~~ROMEO~~

Everyday Starts with Happy :)

புத்தக சந்தையில் பதிவர்கள் சந்திப்பு

புத்தக கண்காட்சியில் பதிவர்கள் சந்திப்புன்னு கேபிள் பதிவில் படித்ததும் சொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. புத்தக கண்காட்சிக்கு செலவதே ரொம்ப சந்தோசம், இதில் பதிவர்கள் சந்திப்பு என்றால் இரட்டிப்பு சந்தோசம் தானே.

பதிவர்கள் சந்திப்பிற்கு முன் எழுத்தாளர் அழகிய பெரியவனை சந்தித்து, சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். சற்று நேரத்தில் கிழக்கு பக்கம் பதிவர்கள் வர ஆரமித்து விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்தது. சர்புதீன் பேசியபோது பதிவர்கள் சிலர் இடை இடையே பேசிக்கொண்டு இருந்ததால் அவரின் பேச்சை முழுமையாக கேட்க முடியவில்லை. அவராலும் முழுமையாக பேசமுடியவில்லை போன்று இருந்தது அவரின் பேச்சு. அவரை மட்டுமே பேசவிட்டு கடைசியில் தங்களது எண்ணங்கள் மற்றும் கேள்வியை எழுப்பி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். சர்புதீன் பதிவர்களை தனியாக சந்திக்கும் போது தனது நோக்கத்தை திரும்ப விளக்கி கொண்டிருந்தார்.

பதிவர்கள் மற்றும் புத்தக கண்காட்சியில் எடுத்த புகைப்படங்கள்







கார்க்கி, பலா பட்டறை, ஜெட்லி, மீன்துளியான், புலவன் புலிகேசி மற்றும் பலரை முதல் முறை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அண்ணன்கள் ஜாகி, கேபிள், தண்டோரா, நரசிம்,பைத்தியக்காரன்,அப்துல்லா, காவேரி கணேஷ், Butterfly சூர்யா மற்றும் சிலரை சந்தித்ததில் சந்தோஷமாக கழிந்தது அன்றைய மாலை பொழுது.
அண்ணன் தண்டோரா ஒரு கதை சொன்னார், அதை அவரின் பதிவில் எழுத சொன்னேன் பார்க்கலாம் எழுதுவாரா என்று.

அடுத்த முறை கண்டிப்பாக இதே போன்று ஒரு பதிவர் சந்திப்பை புத்தக கண்காட்சியில் வைக்கவேண்டும், இதே போன்று சந்தோஷமாக கும்மி அடிக்கவேண்டும் ...


மூத்த பதிவாளர்கள் இருவரை சந்தித்தேன், ஏன் என்று தெரியவில்லை மற்ற பதிவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் இருந்தது சில மணி துளிகள் தான். ஏனோ இவர்கள் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். அவர்களிடம் சென்று பேசினால் ஒரு சிரிப்பு , ஒரு விசாரிப்பு என்று ஒதுங்கி கொண்டார்கள். இதற்கு பெயர் தான் அடுத்த கட்டத்துக்கு செல்வதா ?? பதிவுலக ஸ்டார் என்கிற நிலை போய் இவரும் ஒரு பதிவர் என்கிற ரகத்தில் சேர்ந்தாலும் சேரலாம்.



18 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

// மூத்த பதிவாளர்கள் இருவரை சந்தித்தேன், ஏன் என்று தெரியவில்லை மற்ற பதிவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் இருந்தது சில மணி துளிகள் தான். ஏனோ இவர்கள் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். அவர்களிடம் சென்று பேசினால் ஒரு சிரிப்பு , ஒரு விசாரிப்பு என்று ஒதுங்கி கொண்டார்கள். இதற்கு பெயர் தான் அடுத்த கட்டத்துக்கு செல்வதா ?? //

ஹா .. ஹா .. ஹா ...

அருமை! ரசித்தேன்! ;)

 

இத்தனை போட்டோ எடுத்து என்ன பிரயோஜனம், அந்த பிகரை திரும்ப பார்க்க முடியலையே :))

 

ஏண்டா தம்பி எங்களுதையெல்லாம் உருவாட்டி உங்களை மாதிரி காளான்களுக்கெல்லாம் தூக்கமே வராதா? நாங்க எல்லாம் சராசரி கிடையாதுப்பா,புரிஞ்சிக்கோ

 

அந்த கதையை இங்க சொல்லட்டுமா?

 

@ தண்டோரா ......

அண்ணே, நான் அடுத்த மாதம் நேரில் கேட்டுக்கறேன்

 

// தண்டோரா ...... said...
அந்த கதையை இங்க சொல்லட்டுமா?
//

அண்ணே இங்கேய சொல்லுங்க

 

@ மணிப்பக்கம்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே .

@சங்கர்
ஆமா சங்கர் எனக்கு அந்த வருத்தம் இருக்கிறது. அதுசரி சாமிக்கு ஏன் பிகர் பற்றிய கவலை ??

@ Pot"tea" kadai
ஐயா ராசா நான் அந்த இரண்டு பேரை தானே சொன்னேன் உங்களை இல்லையே. அப்ப அந்த இரண்டு பேருல நீங்களும் ஒருவரா ?? உங்கள உருவதுனால எனக்கு என்ன ஸ்டார் பேச்சா குத்த போறாங்க ??

@ தண்டோரா
வேண்டாம் அண்ணே வேண்டாம். நான் இந்த விளையாட்டுக்கு வரல

@ மீன்துள்ளியான்

ஹலோ பாஸ் ஏன் இந்த கொலை வெறி ??

 

கடைசி நாள் கூட்டம் அம்மிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். அதுல நீங்க கும்ம ஆசை ?.

யாரு அந்த 2 பேர். க்ளூ குடுங்க. கேபிளாரும் எழுதியிருக்கிறார். கண்டுபிடிக்க முடியவில்லை

 

உங்களையும் நண்பர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி...

//Blogger மீன்துள்ளியான் said...

// தண்டோரா ...... said...
அந்த கதையை இங்க சொல்லட்டுமா?
//

அண்ணே இங்கேய சொல்லுங்க//

வேணாம் அது எதோ ஏடாகூடமான கதைன்னு நெனைக்கிறேன்

 

அடுத்த முறை கண்டிப்பாக இதே போன்று ஒரு பதிவர் சந்திப்பை புத்தக கண்காட்சியில் வைக்கவேண்டும், இதே போன்று சந்தோஷமாக கும்மி அடிக்கவேண்டும் ... ..........அடிங்க, அடிங்க, அடிங்க.......... என்ஜாய்.........மக்கா.....என்ஜாய்.

 

//இத்தனை போட்டோ எடுத்து என்ன பிரயோஜனம், அந்த பிகரை திரும்ப பார்க்க முடியலையே :))

//

ஆண்டவா....மாலை போட்டுட்டு பண்ற காரியங்களை பார்,..

 

ரோமியோ..உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி..::))

 

@ பின்னோக்கி
என்ன பாஸ் இது கூட தெரியலையா? அவங்கதாங்க அந்த ரெண்டு பேரு ..

@ சினிமா புலவன்
உங்களையும் சந்திததில் மகிழ்ச்சியே. அந்த கதையை அண்ணன் ப்ளாக்ல எழுதினாதான் டாப் ..

@Chitra
கண்டிப்பா நடக்கும்

@ஜெட்லி
மாலைய போட்டு இருக்கும் போதே இத்தனை செட்டை .. மாலைய கழட்டிடா என்ன பண்ணுவாரோ

@ பலா பட்டறை

எனக்கும் தான் தலைவரே .

 

அடுத்த கட்டமா, சண்டை காட்சிகள் எப்போ??
:-))))
ஸ்மைலி போட்டுடேன்.. சண்டைக்கு வராதீங்க..

 

//மூத்த பதிவாளர்கள் இருவரை சந்தித்தேன், ஏன் என்று தெரியவில்லை மற்ற பதிவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் இருந்தது சில மணி துளிகள் தான். ஏனோ இவர்கள் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். அவர்களிடம் சென்று பேசினால் ஒரு சிரிப்பு , ஒரு விசாரிப்பு என்று ஒதுங்கி கொண்டார்கள். இதற்கு பெயர் தான் அடுத்த கட்டத்துக்கு செல்வதா ?? பதிவுலக ஸ்டார் என்கிற நிலை போய் இவரும் ஒரு பதிவர் என்கிற ரகத்தில் சேர்ந்தாலும் சேரலாம்.//

இந்தப் பத்தி என்னையும், தோழர் அதிஷாவையும் சுட்டுகிறது என்றால் இந்த விளக்கம் :

1. புத்தகக்காட்சிக்கு நான் பதிவர்களை சந்திக்க வரவில்லை. இரண்டு கோடி புத்தகங்கள் குவிந்திருக்கும் ஒரு கண்காட்சி நடத்தப்படுவது சந்திப்புகளுக்காக அல்ல. சந்திக்க அது பீச்சோ அல்லது பார்க்கோ அல்ல.

2. கண்காட்சி நடந்த பத்து நாளும் நான் வந்திருந்தேன். வேடிக்கை பார்க்கவோ, புத்தகம் வாங்கவோ மட்டுமல்ல. எங்களுடைய ஸ்டால் அங்கிருந்தது. பணிநிமித்தமாக வந்தே ஆகவேண்டிய கட்டாயம். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை நான் ஸ்டாலில் இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்.

3. புத்தகக் காட்சியில் பதிவர்களை சந்தித்துதான் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும் என்ற அவசியம் எதுவும் எங்களுக்கு இல்லை. அதுதான் ‘நகர்வு' எனப்படுமெனின் நாங்கள் நகராமல் இங்கேயே உட்கார்ந்து கொள்கிறோம்.

4. உங்களை அங்கே நேரில் சந்தித்தபோது புன்னகைத்தேன். பதிலுக்கு நீங்களும் புன்னகைத்தீர்கள். அடுத்தமுறை எங்காவது சந்திக்கும்போது உங்களை கண்டு நான் புன்னகைக்க வேண்டாம் என்று முடிவெடுத்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி!

 

@ யுவகிருஷ்ணா

உங்கள் முதல் வருகைக்கு நன்றி. முதல் பின்னுடமே இவ்வளவு காட்ட இருக்கே. உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லிவிடிர்கள் அதற்கு நன்றி. இவ்வளவு பெரிய பின்னுடத்துக்கு எனது பதிலை ஒரு பதிவாக எழுதினால் என்னால் பதில் தரமுடியும்.

 

@ கலையரசன்

:D நானும் ஸ்மைலி போட்டேன்

 

போட்டோக்கள் அருமை.. ரோமியோ..