரபாதம் சார் ...


8. பேரெண்ட்: என்ன சார் என்னோட பொண்ண Glamor வர சொல்லிங்கலமே ??

டீச்சர்: நாசமா போச்சு உங்க பொண்ணுக்கு Grammar வரலைனு சொன்னேன் ..





அட பார் ரா... லுக் - 4

அட பார் ரா ஆளு என்னமோ மைனர் மாதுரி கிளம்பிட்டன் .. கணேஷ் பார்த்து குமார் கிண்டலடித்தான் ..

ஹி என்று பல்லை இளித்தான் கணேஷ் .. "பின்ன இருக்காதா மச்சி நேத்து ஆசை தீர அடிச்சு அவனுகள ஒருத்தன சச்சிடோம்ல அந்த சந்தோசம் தான்" என்றேன். "நீ சொல்லுறது சரி தான் டா மச்சி, காலைல நம்ம ரூம்க்கு போனேன் பயங்க எல்லாம் இழுத்து போர்த்திடு தூங்கிட்டு இருக்காங்க நைசா போய் டிரஸ் எடுத்து வரலாம்ன்னு போனா பரணி பையன் எழுந்துட்டன் , எங்கடா நைட் உங்கள காணோமே எங்க போய் இருந்திங்கன்னு கேட்டான். நேத்து ரமேஷ் ரூம்ல யாரும் இல்ல அதனால நாங்க அங்க படுத்துடோம்ன்னு சொல்லிட்டேன் , ஆனா அவன் ஏதோ யோசனையா கேட்டான் கொஞ்சம் உசாரா இருக்கனும் டா"

"ஆமா டா நாம நைட் எங்க இருந்தோம்ன்னு யாரு கேட்டாலும் ரமேஷ் ரூம்ல தான் இருந்தோம்ன்னு சத்தியம் பண்ணி சொல்லணும், எவனும் மதி கித்தி சொல்லிடாதிங்க" என்று எச்சரிக்கை பண்ணினான் குமார் ..

"டேய் இங்க நாம இவ்வளவு சீரியஸ் மேட்டர் பேசிட்டு இருக்கோம் இவன பாரு முக்காடு போட்டுக்கிட்டு இப்படி தூங்கிட்டு" என்று ரமேஷ் போர்வையை இழுத்தேன் + அதிர்ச்சியில் உறைந்தேன் ... பய புள்ள ஜட்டிய கூட போடாம படுத்துட்டு இருக்கான் .. கருமம் புடிச்சவன் .. "டேய் என்னடா கோலம் இது லுங்கி எல்லாம் அவுந்து இருக்குறது கூட தெரியமா தூங்கிட்டு இருக்குற எழுந்துரா முதல" கொஞ்ச நேரத்தில் ஷகிலா மாதுரி லுங்கியை மார்பு வரை கட்டி கொண்டு எழுந்து வந்தான்,
கணேஷ் பார்த்து " என்ன மச்சி ரொம்ப சந்தோசமா இருக்குர போல இன்னைக்கு நைட் பார்ட்டி வைச்சிடு டா " என்று இப்பவே தண்ணி அடிச்சவன் போல ஒரு லுக் விட்டுட்டு சென்றான் ..
பாத்ரூம் போனவன் போன வேகத்தில் ஓடி வந்தான் .. டேய் என்னோட செயின் காணோம் டா " என்ற குண்டை தூக்கி போட்டன் .. என்னடா சொல்லுற நல்ல தேடி பாரு என்று ரூம் முழுக்க தேடி பார்தோம் ஓண்ணும் அக படவில்லை,
"என்னகு என்னமோ செயின் அந்த புதருகுள்ள தான் இருக்கும், டேய் அந்த செயின் என்னோட அப்பா ஆசையா வாங்கி குடுத்தாங்கடா. அதும் இல்லாம அந்த செயின் காலேஜ்ல இருக்குற எல்லோருக்கும் தெரியும்டா அத காணோமே" என்று புலம்பி அழுதான் .

"சரி மச்சி புலம்பாத நான் அங்க போய் பார்த்துட்டு வரேன்" என்று குமார் கிளம்பினான் நானும் வரேன் என்று அவனுடன் சென்றேன். நாங்கள் அந்த இடத்தை தொலைவில் இருந்தே நோட்டம்விட்டோம், இரவில் அந்த ஏரியா இருந்த மாதுரி இல்லை இப்பொது. ஆட்கள் நடமாட்டம் கொஞ்சம் இருந்தது. நாங்கள் பதுங்கி இருந்த இடத்திற்கு கொஞ்சம் தள்ளி ஒரு குடிசை இருந்தது. , ரமேஷ் செயின் சீனியர் பசங்க கிட்ட கிடைச்சா அவள்ளவு தான். அதும் அவன் போட்டு இருந்த செயின்ல இருக்குற விநாயகர் படம் ரொம்ப வித்தியாசமா இருக்கும். யானை முடியில் விநாயகர் உருவம் செய்து இருபார்கள்.

சீனியர் ரூம்க்கு முன்பாக கொஞ்சம் கும்பல் இருந்தது, உத்து பார்ததில் எல்லாம் எங்க காலேஜ் பசங்க போல இருந்தாங்க. இந்த கும்பலில் சேராமல் எங்க கிளாஸ்மேட் பசங்க ரெண்டு பேரு ஓரமா நின்னுட்டு இருந்தாங்க. அவனுக அப்பாஸ் என்கிற சீனியர் ஸ்டுடென்ட் தம்பி மற்றும் அவன் சொந்தகார பையன். இப்போ அங்க போறதா வேண்டாமா என்று தெரியவில்லை "டேய் முர்த்தி அங்க பாரு முஸ்தபா அப்பறம் இலியாஸ் நிக்குறாங்க , நாம இங்கயே நின்னுட்டு இருக்குது நல்லா இல்ல. எவனாவது சந்தேகம் வந்துட போகுது ஒன்னு இங்க இருந்து உடனே கிளம்பனும் இல்ல அங்க போய் எட்டி பார்த்துட்டு வந்துடலாம்" என்றான் குமார் "சரி வாடா போகலாம்" என்று கிளம்பினோம் . டேய் சாதரணமா வா, முஞ்சில பயத்த கொண்டு வராத என்று எச்சரித்தான். கொஞ்சம் சீரியஸ் ஆக முகத்தை வைத்து கொண்டேன். என்ன தான் முகம் சீரியஸ்சா இருந்தாலும் மனதுக்குள் பயம் ஓவர்ரா இருந்துச்சு.

அவர்கள் ரூம்க்கு பக்கத்தில் சென்றோம், சீனியர் பையன் ஒருத்தன் எங்களை பார்த்து அவன் பக்கத்தில் வர சொன்னான். பயந்த மாதுரியே சென்றோம், எனக்கு பயம் அதிகமாக இருந்தது .

"எங்கட இங்க வந்திங்க" என்று அவன் கேட்க, என்ன சொல்லுவது என்று தெரியாமல் முழித்தேன்.

சட்டேனே குமார் முந்திகொண்டு "அண்ணே அந்த சைடுல போயிட்டு இருந்தோம் உங்க ரூம் கிட்ட கூட்டமா இருந்துச்சு அதான் என்ன எதுன்னு பார்க்கலாம்ன்னு வந்தோம்" என்று கொஞ்சம் கூட பயம் இல்லாமல் பதில் கூறினான்.

"என்னனே எதாவது பிரச்சனையா" ?

"ஆமாடா நம்ம காலேஜ்ல எங்களுக்கு சூப்பர் சீனியர் இருந்த ஒருத்தர் அர்ரியர் பேப்பர் எழுத வந்து இருக்காரு, வந்தவரு எங்களுக்கு எல்லாம் தண்ணிய வாங்கி குடுத்தாரு. தண்ணிய போடுட்டு நாங்க எல்லாம் மட்டை ஆகிடோம், நைட் இவரு பாத் ரூம் போறதுக்கு போய் இருகாரு , அந்த நேரத்துல எவனோ களவாணி பையங்க இவர துக்கிட்டு போய் எதாவது பணம் செயின் இருக்குமான்னு பார்த்து இருந்து இருக்காங்க , ஒண்ணும் தேரலைன்னு நாலு சாது சாத்தி கயறு எடுத்து கை , கால் கட்டி வாசல போடுட்டு போய்டாங்க , அடிச்சது யாருன்னு தெரியல அந்த அளவுக்கு இவரும் போதைல இருந்து இருகாரு ".

அவன் அடுத்து சொன்னதை கேட்ட பிறகுதான் எங்களுக்கு பயம் அதிகம் ஆகியது. போலீஸ்க்கு சொல்லலாம் என்று முடிவு பண்ணி இருகிறார்கள் .
அடி வாங்கினவன் முகத்தை பார்க்கலாம் என்று அந்த கும்பலில் எட்டி பார்த்தோம்,

ஐயோ இவனா என்று மனம் முழுவதும் அலறியது!!!!! ...



அட பார் ரா... லுக் - 3

அட பார் ரா ..

இந்த மண்டை கூட ஏதோ யோசிக்குது என்று கணேஷ் குமாரை பார்த்து கிண்டல் அடித்தான்.
அவன் சொன்ன பிளானை கேட்ட பிறகு கூட கணேஷ் எப்படி இவள்ளவு ஜாலியா கிண்டல் பண்ணுறான் என்றுதான் புரியவில்லை.
மச்சி உண்மைய சொல்லு உனக்கு பயமா இல்லையாடா ?? என்று கணேஷ் பார்த்து கேட்டேன்.

" இப்ப எனக்கு இருக்குது எல்லாம் வெறிதான் டா . என்னைய எப்படி அரஞ்சன்னு எனக்குதான் தெரியும்" என்று அவன் கன்னத்தை தடவி சொல்லும் போதே அவன் கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.

ஓகே கோதாவுல இறங்கிடலாம் ,, ஏன் டா மச்சி அடி வாங்குனது 5 பேருக்கு மேல இருக்கும் அவனுகள விட்டுட்டு என்னையும் கணேஷ்யும் மட்டும் ஏன்டா தனியா வர சொன்ன?

மச்சி மத்த பசங்க முஞ்சிய நாம ஸ்டிரைக்ன்னு சொல்லும் போதே பார்த்தேன் பேய் அறஞ்ச மாதுரி முழிகுரங்க, இந்த மாதுரி நாம பண்ண போறோம்ன்னு சொன்னா அவ்வளவு தான் நாளா போல சீனியர் பசங்க கேட்டா அடிக்கு பயந்துட்டு நம்மள போட்டு குடுத்துடுவாங்க. சரி வாங்கடா நாம ரமேஷ் ரூம்க்கு போலாம் அவன் கூட இருந்தா நமக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும் .

ரமேஷ் ரூம்ல முக்காடு போட்டுக்கிட்டு நல்ல துங்கிட்டு இருந்தான். அவன எழுப்பி மேட்டர் சொன்ன உடனே பயபுள்ள ஏதோ கறி சோறு சாப்பிட கிளம்பினவன் மாதுரி ஒரு போர்வைய தூக்கிட்டு கிளம்பிட்டன்..

இரவு 11 மணி ஆகிவிட்டது, ஊருல நடமாட்டமே இல்ல, சீனியர் பசங்க தங்கி இருக்கும் ரூம்க்கு எதிர்ல இருக்குற புதர் மண்டில ஒளிஞ்சி இருந்தோம். ரமேஷ் விட்டா அங்கயே தூங்கிடுவன் போல மண்டைய மண்டைய ஆடிட்டு இருந்தான். கணேஷ் கொலை வெறில உக்காந்துட்டு இருந்தான்... கொஞ்சம் கூட பயமே இல்லாத மாதுரி நான் நடித்து கொண்டு இருந்தேன்.

இருந்ததுக்கு கை மேல பலன் கிடைத்தது.. கணேஷ் காமிச்ச ஒரு பையன் மேலே இருந்து பாத்ரூம் போவதற்கு கீழே வந்து கொண்டு இருந்தான்.. எல்லோரும் சுதாரித்து கொண்டோம் ரமேஷ் போர்வையை எடுத்து நன்றாக அவன் முகம் தெரியாத படி முடிகொண்டு முதலில் சென்றான், எங்களது பிளான் படி அவன் பாத்ரூம்யில் இருந்து வெளியேறி மாடிக்கு செல்லும் போது அவனை தூக்கிட்டு செல்ல வேண்டும். அவனை வெறி தீர அடிக்க வேண்டும் ..

ரமேஷ் முதல் படிக்கட்டில் நின்று கொண்டு இருந்தான் நாங்கள் ஆளுக்கு ஒரு புறம் பிரிந்து ஒளிந்து கொண்டோம். அவன் கதவை திறக்கும் சதம் கேட்டது .. அவனின் காலடி சத்தம் மாடி படி ஏற சென்றது ... ரமேஷ் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அவனை எதிர் கொள்ள துணித்து விட்டன் என்பது போல அவன் கையில் இருந்த போர்வையை பிடித்து இருந்தான்..

எங்களின் ஒவ்வொரு இதயமும் சாதரண நிலையில் இருந்து இருமடங்கு துடித்து கொண்டு இருந்தது... இன்னும் சிறு வினாடிகளில் அவன் ரமேஷ்யை நெருங்க போகிறான் என்று தெரிந்தது .. நாங்கள் கொஞ்சம் முன்னேறி சென்றோம் ... அவன் படிக்கட்டில் கால் எடுத்து வைத்த உடன் போர்வை கொண்டு அவனை அமுகினான் ரமேஷ் .. பின்னாளில் இருந்து நான் , குமார் மற்றும் கணேஷ் வேகமாக ஓடி சென்று அவனை அலேக்காக தூக்கினோம்.. கணேஷ் அவன் வாய்யை துண்டு கொண்டு அமுத்தினான்.. நான் அவனின் கால்களை பிடித்து தூக்கினேன், அவனின் கைகளை குமார் கெட்டியாக பிடித்து கொண்டான் அப்படியே அவனை புதர் மண்டிக்கு தூக்கி சென்றோம், கை , கால்கள் கட்ட பட்டு இருந்ததால் நகற முடியாமல் அங்கயே முனகி கொண்டு இருந்தான் .. கணேஷ் முதலில் அவனை நன்கு நன்கு என்று மேதிதான் .. பலம கொண்டு அவனின் கணங்களில் அறைந்தான்.. கணேஷ் அடி வாங்கினவன் என்பதனால் நாங்கள் அவனை ஏதும் பண்ணவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் அவனை கணேஷ் அடித்து இருந்தால் கண்டிபாக அவன் மூர்ச்சை ஆகி விடுவான் என்று தெரிந்தது .. ரமேஷ் மற்றும் நான் கணேஷ்யை போதும் என்று இழுத்து வந்தோம் ...

குமார் அவனை துக்கி கொண்டு படிக்கட்டு சென்றான் எங்களின் துணிகளால் கட்ட பட்டு இருந்த கை மற்றும் கால்களை விடுவித்து அங்கு துணி காய போட இருந்த நைலான் கயிர் கொண்டு கால்கள் மற்றும் கையை கட்டினான், கணேஷ் அவனின் லுங்கி உருவி முகத்தை கட்டினான் ....
எல்லோரும் அங்கு இருந்து வேகமாக ரமேஷ் ரூம் நோக்கி சென்றோம் ... அடுத்த நாள் நடக்க போகும் விபரிதம் தெரியாமல் நான்கு பேரும் சிரித்த படி புகைத்து கொண்டு இருந்தோம் .. ..