~~ROMEO~~

Everyday Starts with Happy :)

பிட் ...

இந்த பதிவுக்கு ஏன் பிட்ன்னு பேரு வச்சேன்னு கடைசில சொல்லுறேன், அதுக்காக கடைசி வரிக்கு உடனே போயிடாம முழுவதும் படிங்க.

கொஞ்ச நாளுக்கு முன்பு விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி தன் கணவர் அவரின் பெயரை சொல்லி கூப்பிடுவது இல்லைன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். அவரின் கணவரோ ரொம்ப சாதரணமா பதில் சொன்னார் நான் அவளின் பெயரை சொல்லி சில நேரங்களில் கூப்பிடுறேன். அவரு என்னோட முழு பெயர் சொல்லி கூப்பிடுவது இல்லை, ஒருவேளை எனது பெயர் அவருக்கு பிடிக்காமல் இருக்கும் என்றார் அந்த பெண்மணி. அவரின் கணவரோ ஆமாம் என்பதா இல்லை என்பதா?? ஏதும் சொல்லாமல் முழித்தார். உங்கள் முழு பெயர் என்ன என்று கோபிநாத் கேட்க அதுவரை இருந்த கவலையை மறந்து சிரித்து கொண்டே சொன்னார்.

இந்த வாரத்தில் ஒரு நாள் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு போயிட்டு இருந்தேன், ஒரு கடைல தினகரன் ஹெட்லயன்ஸ் பேப்பர் கொட்டை எழுத்துல ஒரு நியூஸ் போட்டு இருந்துச்சு, படிச்ச உடனே சிரிப்பு அடக்க முடியல. அதே சமயம் அந்த நியூஸ் அவ்வளவு முக்கியமான்னு தோணுச்சு, நாட்டுல எவ்வளவோ நடக்குது அதை எல்லாம் விட்டுட்டு இதை போட்டு இருக்காங்களே என்கிற ஆதங்கம் வந்தது. சன் குழுமத்தின் ஒரு அங்கமான அந்த பத்திரிகைக்கு எப்படி விளம்பரம் பண்ணினால் விற்பனை ஜோரா நடக்கும் என்று நன்றாக தெரியும் அதை அன்று பார்த்து திரும்ப தெரிந்துகொண்டேன். அந்த மேட்டர் என்னன்னா ..

" ஷகிலாவுக்கு திருமணம் "

இப்ப தெரிஞ்சி இருக்கும் ஏன் இந்த பதிவுக்கு பிட் என்கிற பெயர் வைத்தேன் .

அந்த பெண்மணியின் பெயர் ஷகிலா பானு, அவரின் கணவர் இவரை பானு என்று தான் கூப்பிடுகிறார்.

டிஸ்கி:- மக்கா தயவுசெய்து ஷகிலாக்கு கல்யாண வாழ்த்துகள் என்று பின்னுடத்தில் சொல்லிடாதிங்க.

11 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

மக்கா ஷகிலாக்கு கல்யாண வாழ்த்துகள் :))))))))

 

இந்த பதிவு சூப்பர்.

 

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
வாங்க தலைவரே .. உங்க வேலைய செவ்வனே செஞ்சி முடிச்சிடிங்க ... நீங்க ஆரம்மிசிடிங்க அடுத்தது யாரோ ??

@ சின்ன அம்மிணி

யப்பா தப்பிச்சேன் ..

 

கலையுலக பொற்கொடி ஷகிலாவுக்குத் திருமண வாழ்த்துக்கள் !!

அதை நேரத்தில் உலகுக்கு அறிவித்த அண்ணன் கார்த்திகேயனுக்கு எங்கள் நன்றி !!

 

ஆகா பத்த வச்சாச்சு பரட்ட

நல்லாருக்கு நல்வாழ்த்துகள்

 

இதுவரை 5 பேர் ஷகிலா திருமணம் பற்றி பதிவு எழுதியிருக்காங்க. நீங்க 6 வது.

அவரும் ஒரு பெண் தானே..

ஷகிலாவுக்கு கல்யாண வாழ்த்துக்கள்.

(நுணலும் தன் வாயால் மாதிரி ரோமியோ தன் எழுத்தால் :) )

 

அநியாயம்..அக்கிரமம்.

நீங்க ஷகிலா ரசிகர்ன்னு எங்களுக்கு தெரியும். தைரியமா கல்யாண வாழ்த்து சொல்ல வெட்கப்பட்டுகிட்டு, எங்க உசுப்பேத்தி, நிறைய வாழ்த்துக்கள பின்னூட்டமா வாங்கி, வந்த பின்னூட்டங்கள நாள் பூரா படிச்சு ஆனந்தப்படுற உங்க டெக்னிக்குக்கு நாங்க பழி ஆகிட்டோம்.


நல்லாயிருங்க.

 

@ Seemachu

\\உலகுக்கு அறிவித்த அண்ணன் கார்த்திகேயனுக்கு//

இந்த அராஜகத்தை நான் எதிர்கிறேன் . பதிவை எழுதியது நான் பாராட்டுகள் வேறு ஒருவருக்கா ?? அகில இந்திய ஷகிலா ரசிகர் மன்ற தலைவராக கார்த்திகேயன் ஒழிக .. ஹா ஹா ஹா

 

@ cheena (சீனா)

ஏதோ என்னால முடிந்தது தலைவரே ..

 

@ பின்னோக்கி

எங்கும் நான் ஷகிலாவை தப்பாக நான் ஏதும் எழுதவில்லையே . அவர் பெண்ணாக இருப்பதினால் தான் ஆண்கள் ரசிக்கிறார்கள், அவருக்கு கல்யாணம் என்பதை கொட்டை எழுத்தில் ஆச்சிட்டு இருந்த தினகரன் பத்திரிகையின் விளம்பரயுக்தி பற்றியும் ஒரு பெண் தனது பெயரை தன் கணவன் முழுவதுமாக சொல்லி கூப்பிடுவது என்கிற ஆதங்கத்தை தான் எழுதி இருக்கிறேன். நுணலும் தன் வாயால் கெடும் என்கிற பழமொழி இங்க எதுக்கு ?? அதும் என்னோட எழுத்துக்களை ஏன் இதனுடன் ஒப்பிட்டு எழுதணும் ?? நான் கெட்டு போகுற அளவுக்கு ஏதும் எழுதவில்லையே.. எனக்கு ஷகிலாவ சுத்தம்மா புடிக்காது. புடிச்சி இருந்தா நான் ஏன் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி பின்னுடம் போடவேண்டாம் என்று சொல்லுறேன் ??

 

சீமாச்சு ரொம்ப நன்றிங்க சிங்கம்.
-------------
பின்னோக்கி கலாய்க்கிறார்ங்க , அதுக்கு நீங்களும் அவரை கலாய்ங்க,
-------------
என்ன தல மகனைப்பார்க்க எப்போ பயணம்?