~~ROMEO~~

Everyday Starts with Happy :)

திரும்பி பார்க்கிறேன் - 20/12/2009


மனைவி, மகனை பார்க்க ஊருக்கு போயிட்டு இருந்தேன், கரூர் கிட்ட வரும் போது எனக்கு எதிரில் இருந்த ஒரு அன்பர் என்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்று கேட்டார், நானும் சரி என்றேன்.

நீங்கள் எதற்காக வாழ்கிரிகள் ?? என்றார்.

என்னடா ஊருக்குள்ள இன்னும் கால் அடி எடுத்து வைக்கல அதுக்குள்ள 71/2 நம்மள தேடி வருதேன்னு நினைத்தேன்.

எதுக்காக கேக்குறிங்க ?

நான் ஒரு ப்ரொஜெட் பண்றேன் அதுக்காக வேணும் என்றார். இதுவரை 65 நபர்களிடம் இந்த கேள்வியை கேட்டாராம் அதில் 4 வயது ரொம்ப ஏழ்மையான பையன் சொன்ன பதிலும் 65 வயது ரொம்ப பணக்காரர் ஒருவர் சொன்ன பதிலும் ஒரே மாதிரி இருக்கு, வாழ்கையின் அர்த்தம் தெரியாமல் பதில் சொன்ன 4 வயது பையனும் , வாழ்ந்து முடித்த 65 வயது பெரியவரும் பதில் எப்படி ஒன்றாக இருக்கும் என்று நினைத்து பாருங்கள். நீங்க இப்பவே பதில் சொல்ல வேண்டும் அவசியம் இல்ல, என்னோட நம்பர் தரேன் அதுக்கு SMS மட்டும் பண்ணுங்க போதும் என்று அவரின் நம்பர் குடுத்தார்.

சார் நீங்க கேட்ட கேள்வி அருமையானது தான், இந்த கேள்வியை வேறு மாதிரியும் பார்க்கலாமா ?

எந்த மாதிரி ?

நீங்க எதற்கு பிறந்திர்கள்ன்னு வச்சுக்கலாமா?

அப்படி கூட வசிக்கலாம்.

அப்ப இந்த கேள்வியை எனது அப்பா , அம்மாவிடம் தான் நீங்க கேட்கணும், அவங்க என்ன சொல்லுவாங்க அவங்க அப்பா அம்மாவிடம் தான் இந்த கேள்வியை கேட்கணும்ன்னு, இப்படியே போன தலைமுறை, அதற்கு முந்தின தலைமுறைன்னு போயிட்டு இருக்குமே தவர பதில்வராது.

சற்று நேரத்தில் அவரின் பேச்சு வேறு பக்கமாக மாறியதை புரிந்து கொண்டேன். இயேசு பற்றி ரொம்ப சில்லாகி பேசினார், அவர் கண்டிப்பாக இந்த பூமியில் திரும்ப உயிர் பெறுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றார். நான் நாத்திகனும் அல்ல ஆத்திகனும் அல்ல, கோவில்க்கு போகணும்ன்னு தோணுச்சுனா போவேன், வேண்டாம்ன்னு தோணுச்சுனா போகமாட்டேன், ஒரு தடவை கோவிலுக்கு அருகில் சென்று ஏனோ போக பிடிக்காமல் எனது மனைவியை மட்டும் சாமி கும்பிட்டுவா என்று அனுப்பிவிட்டு நான் வெளியில் இருந்தேன். அப்படிபட்ட ஆளு நான் என்கிட்ட பிரசங்கம் பண்ணுறது எல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு அவருக்கு தெரியல. சிரிது நேரத்தில் கரூர் ஸ்டேஷன் வந்தது வெளியில் வந்ததும் நான் செய்த முதல் வேலை Xavier என்கிற பெயரை எனது மொபைல இருந்து அழித்தது தான்.

----------------------------------------------------------------------------------------

பர பர என்று ஒரு 1000 சரம் பட்டாசு வெடிச்ச மாதிரி இருந்துச்சு இந்தியா vs ஸ்ரீலங்கா முதல் கிரிக்கெட் மேட்ச். நினைச்சு பார்க்க முடியாத ஸ்கோர் சேஸ் பண்ண ஸ்ரீலங்கா வீரர்கள் தன்னம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியாது. தில்ஷன் ஆட்டத்தில் அனல் பறந்தாலும் சங்ககரா ஆட்டத்தில் தான் இடியுடன் கூடிய மின்னல் இருந்துச்சு. ஒரு கட்டத்துல வெறுத்து போய் சேனல் மாதி வேற சேனல் பார்த்தேன் திரும்ப neo sports சேனல் பார்த்தா இந்த இரண்டு பேரும் அவுட். இது நல்ல இருக்கேன்னு கொஞ்சம் நேரம் வேற சேனல் பார்க்கிறது , பிறகு கிரிக்கெட் சேனல்க்கு தாவ்றதுன்னு இருந்தேன், நினைத்த மாதிரியே விக்கெட் போய்ட்டு இருந்துச்சு, இந்தியாவும் ஜெய்ச்சிடுச்சு.அடுத்த மேட்சுல இதே மாதிரி பண்ணினேன் ரிமோட் போச்சு, இந்தியா தோத்துடுச்சு. இதுல இருந்து ஒண்ணு தெரியுது ரிமோட்க்கும் கூட இந்தியன் டீம் நிலைமை தெரிஞ்சி இருக்கு. அதுக்கே பொறுக்காம பனால் ஆகிடுச்சு
.

-----------------------------------------------------------------------------------------------



மேலே இருக்கும் படத்தை கொஞ்சம் உற்று பாருங்கள், மொபைல்ல கிளிக் பண்ணிய இடம் லயோலா கல்லூரி முன்பு, சாரு புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ள ஷேர் ஆட்டோல போயிட்டு இருந்தேன் அப்ப தான் இந்த பசங்க அபாயம் தெரியாமல் ரொம்ப மும்மரமா தம் அடிச்சிட்டு பேசிட்டு இருந்தாங்க. வீட்டில் உபயோகபடுத்தும் மின்சாரத்தை தொட்டாலே நாம காலி இவங்க கால் வச்சிக்கிட்டு இருக்குற இடம் ஒரு ஜங்ஷன் பாக்ஸ் உயர் அழுத்தம் உள்ள மின்சாரம் இருக்கும் இடம் ஷாக் அடிச்சிதுன்னு வைங்க ஆளே கருகி போய்டுவான். இதுல இன்னொரு கொடுமை அந்த மஞ்சள் நிற தார்பாய் இடத்துக்கு கீழே ஒரு டீ கடை இருக்கு.

ஒரு வார்த்தை இருக்கு படிச்சவனோ இல்ல படிக்காதவனோ சொல்லுவான் ஏதாவது ஒரு இடத்தில இதை கேட்கலாம், அது என்னனா

"படிச்சி இருக்கல அறிவு இல்ல ?? "

இதை இவர்களுக்கு நான் இங்கு சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன்.

------------------------------------------------------------------------------------

தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஒரு பாடல் இருக்கிறது " என் ஜன்னல் வந்த காற்றே " ரொம்ப மெலோடியா தொடங்கும் , அப்படியே வெஸ்ட்டன் அப்படியே செம குத்து . கேக்கும் போதே ரொம்ப வித்தியாசம் இருக்கு யுவன் மியூசிக். ரோஷினி, பிரியா , திவ்யா பாடி இருக்காங்க அவங்க அவங்க ட்ரக்கு ஏத்த மாதிரி நிறைய வித்தியாசதோட பாடி இருக்காங்க. மறக்காம கேளுங்க அப்பறம் அதை மறக்க மாட்டிங்க. 3 விதமான பெண்கள் , 3 விதமான பீட்ஸ் . கேட்கும் போதே தோணுது படத்தில் வரும் அந்த 3 பெண்களின் கேரக்டர் ஒரு பாடலில் சொல்லிவிட்டார்கள் என்று .




21 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

அருமை நண்பர் ராஜராஜன்,
சின்ன பசங்களுக்கு நாம புத்தி சொன்னா புடிக்காது, அந்த வயசில நமக்கு பிடித்ததா?

எப்போதும் அனானி நபருக்கு நம்பர் தரவோ வாங்கவோ செய்யாதீகள்.

நமக்கு பிடித்தமாதிரி வழிபடுவது சிறந்தது.மதத்தில் கட்டாயமே இருக்கக்கூடாது.

ஜூனியர் நலம் தானே?

 

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

தலைவரே அபாயம் தெரிந்தும் இவர்கள் எதற்காக இந்த மாதிரி நிற்கிறார்கள் என்று தெரியவில்லை . மகன் சூப்பரா இருக்கிறான் .

 

//அப்படிபட்ட ஆளு நான் என்கிட்ட பிரசங்கம் பண்ணுறது எல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு அவருக்கு தெரியல.//

:)

அந்த நபருக்காக நீங்கள் ஏன் உங்கள் பெயரை அழிக்கணும் :)

 

Xavier என்பது அவரின் பெயர்ங்க .

 

ம் இது போன்று பலர் திரிகின்றனர். அப்பறம் தீராத விளையாட்டு பிள்ளை பாடல்களை இப்பதான் தரவிறக்கம் செய்தேன்...

 

@ புலவன் புலிகேசி

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் குறிப்பிட்டு இருக்கும் பாடலை கேட்டு பாருங்க செம கிளாஸ்ஹா இருக்கும்.


உங்களுக்கும் இம்சை அரசன் புலிகேசிக்கும் ஏதும் தொடர்பு இல்லையே ??

 

வண்க்கம் நண்பரே! இப்போதான் வரேன் உங்க கடைப்பக்கம். இனி தவறாமல் வருவேன்.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

 

அந்த முதல் விஷயம் எனக்கு இருமுறை நடந்திருகிறது :-)

 

பதிவு நல்லா இருக்கு ரோமியோ.. நீங்க சொன்ன அந்த பாடலும்.. :)

 

கரூர் எப்படியிருக்கு..

கேள்வி நல்லாயிருந்துச்சேன்னு நினைச்சேன். ஓ.. அது தான் விஷயமா ? :).

 

நிறைய எழுத்துப்பிழை. முதலில் அதை சரி பண்ணுங்க. அப்பறம் அறிவுரை சொல்லலாம்

 

அருமையான நடையும் சிந்தனையும் ராஜராஜன்!

முரளி தளத்தில் உங்கள் பின்னூட்டம் பார்த்து வந்தேன்.இவ்வளவு அழகான எழுத்தை இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டோமே என தோன்றியது.

எதிர்பார்ப்புகள் அற்று இயங்கிக்கொண்டே இருங்கள்.ஆத்ம திருப்தி பதிவுகள் என எடுத்து கொண்டு..

இதை எல்லாம் தாண்டி..

உண்மையில் அவ்வளவு திருப்தியான எழுத்து!

வாழ்த்துக்கள் மக்கா!

 

//தொட்டாலே நாம காலி இவங்க கால் வச்சிக்கிட்டு இருக்குற இடம் ஒரு ஜங்ஷன் பாக்ஸ் உயர் அழுத்தம் உள்ள மின்சாரம் இருக்கும் இடம் ஷாக் அடிச்சிதுன்னு வைங்க ஆளே கருகி போய்டுவான். இதுல இன்னொரு கொடுமை அந்த மஞ்சள் நிற தார்பாய் இடத்துக்கு கீழே ஒரு டீ கடை இருக்கு.//

இவங்களுக்கு இது பொருந்தும்...

"படிச்சி இருக்க இல்ல..அறிவு இல்ல ?? "

நல்ல இடுகை....

 

@ முரளிகுமார் பத்மநாபன்

உங்கள் வருகைக்கு நன்றி , நான் உங்கள பாலோயர் ஆகி ரொம்ப நாள் ஆகிவிட்டது.

Same Blood .. both are escape ..

 

@ அன்புடன்-மணிகண்டன்

ரொம்ப நன்றி மணி .

 

@ பின்னோக்கி

கரூர் நல்ல இருக்கு தலைவரே. ரொம்ப நாள் அச்சோ நீங்க அங்க போய் ??

 

@ Anonymous ..

எழுத்து பிழை இருந்தால் அறிவுரை சொல்ல கூடாத என்ன ?? அனானிக்கு எல்லாம் கமெண்ட் பண்ணுறத இப்பொது இருந்து நிப்பாட்டி கொள்கிறேன்

 

@ பா.ராஜாராம்

ரொம்ப நெகிழ்ச்சியான பின்னுடம் நண்பரே, உங்கள் கருத்துக்கு நன்றி

\\இவ்வளவு அழகான எழுத்தை இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டோமே என தோன்றியது//

உண்மையாலுமா ??

 

@ க.பாலாசி

நன்றி தலைவரே ..

 

அந்த மொபைல் போட்டோ சமாச்சாரம், என்னத்த சொல்லி என்னத்த அவங்க கேக்க......
பாடலின் ரசிப்பு தன்மை அருமை. நன்றி.

 

//Blogger Romeoboy said...

@ புலவன் புலிகேசி

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் குறிப்பிட்டு இருக்கும் பாடலை கேட்டு பாருங்க செம கிளாஸ்ஹா இருக்கும்.


உங்களுக்கும் இம்சை அரசன் புலிகேசிக்கும் ஏதும் தொடர்பு இல்லையே ??//

ஹி ஹி ஹி அவுரு என்னோட குருநாயரு