~~ROMEO~~

Everyday Starts with Happy :)

புத்தக சந்தையில்

படிக்கணும் பாஸ் .. நிறைய படிக்கணும். அலுக்க அலுக்க படிக்கணும். தேடி புடிச்சி படிக்கணும், வெறியா படிக்கணும்..

யாராவது என்னை புத்தகம் படிப்பதை பற்றி கேட்டால் நான் முன்னர் சொன்னது தான் பதிலாக இருக்கும்.

நேற்று புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தேன் .. ஒவ்வொரு ஸ்டாலாக சென்று என்ன மாதிரியான புத்தகம் இருக்கிறது என்று பார்த்து கொண்டே வந்தேன்.

சிறுவர்களுக்கு என்று நிறைய புத்தகங்கள் இருக்கிறது. சில புத்தகங்களை வாசித்த போது நான் சிறியவனாக இருந்தே இருக்கலாம் என்று தோன்றியது.

மாணவ மாணவியர்கள் படிப்பு சம்பந்தப்பட்ட கடைகளில் மொய்த்தார்கள்.

கிழக்கு பதிப்பக நூல்கள், சுஜாதா நூல்கள் தான் நிறைய கடைகளில் இருந்தது. புத்தக கண்காட்சியில் அறிவியல் பற்றிய நிறைய நூல்கள் இடம் பெற்றிருந்தது சந்தோஷமே.


கண்காட்சில் எடுத்த சில புகைப்படங்கள்.

3 மணிக்கு சென்றவன் மாலை 7.30 மணிக்கு தான் வெளியே வந்தேன். 3 மணி முதலே மக்கள் வர ஆரமித்து விட்டார்கள் நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே தான் இருந்தது

சாரு, ராமகிருஷ்ணன் அவர்களை பார்த்தது சந்தோசமாக இருந்தது. இருவரிடமும் அவர்களின் புத்தகங்களின் பிரதிகளில் கையெழுத்து வாங்கினேன்


உரிமை பதிப்பகத்தில் நிறைய கூட்டம், அதே போன்று கிழக்கு பதிப்பகத்தில்.



கை நிறைய புத்தகங்களுடன் வெளியே வந்தேன், வாங்கிய புத்தகங்கள் பட்டியல்

நக்கீரன் - சேலஞ்ச
நான் சந்தித்த மரணங்கள்
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
மாமனிதர் நபிகள் நாயகம்
ராஜீவ் கொலை வழக்கு
கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளி
சர்வம் ஸ்டாலின் மயம்
பாரதியார் கதைகள்
ஊறு பசி - ராமகிருஷ்ணன்
காமரூப கதைகள்
ரெண்டாம் ஆட்டம்
கடவுளும் நானும்
அதிகாரம், அமைதி, சுதந்திரம்
கொல்லனின் ஆறு பெண் மக்கள் - கோணங்கி
மரப்பாச்சியின் சில ஆடைகள்
பெருவெளி சலனங்கள்


பண பற்றாக்குறை காரணமாக வா.மு. கோமுவின் ‘சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்” , ஜெயமோகனின் ஏழாம் உலகம் , ராமகிருஷ்ணனின் யாமம் புத்தகங்கள் வாங்க முடிவில்லை.



இன்றோ நாளையோ கண்டிப்பாக திரும்ப செல்வேன் என்று நினைக்கிறன்.

15 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

//அழுக்க அழுக்க படிக்கணும். //

அலுக்க...

புகைப்படங்கள் அருமை

உங்கள் புத்தகப் பட்டியல் பகிர்தலுக்கு நன்றி

 

@ ஈரோடு கதிர்

திருத்தியதற்கு நன்றி தலைவரே ..

 

பதிவும் படங்களும் அருமை. நல்ல selections.

 

நீங்க வாங்கினதுல ரெண்டு புத்தகம் மட்டும் தான் கேள்விப் பட்ட மாதிரி இருக்கு. எல்லாருடைய பட்டியலையும் பார்த்தா, பயமா இருக்கு :).

நிறைய படிக்கணுமா ?.. ம்ம்... இன்னும் ரெண்டு வருஷம் காத்திருங்கள். உங்கள் குழந்தை உங்களை படிக்க விட்டால் படியுங்கள் :). அனுபவம்.

 

மிகவும் விலாவரியான புகைப்படங்கள் அருமை. இதனைக் குறிப்பிட மறந்துவிட்டேன்.

 

//பின்னோக்கி said...
மிகவும் விலாவரியான புகைப்படங்கள் அருமை.//

ரிப்பீட்டுகிறேன்,

நானும் நாளைக்கு வருவேன், வந்தால் போன் பண்ணுங்க, என் நம்பர் இங்கே

 

நல்ல அனுபவம்.... படங்கள் அருமை... புத்தகப்பட்டியல் பட்டியல் பெரிசா இருக்கே...

 

புகை படங்கள் அருமை. சைதாபேட்டையில் ஒரு முறை சந்திக்கலாம் என அதி ப்ராதபன் சொல்லிட்டு இருந்தாரே அப்புறம் என்ன ஆச்சு

 

ஈரோடு கதிர் said...
//அழுக்க அழுக்க படிக்கணும். //

அலுக்க...

//


அவரு திரும்பத் திரும்பப் படிச்சு அழுக்காகுறதைச் சொல்றாரு :)

 

@ Chitra
ரொம்ப நன்றிங்க

@பின்னோக்கி

ஏன் பாஸ் இப்பவே பீதிய கிளப்புரிங்க ??

@சங்கர்

நாம கண்டிப்பா மீட் பண்ணுவோம் பாஸ்.

@ க.பாலாசி
நிறைய வாங்கணும்ன்னு நினைத்தேன் பாஸ். பார்க்கலாம் இன்னும் 3 நாட்களுக்குள் வேறு எதாவது வாங்க வேண்டும்

@மோகன் குமார்
கண்டிப்பா மீட் பண்ணுவோம் பாஸ் அடுத்த வாரத்தில். சைதை ஏரியால பதிவர்கள் மீட்டிங் ஒரு டிஜிட்டல் போர்டு மாட்டணும்.

@எம்.எம்.அப்துல்லா

அண்ணே உண்மையில் ஒரு புத்தகத்தை நான் 3 முறை படிப்பேன்.

 

புத்தகங்கள் படிச்சிட்டு விமர்சனம் எழுதணும் ஆமா.

 

அருமை நண்பர் ரோமியோ பாய்,
புத்தகம் வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்,அதை இரண்டு மூன்ரு முறை படிக்க வாழ்த்துக்கள், மேலும் மேலும் புத்தகம் வாங்கவும் வாழ்த்துக்கள்,
படங்களை ஸ்லைட் ஷோ போட்டவிதம் அருமை?
எப்படி போட்டீர்கள்?

 

@ விக்னேஷ்வரி
கண்டிப்பா எழுதுறேன்

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

தலைவரே இந்த லிங்க் போய் பாருங்க ஈஸியா பண்ணலாம்

http://picasa.google.com/support/bin/answer.py?answer=66969

 

நல்ல படிப்பாளி போல

வாழ்த்துகள்

3 தடவை தான் படிப்பியளா

இன்னும் படிங்க படிங்க ...

 

காமரூபக்கதைகள் சூப்பரா..