~~ROMEO~~

Everyday Starts with Happy :)

யுவகிருஷ்ணாவின் பின்னுடத்துக்கு எனது பதில்


பதிவர் யுவகிருஷ்ணா எனது
முந்தைய பதிவிற்கு முதல் முதலில் பின்னுடம்யிட்டு சென்றார். அவர் தரப்பு நீயாயத்தை கூறினார். அவரின் அவ்வளவு பெரிய பின்னுடத்துக்கு இந்த பதிவில் பதிலளிக்கிறேன்.




1.புத்தகக்காட்சிக்கு நான் பதிவர்களை சந்திக்க வரவில்லை. இரண்டு கோடி புத்தகங்கள் குவிந்திருக்கும் ஒரு கண்காட்சி நடத்தப்படுவது சந்திப்புகளுக்காக அல்ல. சந்திக்க அது பீச்சோ அல்லது பார்க்கோ அல்ல.

பதிவர்கள் யாருமே பதிவர்களை சந்திபதற்கு மட்டுமே வருவதுயில்லை. கண்காட்சிக்கு வந்த அனைவரும் ஏதோ ஒரு புத்தகத்தை வாங்கி தான் சென்றார்கள். பதிவர் சர்புதீன் சந்திப்பு மட்டுமே திடீர் என்று முடிவாகி சந்தித்தோம். சந்திப்புகள் நடப்பதற்கு பீச் அல்லது பூங்காவில் தான் சந்திக்க வேண்டுமா என்ன ??


2. கண்காட்சி நடந்த பத்து நாளும் நான் வந்திருந்தேன். வேடிக்கை பார்க்கவோ, புத்தகம் வாங்கவோ மட்டுமல்ல. எங்களுடைய ஸ்டால் அங்கிருந்தது. பணிநிமித்தமாக வந்தே ஆகவேண்டிய கட்டாயம். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை நான் ஸ்டாலில் இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்.

லக்கி உங்கள் ஸ்டால் அங்கு இருந்தது எனக்கு தெரியும்,
நான் அங்கு இருந்த 3 நாட்களில் ஒரு தடவை கூட உங்களை நான் அங்கு பார்த்தது இல்லை . பா. ராவிடம் மட்டும் பேச நேரம் இருந்த உங்களிடம் எங்களை கண்டுக்காமல் இருந்தது என்ன அர்த்தம்?
பா. ராவிடம் நீங்க ரெண்டு பேரும் பேசிக்கொண்டு இருக்கும் போது நான் மற்றும் சிலர் அருகில் வந்தோம். எல்லோரிடமும் பா.ரா பெயர் கேட்டார். நீங்க எதுவுமே நடக்காத மாதிரி அல்லவா இருந்திங்க. ஒரு வார்த்தை கூட பேசவில்லையே !!!


3. புத்தகக் காட்சியில் பதிவர்களை சந்தித்துதான் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும் என்ற அவசியம் எதுவும் எங்களுக்கு இல்லை. அதுதான் ‘நகர்வு' எனப்படுமெனின் நாங்கள் நகராமல் இங்கேயே உட்கார்ந்து கொள்கிறோம்.

பதிவர்களை சந்திப்பதால் நீங்க அல்ல எவருமே எங்கும் சென்று விட முடியாது. மெரீனா பீச்ல் நடந்த கடைசி பதிவர் சந்திப்பில் உங்களிடம் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். நான் அதிகம்
படித்தது உங்களின் பதிவுகள்தான் என்று உங்களிடமே சொன்னேன் அது உண்மையும் கூட . அப்பொழுது புதிய தலைமுறை இதழ் வெளிவர இருந்த வாரம். நீங்க மற்றும் ஆதிஷா இருவரும் அதில் பணியாற்றுவதை பற்றி கூட கேட்டேன் . ஆனால் இன்றோ?? உங்களிடம் ஒருவர் எப்படி இருக்கீங்க என்று கேட்கிறார். அவருக்கு உங்களின் பதில் சிரித்த முகத்துடன் நலம் என்று சொல்லிவிட்டு, அடுத்த விநாடி அப்பறம் பார்க்கலாம் என்று முகத்தில் அடித்தார் போல சொல்லி அந்த இடத்தைவிட்டு நகர்வது எந்த விதத்தில் நியாயம்?? இதை இதழ் வருவதற்கு முன்னால் - இதழ் வந்த பின்னால் என்று எடுத்து கொள்ளவும்.

இதை தான் நான் அடுத்த கட்டம் என்று சொன்னேன்.


4. உங்களை அங்கே நேரில் சந்தித்தபோது புன்னகைத்தேன். பதிலுக்கு நீங்களும் புன்னகைத்தீர்கள். அடுத்தமுறை எங்காவது சந்திக்கும்போது உங்களை கண்டு நான் புன்னகைக்க வேண்டாம் என்று முடிவெடுத்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி

நான் உங்களை ஒதுக்கவில்லை, இப்போது கூட அதிஷாவின் பதிவிற்கு
பின்னுடம்யிட்டுள்ளேன், எனது கோவம் உங்களின் செயலில் தானே தவற உங்களின் எழுத்துகள் மீது அல்ல . அடுத்த முறை உங்களை சந்தித்தால் கண்டிப்பாக எப்பொழுதும் போல கைகுடுத்து நலம் விசாரிப்பேன். ஏன் என்றால் எனக்கு முச்சாயம் பூசி பழக்கம் இல்லை, அதே போன்று அடுத்த கட்டத்துக்கு செல்லவும் இல்லை.



போன பதிவில் எனது ஆதங்கத்தை தான் சொல்லி இருக்கிறேன் . அன்று நீங்க நடந்து கொண்ட செயல் என்னை சிறிதளவு பாதித்தது என்னவோ உண்மையே.


With Love
Romeo ;)

23 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

குருவுகேற்ற சிஷ்யன் வாய்ப்பது இந்த கலிகாலத்தில் மிக கடினம், அந்த வகையில் நாமெல்லாம் சந்தோசப்பட வேண்டும்!, அதை விட்டுட்டு பதில் சொல்லிகிட்டு இருக்கிங்க சின்னபுள்ள தனமா!

 

@வால்பையன்

எனக்கும் பதில் தருவதில் இஷ்டம் இல்லை தான். ஆனா இவ்வளவு பெரிய பின்னுடத்துக்கு பதில் சொல்லாமல் இருப்பது எனக்கு என்னமோ போத்திக்கிட்டு போகுற மாதிரி இருக்கு.

 

இதுவரைக்கும் மைனஸ் எதுவும் வரலியே!!

நான் வேணும்னா ஒண்ணு போடவா? :))

 

ஓ. இது தான் மேட்டரா ? இப்போது புரிகிறது.

 

"பரட்டை , பத்த வச்சிட்டியே " என்ற வசனம் எதோ நினைவுக்கு வருகிறது

 

@ சங்கர்

நண்பா எனக்கு இந்த ஓட்டு விஷயத்தில் நம்பிக்கையே இல்ல .

@பின்னோக்கி
அப்ப ஒரு வழிய புரிஞ்சிடுச்சு உங்களுக்கு

@ மந்திரன்
உங்கள் வருகைக்கு நன்றி. பத்த வைகப்படேன் என்பதே உண்மை சகா

 

மைனஸ் ஓட்டு போடுறது, ஒரு எதிர் கலாச்சார நடவடிக்கைன்னு, எங்க குருநாதர் சொல்லியிருக்காரு :))

 

இது உங்க பதிவு..உங்க கருத்து. அழகா சரியான வார்த்தைகளுடன் பதிந்து இருக்கீங்க!!

ஆனா அவர் பக்கமும் நியாயம் இருக்கலாமோ? பதில் சொல்லுவார் என்று எதிர் பார்க்குறேன்..

 

பொங்கல் வாழ்த்துக்கள் ரோ...::))

 

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

 

@ உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com)
நன்றி. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

@சங்கர்
உங்க குருநாயர் யாரு நண்பா ??

@செந்தில்நாதன்

அவர் தரப்பு நியாயத்தை எழுதினால் அதை பொறுத்தே இருக்கும் எனது பதில். ஏன் என்றால் நான் எதிர்க்க பிறந்தவன், புறமுதுகு இட்டு ஓடமாட்டேன்.

@ பலா பட்டறை
நன்றி சகா .

@ புலவன் புலிகேசி
நன்றி உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் சகா

 

ஆழ்ந்த கருத்துக்களை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.

ஆனால் இதை அவருக்கு மடலனுப்பி கூட சொல்லி இருக்கலாம். சொல்லி இருந்தால் பொத்திக்கொண்டு போயிருப்பீர்கள் என்று மற்றவர் நினைக்க கூடும். அதனால் நீங்க எதையும் பொத்தாமல் பொத்தாம் பொதுவாக பொதுவில் சொன்னது அளவில்லா மகிழ்ச்சியளிக்கிறது.

நடத்துங்க!

மற்றபடி என்பெயர் ஆதிஷா அல்ல அதிஷா

 

அடுத்த பதிவர் சந்திப்பில் சொல்கிறேன்

 

அட பதிவுலகுல எல்லாருக்குமே தெரியும் அவரோட தலைக்கணத்தை பத்தி, கூட இருக்கும் போது நல்லா பேசி சிரிச்சுட்டு போனதுக்கும் அப்புறம் காறி துப்புவாங்க. மதியாதார் வாசலை மிதிக்காதீங்க.

தனக்கு ஆக வேண்டிய காரியங்களுக்காக மட்டும் ஒரு நாலு பேருக்கிட்ட பேசுவாறு அவ்வளவுதான்.

 

@ அதிஷா

\\ஆனால் இதை அவருக்கு மடலனுப்பி கூட சொல்லி இருக்கலாம்//

அவர் எனக்கு தனியாக மடலனுப்பி கேட்டு இருந்தால் நானும் அதே போன்று செய்து இருப்பேன். எல்லாம் தெரிஞ்சிடே பேசுறிங்களே ??

\\அதனால் நீங்க எதையும் பொத்தாமல் பொத்தாம் பொதுவாக பொதுவில் சொன்னது அளவில்லா மகிழ்ச்சியளிக்கிறது//

விருப்பமே இல்லாமல் தான் இந்த பதிவை எழுதினேன் என்பது உங்களுக்கு தெரியமா?? என்னை இந்த பதிவு எழுத தூண்டியது அந்த பின்னுடம் தானே.

நடத்தப்படுகிறேன் நண்பா

மற்றபடி உங்கள் பெயரை மாற்றி எழுதியதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

 

@ damildumil

ஹ்ம்ம் இவ்வளவு விஷயம் இருக்கா ??

 

ssssshhhhhhhhhhhh i call you later romeo about magazine contents

 

@ vellinila

Sure call me .

 

அற்புதமான பதிவு. இதை அப்படியே கல்வெட்டாக செதுக்கி வைத்தால், வரும் சந்ததியினர் உங்களை போற்றி புகழ்ந்து மகிழ்வார்கள்! :-)

 

@ யுவகிருஷ்ணா

என்ன தான் உங்கள் மேல் தப்பு இருந்தாலும் அதை மறைமுகமாக மறுத்து இருக்கீங்க லக்கி, இந்த நேர்மை தான் எனக்கு புடிச்சு இருக்கு.
கல்வெட்டு எல்லாம் வேண்டாம் லக்கி, பேசாமல் இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து உங்கள் ப்ளாக்ல போடுங்க போதும். என்னை போற்றி மகிழ்வார்களோ இல்லையோ. உங்களை பற்றி தெரிந்து கொள்வார்கள். :D

 

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா.

 

@ mayilravanan

நன்றி உங்களுக்கும் எனது தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.