~~ROMEO~~

Everyday Starts with Happy :)

2009 எனது பார்வையில் - தொடர் விளையாட்டு

2009 என்னை எழுத தூண்டிய வருடம். படிப்பதில் இருந்த ஆர்வத்தை எழுத்தில் திருப்பிய வருடம். படிப்பதை ஒரு தவம் போல கழித்த நாட்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல, வலையுலகம் என்பது மிக பெரிய கடல் அதில் மிக அதிகமாக படித்துகொண்டு இருந்தேன். எங்கோ கிடைத்த ஒரு லிங்க் மூலம் படிக்க ஆரமித்த பழக்கம் என்னை ஒரு அடிமை போல ஆக்கிவிட்டது. யார் என்று தெரியாத பெரிய பெரிய எழுத்தாளர்களை ஒரு சேர வலைத்தளத்தில் வாசித்த நாட்கள் அதிகம். சாரு , ஜெயமோகன், ராமகிருஷ்ணன் என்று ஒரே நாளில் பலரின் எழுத்துகளை படித்தது ரொம்ப வித்யாசமான சுவையாக இருந்தது. புத்தகத்தின் மீது இருந்த மோகம் என்னை ஆட்டி படைத்த நாட்கள் அதிகம், ட்ரெயின் பாஸ் வாங்க வைத்து இருந்த பணத்தை புத்தகம் வாங்க செலவிட்டேன். வரலாறு புத்தகங்களை தேடி தேடி படித்த நாட்கள் எண்ணில் அடங்க முடியாததாக இருக்கிறது. பின்நவினத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல் படித்த புத்தகம் சிலது.


என்ன எழுதுவது என்றே தெரியாமல் எழுத வந்தவன். வாசிப்பு அனுபவமே இருந்த எனக்கு எப்படி எழுதுவது என்றே தெரியாமல் மனம்போன போக்கில் டைப் அடித்த நாட்கள் அதிகம். கொஞ்சம் போல் தெரிந்த எழுத்து நடையை எழுதுவதற்குள் சிரம்மப்படேன் ஆரம்பத்தில். சொந்த கதை, சோக கதை என்று சிலது எழுதினாலும் சிறுகதை எழுதுவதற்கு மிகவும் சிரமம் ஆகா இருக்கிறது எனக்கு. எப்படி எழுதினாலும் ஒரு பக்கத்துக்குள் ஒரு கதையை கொண்டு வர முடியவில்லை. பார்க்கலாம் 2010 ஆம் வருடம் எழுதுவேனா என்று. யார்றேன்று தெரியாமல் நண்பா, சகா, தலைவரே, தல, அண்ணே என்று அன்புடன் அழைக்கும் நண்பர்கள் நிறைய சேர்ந்துவிட்டன. உரிமையுடன் தவறை சுட்டி காட்ட, வயது விதியாசம் பார்க்காமல் கிண்டல் பண்ண பெரும் உதவி புரிந்தது பின்னுடமிடும் இடம்.

சொந்த வீடு கட்டியது, மகன் பிறந்தது என்று சந்தோசமாக இருந்த நாட்கள் அதிகம். மற்றவற்றை பார்த்தால் (+) (-) சரி விகிதத்தில் இருக்கிறது.

என்ன இருந்தாலும் 2009 ஆண்டு என்பது எனக்கு படிப்பதிலும் எழுதுவதிலும் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது.

--------------------------------------------------------------------------------------------------------

ஒரே கேள்விக்கு பலரின் வித்தியாச பதிலை படித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது . யாரவது இந்த விளையாட்டை ஆரமிப்பார்கள் என்று பார்த்தேன் ஒருவரும் முன் வரவில்லை . அதனால் இதை நானே தொடங்குவது என்று முடிவு செய்தேன்.

கேள்வி: 2009 எனது பார்வையில்

விதிமுறை :
ஒருவர் இரண்டு பதிவர்களை மட்டுமே அழைக்க வேண்டும்


நான் அழைக்க விரும்புவது

பரிசல்காரன் - இதை நன்றி கடன் என்று கூட சொல்லலாம், இவர் என்னை ஒரு தொடர் விளையாட்டு மூலம் நிறைய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
ஒரு சிறு வெளிச்சம் இருந்தால் போதும் நீங்கள் முன்னேறிவிடலாம் என்கிற வாசகத்துக்கு பொருந்தும் பெரிய வெளிச்சம் .

வால்பையன் - இவரை நான் சந்தித்ததை ஒரு பதிவாக எழுதி இருக்கிறேன். ரொம்ப அருமையான மனிதர். எதிர் விளையாட்டு விளையாட பிடிக்கும். வாரத்துக்கு ஒன்று தான் என்றாலும் பதிவு நச்சுன்னு இருக்கும்.
எனது பதிவுகளில் ஒரே ஒரு பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வாங்க காரணமாக இருந்தது வால்பையனுடன் ஒரு சின்ன சந்திப்பு என்கிற பதிவு.


18 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

அன்பின் ரோமியோ

2009 நல்ல ஆண்டாக - வீடு கட்டி மகனும் பிறந்து - சென்றது மகிழ்ச்சி

மேன்மேலும் வாழ்வில் உயர நல்வாழ்த்துகள்

 

பிறக்க இருக்கும் ஆண்டு மேலும் மேலும்..........சிறப்பாக் அமைய வாழ்த்துக்கள்.

 

வரும் புத்தாண்டில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ரோமியோ... :)

 

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்,
உங்க பதிவ தமிலிஷ்ல இணைங்க பாஸ்.
வால்பையன் எழுதுவதை படிக்க ஆவல்.

 

ரோமியோ...

அழைப்பிற்கு நன்றி. எழுதுகிறேன் - விரைவில்!

 

அன்பிற்கு நன்றி தல!

நிச்சயமாக எழுதுகிறேன்!

 

2009 - வீடு மற்றும் வாரிசு.
2010 - மேலும் பல ஆசிர்வாதங்களுடன்.......
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

2010 மிக வெற்றிகரமான ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்.

நானும் இந்த வருடம் தான் எழுத ஆரம்பித்தேன். உங்கள் அளவுக்கு நான் படிக்கவில்லை. படிக்க வேண்டும் நிறைய.

 

@ cheena (சீனா)

ரொம்ப நன்றி சார், உங்களை போல சிலர் இடும் பின்னுடம் தான் எனக்கு ரொம்ப ஊந்து கோலாக இருக்கிறது .

 

@ நிலாமதி

ரொம்ப நன்றி அக்கா

 

@ அன்புடன்-மணிகண்டன்

ரொம்ப நன்றி மணிகண்டன். உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் .

 

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்


நன்றி பாஸ் . உங்களின் அறிவுரை படிதான் நான் தமிழ்மணத்தின் ஓட்டு பட்டறையை இணைத்தேன் . சீக்கிரம் தமில்ஷ்ல் இணைகிறேன் .

நானும் வால் பதிவை எதிர்பார்கிறேன் .

 

@ பரிசல்காரன்

உங்களின் பதிவை ரொம்ப எதிர்பார்கிறேன்

 

@ வால்பையன்

2010 தொடங்குவதற்கு முன்னதாக எழுதவும் பாஸ்.

 

@ Chitra

உங்களின் வாழ்த்துகளுக்கும் , ஆசிர்வததுக்கும் நன்றி மொக்கை தலைவியே .. ஹி ஹி ஹி

 

@ பின்னோக்கி

உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றிங்க, படிப்பதில் இருக்கும் சுகமே தனி தலைவரே. நான் வாசிக்க நினைக்கும் புத்தகங்களை பட்டியலிட்டால் 100 மேல் தாண்டும்.

 

2009 ம் ஆண்டில் உங்களுக்கு கிடைத்த வெற்றியை போல

2010 மிக வெற்றிகரமான ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்.

 

பிறக்க இருக்கும் ஆண்டு மேலும் மேலும்..........சிறப்பாக் அமைய வாழ்த்துக்கள்.