மூட நம்பிக்கை அல்லது கொலைவெறி
சென்ற வாரமே இதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் அந்த பக்கத்தை திருப்பும் போது எல்லாம் எனது மகனின் முகம் தான் நினைவுக்கு வந்தது.
http://romeowrites.blogspot.com/2010/04/blog-post_15.html
இட மாற்றம்
எனது வலைபூ இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
Romeo (http://romeowrites.blogspot.com)
இனி எனது பதிவுகள் எல்லாம் இந்த வலைபூவில் பதிவேற்றப்படும். உங்கள் ஆதரவை எப்பொழுதும் போல தருமாறு கேட்டுகொள்கிறேன். .
With Love
Romeo ;)
கொஞ்சம் இடைவேளை
ஏன் எழுதவேண்டும் என்று இப்பொழுது எல்லாம் ரொம்ப யோசிக்கிறேன். எனக்கு படிப்பதில் தான் அதிக விருப்பம். புதிதாக எழுத வரும் போது ஏன் எதற்கு என்று தெரியாமல் ஒரு வித ஆர்வ கோளாறில் எழுதினேன். இப்போது அந்த ஆர்வம் எங்கே சென்றது என்று தெரியவில்லை.
இரண்டு வருடங்களாக புத்தகங்கள் படிப்பதில் இருந்த ஆர்வம் வலைதளத்திலும் திருப்பி இரண்டையும் ஒரு சேர படித்தேன். புத்தகங்களை பயணங்களில் தான் அதிகம் படிப்பேன். அலுவலகம் வந்த பிறகு வேலையில்லாத சமயங்களில் ஏதோ தேட போய் வலைப்பூ பற்றி தெரிந்து கொண்டு படிக்க வந்தேன்.திகட்ட திகட்ட படித்தேன், படித்துகொண்டு இருக்கிறேன்.
நான் ஏன் எழுதவேண்டும் என்று சில நாட்களாக மனதை போட்டு குழப்பிக்கொண்டு இருக்கிறேன். எனது எழுத்துகளுக்கு அவ்வளவு வரவேற்புயில்லை என்பது எனக்கு தெரியும். பிறகு நான் ஏன் எழுதுகிறேன்??
எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை சொல்கிறேன், கொஞ்சம் கற்பனை கலந்த கதையை சொல்கிறேன், கவிதை எழுத முயற்சித்து தோற்றுள்ளேன், தொடர்கதை எழுதி வரவேற்பு இல்லாமல் நிறுத்தியுள்ளேன், சிறுகதை எழுதுவதில் கொஞ்சம் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். நான் படித்த புத்தகங்களை பற்றி எனது பார்வையில் எழுதியுள்ளேன். இதன் பிறகும் ஏன் நான் எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.
எனது நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள வயதுவித்தியாசம் இல்லாமல் அதிக மக்களை நண்பர்களாகியுள்ளேன், எதிரிகள் என்று சொல்ல ஒருவருமில்லை. பிறகு நான் ஏன் லக்கி, அதிஷாவிடம் எழுத்தின் மூலம் சண்டை போட்டேன் ?? இதற்கா எழுதவந்தேன்
எழுதுவதற்கு எவ்வளோ இருக்கிறது அதில் எதை எழுதுவது என்று மனதில் குறித்து வைத்து இருந்தது எல்லாம் எழுதும் போது மறந்து போய்விடுகிறது அல்லது அது தேவைதான என்று தோன்றுகிறது. நான் எழுதுவதினால் யாருக்கு பயன்? நான் எழுதாமல் இருந்தால் யாருக்கு பயன்? எழுதி என்ன கிழிக்க போறேன்?? போதும் என்று நினைக்க தோன்றுகிறது.
ஒரு விஷயத்தை ரொம்ப ஆர்வமாக தொடங்கிவிடுவேன், கொஞ்ச நாட்கள் செல்ல செல்ல அதில் இருக்கும் போதை, ஆர்வம் அல்லது வசீகரம் எல்லாம் என்னை விட்டு போய்விடும். பிறகு அதுவோரு வேற்றிடமாகதான் எனக்கு தோன்றும். அதைவிட்டு தூர சென்றுவிடுவேன், சில நாட்களுக்கு பிறகு அதை திரும்ப பார்க்கும் போது அழகாக தெரியும், ஆர்வம் மேலிடம், அதில் சென்று ஊற வேண்டும் என்று தோன்றும். அன்றைய காலம் வரும் அப்பொழுது திரும்பி வருவேன்.
எனக்கு படிப்பதில் தான் ஆனந்தம். அதில் இருக்கும் சுகமே தனி.
இந்த மாதம் முதல் எனது வலைப்பூவில் நான் எழுதுவதை நிறுத்திவிடலாம் என்று இருக்கிறேன்.
கொஞ்சம் இடைவேளை
With Love
Romeo ;)
Subscribe to:
Posts (Atom)