~~ROMEO~~

Everyday Starts with Happy :)

ஆப் சென்சுரி..... :) , Paa மற்றும் ஆரியா - 2




அட கொக்காக மக்கா , நானும் 50 பதிவ எழுதிட்டேனா என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. அப்படி இப்படின்னு ஏதும் உருப்படியா எழுதல ஏதோ எழுதி இருக்கிறேன் அவ்வளவு தான் இவ்வளவு நாட்களாக என்னோட பதிவை படிச்சி பின்னுடம் போட்டு என்னை வாழ வைத்துகொண்டு இருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி நன்றி சாமியோ...

---------------------------------------------


நேற்று "பா" படத்தை பார்த்தேன் என்ன ஒரு நக்கல் , நையாண்டி, நடிப்பு என்று படம் மனசை அள்ளுது. எந்த இடத்திலையும் படம் சோர்வு அடையாமல் செல்கிறது. ஆரோ என்கிற கதாபாத்திரத்தில் அமிதாப் நடிப்பு அருமை. படத்தின் ஆரம்பத்தில் ஆரோவை அமிதாப் எப்போதும் போல நடித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தானே பார்த்தேன், சிறிது நேரத்தில் அமிதாப் மறந்து போக வைத்துவிடுகிறார் அவரின் நடிப்பால். படத்திற்கு ஏன் "பா" என்று வைத்தார்கள் என்று தெரியவில்லை, "மா" என்று வைத்து இருக்கலாம் , அபிஷேக்விட வித்யாபாலன் தான் ஆரோவை எல்லா வகையிலும் தாங்குகிறார். இளையராஜா இசை மென்மையாக எல்லா இடத்திலையும் மனதை ஆட்கொள்கிறது, விக்ரமன் படங்களில் ஒரே ஒரு தீம் மியூசிக் வைத்து எல்லா இடத்திலை அதையே போட்டு வைப்பார். அதே போன்று தான் இந்த படத்தின் தீம் மியூசிக் எல்லா இடங்களிலயும் வருகிறது. சோகம் என்றாலும் சரி, சந்தோசம் என்றாலும் சரி.

அமிதாப் நிறைய அவார்ட் வாங்க போறார் என்பது நிச்சயம்.

--------------------------------------------------------

ஆர்யா - 2 கேபிளார் விமர்சனத்தை படித்து பார்த்து கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று பார்த்த படம். சும்மா சொல்ல கூடாது படம் டாப் கிளாஸ்.

அல்லு அரவிந்த் நடிப்பு சூப்பர். எல்லாவற்றையும் செய்து விட்டு ஒண்ணுமே செய்யாததை போல இருக்கும் உலகமாக கேடி. காஜல் நடிப்பு கூட சூப்பர், திடிர் திடிர் என்று எக்ஸ்பிரஷன் மாத்தி நம்மை ஜொள்ளு விட வைக்கிறார். (ஹ்ம்ம் ரொம்ப அழகா இருக்கா பா )

படத்தை தூக்கி நிறுத்துவது திரைக்கதை தான். அடுத்து என்ன சீன் வர போகுதுன்னு நம்மளால கணிக்கவே முடியாது அந்த அளவுக்கு டக்கு டக்குன்னு மாறிட்டே இருக்கு கதையின் ஓடம்.

கண்டிப்பாக படத்தை பாருங்க உங்களுக்கு இந்த கேடியை பிடிக்கும் ..

12 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்

 

//ரொம்ப அழகா இருக்கா பா

ரெண்டு பட விமர்சனத்தையும் ஒரே வரியில..அருமை...

50 க்கு வாழ்த்துக்கள்.... சீக்கிரமே சென்சுரி போடுங்க..

 

@ சின்ன அம்மிணி ..

நன்றிங்க

 

@ பின்னோக்கி

ரொம்ப நன்றி தலைவரே ..

 

Hi friend this is vennilla here.. ur doing a really good job.. can we exchange links..

 

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் !!!

 

@ பூங்குன்றன்.வே

நன்றி தலைவரே ..

 

அருமை நண்பர் ராஜராஜன் அருமையாக சொன்னீர்கள்,பா பார்க்கணும்

 

அரை சதம் அடித்தமைக்கு பாராட்டுக்கள்

 

ரோமியோ .. சொல்லவேயில்ல நேத்துகூட.. வாழ்த்துக்கள்.. மேலும் பல நூறாயிரங்கள் பெறவும் வாழ்த்துக்கள்.

 

@ Cable Sankar

இதுக்குதான் தல அடிகடி இந்த சைடு வந்துட்டு போகணும்ன்னு சொல்லுறது. வாழ்த்துகளுக்கு நன்றி . .

 

வாழ்துக்கள் தல

பா படம் எனக்கும் ரம்ப்ப புடிச்சிருந்துது
ராசா வாய்ப்பே இல்ல வழக்கம் போல...

நானும் கேபிளார் பதிவுல படிச்சேன்
ஆனாலும் ஆர்யா புடிக்காத்ததால ஆர்யா 2 பாக்கமாட்டேன்.

ஆனா வில்லேஜ்லு வினாயக்கூடு வேணாபாப்பேன் இதுவும் அவர் ரெகமண்டுதான்.

ஏன்னா வினாயக்கூடு,ஹேப்பிடேய்ஸ் பாத்ததுல இருந்து சோனிய ரசிகனாயிட்டேன் :-))