~~ROMEO~~

Everyday Starts with Happy :)

வால்பையனுடன் ஒரு சின்ன சந்திப்பு

நமது அருமை நண்பர் கேபிளார் தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் .

-----------------------------------------------------------------------------------------------
Nov 10 ஆம் தேதி நண்பர் வால்பையன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் தனியாக சந்திக்கும் முதல் பதிவாளர் நண்பர் வால்பையன்.

எங்கள் சந்திப்பு திடீர் என்று முடிவானது, அன்று காலையில் தான் நான் கரூர் செல்லும் வழியில் ஈரோடு வருவதாகவும் அப்போது சந்திக்க முடியுமா என்று அவரிடம் GTALKகில் கேட்டேன், கண்டிப்பாக சந்திக்கலாம் என்றார். அவரின் போன் நம்பர் கேட்டு குறித்து கொண்டேன், ஈரோடு வந்ததும் அவரது அலைபேசிக்கு கூப்பிட்டு பஸ் ஸ்டாண்ட்யில் வெயிட் பண்ணுவதாகவும் சொன்னேன் .

பஸ் ஸ்டாண்ட் வெளிய தீபா மெடிகல்ஸ் என்று ஒரு கடை இருக்கும் அங்க வெயிட் பண்ணுக கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன் என்றார்.

ஈரோடுக்கு நான் புதுசு அதும் இரவில் நான் எங்கு போய் தேடுவது என்கிற யோசனையில் தள்ளுவண்டிகாரர் ஒருவரிடம் அந்த கடை பற்றி கேட்டேன், அந்த Transformer பக்கதுல தான் இருக்கு பாருங்க என்றார். வால்பையனை சந்திக்கவேண்டும் என்று ஈரோடு சென்றால் பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருக்கும் தீபா மெடிகல்ஸ் பக்கத்தில் வெயிட் பண்ணவும். அதை அவர் சொல்லுவதற்கு முன்பே நீங்க செய்துவிட்டால் மனுஷன் ரொம்ப சந்தோஷ படுவார். அவர் சொல்லுவதற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அந்த மெடிக்கல் கடை சுமார் 25 வருடங்கள் அங்கு இயங்கி கொண்டு இருக்கிறதாம், அதனால் ஈரோடு வாழும் அனைத்து அன்பர்களுக்கும் இந்த கடையை நன்கு அறிந்து உள்ளார்கள் என்பதை தள்ளுவண்டிக்காரர் சொன்னார்.


சரியான இடத்திற்கு வந்து அடைந்தேன். நிமிடங்கள் ஓடி கொண்டே இருந்தது பத்து நிமிடத்தில் வருவதாக சொன்னவர் சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகுதான் வந்தார். வந்ததும் தன் பெயரை வால்பையன் என்று சிரித்த முகத்துடன் அறிமுகபடுத்தி கொண்டார், நானும் என்னை ரோமியோ பாய் என்றே அறிமுகபடுத்தி கொண்டேன். அவரின் வேலையை மற்றொருவரிடம் விட்டு வர லேட் ஆகிவிட்டது என்று சொன்னார்.

சரி வாங்க என்று அவர் பைக்கில் ஏற்றி கொண்டார் அப்போது மணி 9.45pm கிட்டதட்ட 30 நிமிடங்கள் நான் அவருக்காக அங்கு காத்து கொண்டு இருந்தேன். மாலை வேலை என்றால் அழகான பெண்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் ஆனால் இது இரவாச்சே அதும் மழை வேறு கொஞ்சம் கடுப்புடனே நின்று கொண்டு இருந்தேன்.

வண்டியில் ஏற சொன்னவர் எங்கே கூட்டி சென்றார் தெரியுமா ???? நீங்கள் நினைப்பது சரி "BAR" க்கு தான் நேராக சென்றோம். அங்கு அவரின் நண்பர்கள் இரண்டு பேர் எங்களுக்குகாக வெயிட் பண்ணிட்டு இருந்தார்கள். ஒருவர் தியாகு , மற்றோவர் கார்த்திக். கச்சேரி ஆரமிக்கலாம் என்று உள்ளே சென்றோம். நான் அதிகமாக தண்ணி அடிக்கமாட்டேன் , அடித்தாலும் நண்பர்கள் கூடும் போதும் மட்டுமே அதும் பீர் மட்டுமே ஒரு பாட்டில் அடிப்பேன். அதற்கே எனது உடம்பு தங்காது என்பது முக்கியமாக விஷயம்.


எனக்கு ஒரு பீர் என்று சொல்லி அமைதி ஆனேன் ( வீட்டிற்கு சென்று மனைவியிடம் வாங்கிகட்டி கொண்டு அமைதியாக இருந்தது வேறு :( ) . வால் மற்றும் அவரது நண்பர்கள் என்னென்னமோ ஆர்டர் செய்து கொண்டு இருந்தார்கள், அதை முடித்து பேச்சு சற்று வலை பக்கம் சென்றது. வால் மொக்கை அல்லது சிரியஸ் டைப் ஆள் என்று நினைத்து சென்றால் அதை மாற்றி கொள்ளுங்கள். மனுஷன் காமெடில கலக்குறார், இவரை விட இவரின் நண்பர் தியாகு வால்லை நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஓட்டு ஓட்டு என்று ஓட்டி கொண்டு இருந்தார். நீங்கள் வால்பையனை சந்திக்கும் போது அவரின் நண்பர் தியாகு பற்றி சில வார்த்தைகள் கேட்டு பாருங்கள், ஒரு விஷத்தை கண்டிப்பாக சொல்லுவர், அதை என்னிடம் சொன்னார் அப்போது தியாகு அலுத்து கொண்டே சொன்னார் " இதை நான் 20தாவது முறை கேக்குறேன் பாஸ்" . வால்பையன் சொன்னது கேட்டு எனக்கு தியாகுவை பற்றி இப்படியும் ஒரு மனிதரா ?? என்றே என்ன வைத்தது. அது என்ன மேட்டர் என்று என்னிடம் கேட்காதிங்க வால்பையன்னிடம் கேட்டு கொள்ளவும்.

மணி ஆகி கொண்டு இருந்தது , நான் அடிகடி எனது வாட்ச் பார்த்துகொண்டு இருந்ததை பார்த்து நண்பர் கார்த்திக் என்ன விஷயம் என்று கேட்டார். மனைவி எனக்காக வெயிட் பண்ணுவ நான் கிளம்பட்டுமா ?? என்றேன். வால் என்னை பஸ் ஸ்டாண்ட் கொண்டு வந்து விட்டார், பசி வேற வயற்றை கிள்ளியது. எங்கு ஹோட்டல் இருக்கும் என்று காமிக்கிறேன் வாங்க என்றார். இருவரும் நடந்து சென்றோம் பஸ் ஸ்டாண்ட் உள்ளே. நாங்கள் நடந்து செல்லும் வழியில் ஒரு போலீஸ் பூத் இருந்தது , அங்கே ஒரு இளம் பெண்ணை இரண்டு பெண் போலீஸ்காரர்கள் விசாரித்து கொண்டு இருந்தார்கள். அவர்களை கடந்து சென்ற பிறகு எங்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையை படித்து பாருங்கள்.

வால் : தல உங்களுக்கு phycology தெரியுமா ??
நான் : ஹ்ம்ம் கொஞ்சம் தெரியும் தல .
வால் : ஒரு பொண்ணு இந்த டைம்ல ரெண்டு போலீஸ்காரங்க விசாரிக்கும் போது வாயில பபுள்கம் மேன்னுடே பதில் சொன்னால் என்ன அர்த்தம்??
நான் : ITEM !!
வால் : ஹா ஹா ஹா " க க க போ"


அவரை சந்தித்தற்கு சாட்சியாக ஒரு புகைப்படம் எடுத்து கொண்டேன், ஆனால் பாருங்க கேமராவை எனது அக்கா வாங்கி சென்றுவிட்டார்.

முதல் சந்திப்பு அருமையாக இருந்தது நிறைய பேச வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் நேரம் தான் எனக்கு இல்லை. இன்னொரு முறை அவரை சந்தித்தால் அந்த குறையை தீர்த்து கொள்ள வேண்டும்.